சூன் 19
நாள்
(ஜூன் 19 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 19 (June 19) கிரிகோரியன் ஆண்டின் 170 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 171 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 195 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது.
- 1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார்.
- 1306 – பெம்புரோக் பிரபுவின் படைகள் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை மெத்வென் சமரில் தோற்கடித்தன.
- 1586 – வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் தோல்வியடைந்ததை அடுத்து ஆங்கிலேயக் குடியேறிகள் ரோனோக் தீவில் இருந்து வெளியேறினர்.
- 1850 – நெதர்லாந்து இளவரசி லூயீசு சுவீடன்-நோர்வேயின் பிற்கால மன்னர் இலவரசர் கார்லை மணந்தார்.
- 1862 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது.
- 1867 – மெக்சிகோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1875 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக எர்செகோவினா எழுச்சி ஆரம்பமானது.
- 1903 – பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக பெனிட்டோ முசோலினி பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டார்.
- 1910 – அமெரிக்காவில் வாசிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
- 1943 – டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவுக்கும் சப்பானுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் இடம்பெற்றது.
- 1949 – முதலாவது தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
- 1953 – பனிப்போர்: அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு யூலியசு, எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1961 – குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1964 – மனித உரிமைகள் சட்டம் அமெரிக்க மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1985 – மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் சல்வடோர் படையினராக வேடமிட்டு சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 – எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- 1988 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.
- 1990 – உருசிய-சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1991 – அங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
- 2007 – பக்தாதில் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர், 218 பேர் காயமடைந்தனர்.
- 2009 – வடமேற்குப் பாக்கித்தானில் தாலிபான்களுக்கு எதிரான இரா-கி-நிசாத் இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.
- 2012 – விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். 2019 இல் கைது செய்யப்படும் வரை அங்கேயே அவர் தங்கியிருந்தார்.
பிறப்புகள்
தொகு- 1566 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (இ. 1625)
- 1595 – குரு அர்கோவிந்த், 6வது சீக்கிய குரு (இ. 1644)
- 1623 – பிலைசு பாஸ்கல், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1662)
- 1861 – ஒசே ரிசால், பிலிப்பீனிய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1896)
- 1906 – எர்னஸ்ட் செயின், செருமானிய-பிரித்தானிய உயிர் வேதியியலாளர் (இ.1979)
- 1911 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் 2வது பிரதமர் (இ. 1973)
- 1918 – கே. சி. நடராஜா, இலங்கை குற்றவியல் சட்டவறிஞர்
- 1925 – ஜெகசிற்பியன், தமிழக எழுத்தாளர் (இ. 1978)
- 1928 – ப. கிருட்டிணமூர்த்தி, இந்திய திராவிட மொழியியல் ஆய்வாளர் (இ. 2012)
- 1935 – சு. ப. திண்ணப்பன், தமிழக-சிங்கப்பூர் தமிழறிஞர்
- 1945 – ரதொவான் கராட்சிச், செர்பிய-பொசுனிய அரசியல்வாதி, போர்க் குற்றவாளி
- 1945 – ஆங் சான் சூச்சி, நோபல் பரிசு பெற்ற பர்மிய அரசியல்வாதி
- 1945 – டோபியாஸ் உல்ஃப், அமெரிக்க எழுத்தாளர்
- 1946 – மா. சந்திரமூர்த்தி, தமிழக எழுத்தாளர்
- 1947 – சல்மான் ருஷ்டி, இந்திய-ஆங்கிலேய எழுத்தாளர்
- 1951 – ஐமன் அழ்-ழவாகிரி, எகிப்திய மெய்யியலாளர், தீவிரவாதி
- 1959 – கிரிஸ்டியன் உல்ஃப், செருமானிய அரசியல்வாதி
- 1960 – லெப்டினன்ட் சங்கர், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1982)
- 1961 – வித்யா தேவி பண்டாரி, நேபாளத்தின் 2வது குடியரசுத் தலைவர்
- 1970 – ராகுல் காந்தி, இந்திய அரசியல்வாதி
- 1980 – நாகை ஸ்ரீராம், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 2022)
- 1985 – காஜல் அகர்வால், இந்திய நடிகை
இறப்புகள்
தொகு- 1720 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய மீகாமன் (பி. 1641)
- 1747 – நாதிர் ஷா, ஈரானிய அரசர் (பி. 1688)
- 1867 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிகோ மன்னர் (பி. 1832)
- 1990 – க. யோகசங்கரி, இலங்கைப் போராளி, அரசியல்வாதி
- 1990 – க. பத்மநாபா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நிறுவனர் (பி. 1951)
- 1993 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1911)
- 2012 – ராபின் மெக்கிலாசன், ஆங்கிலேயத் தமிழறிஞர், கிரேக்க செவ்வியல் அறிஞர்
- 2013 – ஜேம்ஸ் கண்டோல்பினி, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1961)
- 2016 – குமரகுருபரன், தமிழகக் கவிஞர் (பி. 1974)
- 2020 – ஏ. எல். ராகவன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1933)
- 2024 – சி. வி. சந்திரசேகர், தமிழக பரதநாட்டியக் கலைஞர், நடன அமைப்பாளர் (பி. 1935)
சிறப்பு நாள்
தொகு- விடுதலை நாள் (அங்கேரி)
- தொழிலாளர் தினம் (டிரினிடாட் மற்றும் டொபாகோ)