கடல் விரால்
கடல் விரால், கடச்சீலா, கடவுளா, வெறா (Rachycentron canadum) என அழைக்கப்படுவது காரங்கிஃபார்ம் கடல் மீன் இனமாகும், இது ராச்சிசென்ட்ரான் பேரினத்தின் ஒரே பிரதிநிதி மற்றும் ராச்சிசென்ட்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த மீனாகும்.
கடல் விரால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Rachycentron |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/RachycentronR. canadum
|
இருசொற் பெயரீடு | |
Rachycentron canadum (Linnaeus, 1766) | |
வேறு பெயர்கள் [2] | |
|
விளக்கம்
தொகுகடல் விரால்கள் அதிகபட்சமாக 2 மீ (78 அங்குலம்) நீளமும், 78 கிலோ (172 lb) எடை வரை எட்டும். இந்த மீன்கள் நீண்ட உருளை வடிவ உடலையும், தட்டையான தலையையும் கொண்டுள்ளன. இதன் கண்கள் சிறியதாகவும், கீழ் தாடையானது மேல் தாடையை விட சற்று முன் நோக்கி நீண்டதாகவும் இருக்கும். இந்த மீனின் உடலில் சிறிய மென்மையான செதில்கள் இருக்கும். இதன் உடலின், பக்கவாட்டில் இரண்டு கரும் பழுப்பு நிற பட்டைகள் வால்வரை செல்கின்றன. இவற்றின் வயிறு வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இவற்றின் பெரிய மார்புத் துடுப்புகள் பொதுவாக கிடைமட்டமாக கொண்டு செல்கின்றன. இது ஒருவேளை இந்த மீன் சுறாவை ஒத்த உருவத்தை அடைய உதவுகிறது. முதல் முதுகுத் துடுப்பில் ஆறு முதல் ஒன்பது குறுகிய, தடிமனான, கூர்மையான முட்கள் உள்ளன. இதன் வால் கவை போல பிளந்து இருக்கும் இது பொதுவாக அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த மீனுக்கு காற்றுப் பை கிடையாது . இவற்றின் குட்டிகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களுடன் காணப்படும். மேலும் வால் வட்டமாக இருக்கும். ராட் மற்றும் ரீலில் பிடிக்கப்பட்ட கடல் விரால் ஆஸ்திரேலியாவின் ஷார்க் பேவிலிருந்து கொண்டுவரப்பட்டது. அதன் எடை 60 கிலோ (135 lb) எடையாக இருந்தது.
ஒத்த இனங்கள்
தொகுகடல்விரால் இதன் நெருங்கிய உறவு இனமான எக்கெனீடீ குடும்பத்தின் ரெமோராஸ் என்ற உருவுமீனை ஒத்திருக்கிறது. இந்த ரெமோராவின் முதுகில் உள்ளது போன்ற இதற்கு ஒட்டுறுப்பு இல்லை. மற்றும் தடிமனான உடலைக் கொண்டுள்ளது.
பரவலும், வாழ்விடமும்
தொகுஇவை ஆண்டில் முட்டையிட ஒன்றாக கூடும் காலங்களைத் தவிர பொதுவாக தனித்தே இருக்கும். மேலும் இவை சில சமயங்களில் பவளப் பாறைகள், மூழ்கிய சிதைவுகள், துறைமுகங்கள், மிதவைகள் மற்றும் பிற கட்டமைப்புகளில் திரள்கின்றன. இது கடல் வாழ் உயிரி, என்றாலும் இவை இரையைத் தேடி முகத்துவாரங்கள் மற்றும் சதுப்பு நிலங்களுக்குள் நுழையலாம்.
இவை மேற்கு மற்றும் கிழக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலின் வெப்பமண்டலத்திலிருந்து வெப்பமண்டல நீரில், கரிபியன் முழுவதும், மற்றும் இந்தியப் பெருங்கடலில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் 'ப்பானின் பசிபிக் கடற்கரைக்கு அப்பாலும் காணப்படுகிறது.[3] இது 1.6 முதல் 32.2 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைத் தாங்கும் மிகுவெப்ப தாங்கி ஆகும். மேலும் இது பரந்த உப்புநிலை மாற்றத்திற்கிசைவாக உவர்ப்புத் தன்மை 44.5 க்கு 5.0 PPT இல்லும் வாழும்.[4]
குறிப்புகள்
தொகு- ↑ Collette, B.B.; Curtis, M.; Williams, J.T.; Smith-Vaniz, W.F.; Pina Amargos, F. (2015). "Rachycentron canadum". IUCN Red List of Threatened Species 2015: e.T190190A70036823. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T190190A70036823.en. https://www.iucnredlist.org/species/190190/70036823.
- ↑ வார்ப்புரு:Fishbase
- ↑ Ditty, J. G.; Shaw, R. F. (1992). "Larval development, distribution, and ecology of cobia Rachycentron canadum (Family: Rachycentridae) in the northern Gulf of Mexico". Fishery Bulletin 90: 668–677. http://spo.nmfs.noaa.gov/sites/default/files/pdf-content/1992/904/ditty.pdf.
- ↑ Resley, M.J.; Webb, K.A.; Holt, G.J. (2006). "Growth and survival of juvenile cobia Rachycentron canadum cultured at different salinities in recirculating aquaculture systems". Aquaculture 253: 398–407. doi:10.1016/j.aquaculture.2006.12.029. https://www.researchgate.net/publication/223180380.