இச்வாகு

ஆண்களுக்கு சூட்டிய பெயர்

இச்வாகு (Ikshvaku) (சமஸ்கிருதம்: इक्ष्वाकु) [1] இந்து தொன்மவியலின் அடிப்படையில் வைவஷ்த மனு என்பவர் சூரியனின் மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இச்வாகுவின் வழித்தோன்றல்கள் சூரிய குலத்தினர் என்று அறியப்படுகிறது.

இச்வாகு

இராமாயணம் எனும் இதிகாசத்தில் இராமனின் முன்னோர்களுக்கு மூத்தவரான இச்வாகு மன்னரைக் குறித்த செய்திகள் உள்ளது.

இச்வாகு மன்னர் அயோத்தியை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆண்டவர். இச்வாகு மன்னரின் வழித்தோன்றல்களில் மிகவும் புகழ்பெற்றவர்கள் திரிசங்கு, அரிச்சந்திரன், பகீரதன், தசரதன், இராமர், லவன் மற்றும் குசன் ஆவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. According to the Sanskrit-English Dictionary, by British sanskritist Monier Monier-Williams (1819-1899).

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இச்வாகு&oldid=3791623" இலிருந்து மீள்விக்கப்பட்டது