ஜனபாதங்கள் என்பவை வேத காலத்தில்இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த நாடுகள், குடியரசுகள் (கனபதங்கள்) மற்றும் முடியரசுகள் (சாம இராச்சியங்கள்) ஆகும். வேத காலமானது பிந்தைய வெண்கலக் காலம் முதல் இரும்புக் காலத்துக்குள் வரையிலான காலங்களைத் தொடுகிறது. இது கி. மு. 1500ஆம் ஆண்டு முதல் கி. மு. 6ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. 16 மகாஜனபாதங்களின் வளர்ச்சியின் போது, பெரும்பாலான ஜனபாதங்கள் அதிக சக்தி வாய்ந்த அண்டை நாடுகளால் இணைத்துக் கொள்ளப்பட்டன. மேலும்...
இராசாளி என்பது இந்திய துணைக்கண்டத்தில் முக்கியமாகக் காணப்படும் பொரி வல்லூறின் வலசை போகாத துணையினம் ஆகும். இது வலசை செல்லும் துணையினமாகவும் விவரிக்கபட்டுள்ளது. இராசாளி ஒரு சிறிய வலு உள்ள பறவையாகும். இதன் தோள் அகன்று இருக்கும். இதன் அலகு வெளுத்த ஈய நிறத்திலும் அதன் முனை சற்றுக் கருத்தும் காணப்படும். இதன் விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பாகவும், கால்கள் குரோம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதன் தலையும் கன்னத்தின் வழியாக செல்லும் கோடும் கருப்பாக இருக்கும். மேலும்...
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,69,525 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.