உள்ளடக்கத்துக்குச் செல்

அபீஸ் அல் ஆசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபீஸ் அல் ஆசாத்
Hafez al-Assad
حافظ الأسد
18th
பதவியில்
12 மார்ச் 1971 – 10 ஜூன் 2000
பிரதமர்அபீஸ் அல் ஆசாத்
துணை அதிபர்முகமது அல் அயூபி (1971–1976)
ரிபாத் அல் அசாத் (1984–1998)
அப்துல் ஹலாம் கடாம் (1984–2000)
ஜுஹைர் மஷ்ரக் (1984–2000)[1]
முன்னையவர்அகமது அல் காதிப்
பின்னவர்பசார் அல்-அசத் (Acting)
Prime Minister of Syria
பதவியில்
21 November 1970 – 3 April 1971
குடியரசுத் தலைவர்Ahmad al-Khatib
Himself
முன்னையவர்Nureddin al-Atassi
பின்னவர்Abdul Rahman Khleifawi
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1930-10-06)6 அக்டோபர் 1930
Qardaha, Alawite State, French Mandate for Syria and the Lebanon
இறப்பு10 சூன் 2000(2000-06-10) (அகவை 69)
திமிஷ்கு, Syria
இளைப்பாறுமிடம்Qardaha, Syria
அரசியல் கட்சிBa'ath Party (Syrian faction) (since 1966)
பிற அரசியல்
தொடர்புகள்
Arab Ba'ath Party (1946–47)
Ba'ath Party (1947–66)
துணைவர்Anisa Makhlouf (1957–2000)
உறவுகள்Jamil, Rifaat (brothers)
பிள்ளைகள்Bushra, Bassel, Bashar, Majd, Maher
பெற்றோர்Ali Sulayman al-Assad
Na'sa al-Assad
முன்னாள் கல்லூரிHoms Military Academy
கையெழுத்து
Military service
பற்றிணைப்பு Syria
கிளை/சேவைSyrian Air Force
Syrian Armed Forces
சேவை ஆண்டுகள்1952–2000
தரம் General
கட்டளைSyrian Air Force
Syrian Armed Forces
போர்கள்/யுத்தங்கள்ஆறு நாள் போர் (1967)
தேய்வழிவுப் போர் (1967–70)
Black September (1970–71)
யோம் கிப்பூர்ப் போர் (1973)

ஹபீஸ் அல் ஆசாத் ( அரபு மொழி: حافظ الأسدḤāfiẓ al-ʾAsad Levantine Arabic:  , Modern Standard Arabic:   ; 6 அக்டோபர் 1930   - 10 ஜூன் 2000) சிரியாவின் அரசியல்வாதியும், முன்னாள் பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியும் ஆவார். அவர் 1971 முதல் 2000 வரை சிரியாவின் ஜனாதிபதியாக பணியாற்றினார். 1970 முதல் 1971 வரை அவர் சிரியாவின் பிரதமராகவும் அரபு சோசலிஸ்ட் பாத் கட்சியின் சிரிய மண்டலக்கிளைச் செயலாளராகவும், 1970 முதல் 2000 வரை பாத் கட்சியின் தேசிய ஆணைக்குழுவின் பொதுச்செயலாளராகவும் இருந்தார்.

அரபு சோசலிஸ்ட் பாத் கட்சியின் சிரிய பிராந்திய கிளையை ஆட்சியில் அமர்த்த வேண்டி, 1963 இல் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதித் திட்டத்தில் ஆசாத் பங்கேற்றார். புதிய தலைமை அவரை சிரிய விமானப்படை தளபதியாக நியமித்தது. 1966 ஆம் ஆண்டில், அசாத் இரண்டாவது சதித்திட்டத்தில் பங்கேற்றார், இது பாத் கட்சியின் பாரம்பரிய தலைவர்களை கவிழ்த்து,சலா ஜாதித் என்பவரின் தலைமையிலான ஒரு தீவிர இராணுவப் பிரிவை ஆட்சிக்கு கொண்டு வந்தது. அசாத் இந்தப்புதிய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அசாத் மூன்றாவது சதித்திட்டத்தைத் தொடங்கினார், அது சலா ஜாதித்தை பதவியிலிருந்து வெளியேற்றியது, மேலும் தன்னை சிரியாவின் மறுக்கமுடியாத தனிநிகர் தலைவராக ஆசாத் அறிவித்துக் கொண்டார்.

ஆசாத் ஆட்சியைக் கைப்பற்றியபோது, தனியார் சொத்துகளுக்கு அதிக இடமளிப்பதன் மூலமும் தனது முன்னோடிகளால் பிற்போக்குத்தனமானவை என்று கருதப்பட்ட நாடுகளுடன் பிற்போக்குத்தனமாகக் கருதிய நாடுகளுடனான வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலமும் பாத் அரசாங்கத்தின் ஆட்சியை அசாத் தீவிரமயமாக்கினார். இஸ்ரேலுக்கு பனிப்போரின் போது ஆதரவு கோரி சோவியத் யூனியனுடன் இணைந்தார், மேலும், அரபு உலகத்தை ஒரே அரபு தேசமாக ஒன்றிணைக்கும் பான்-அரபு கருத்தை அவர் கைவிட்ட நிலையில், சிரியாவை இஸ்ரேலுக்கு எதிரான அரபு நலன்களின் பாதுகாவலராக்க முயன்றார்.

ஆசாத் ஆட்சிக்கு வந்ததும், குறிப்பிட்ட சமய நம்பிக்கை கொண்டிருப்போரின் தனிக் குழு சார்ந்த அரசு சேவைகளை ஏற்பாடு செய்தார் ( சுன்னிகள் அரசியல் நிறுவனங்களின் தலைவர்களாக ஆனார்கள், அதே நேரத்தில் அலவைட்டுகள் இராணுவம், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தனர் ). நிர்வாகம் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரங்கள் கொண்ட பாத்திஸ்டுகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. சிரிய ஜனாதிபதி பதவிக்கு அதன் முடிவெடுக்கும் அதிகாரங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. சிரிய அரசாங்கம் எந்த அதிகாரமும் இன்றி அரசாங்கம் என்ற சொல்லின் சாதாரண பொருளுடன் ஒரு கட்சி அமைப்பாக நின்றுவிட்டது, மேலும் ஒரு வலுவான தலைவர் ஆளும் அரசு முறைமையைக் கொண்ட ஒரே கட்சி நாடாக மாற்றப்பட்டது. இந்த அமைப்பைப் பராமரிக்க, ஆசாத் மற்றும் அவரது குடும்பத்தை மையமாகக் கொண்ட ஆளுமை வழிபாட்டு முறை, ஜனாதிபதியாலும் பாத் கட்சியாலும் உருவாக்கப்பட்டது.[2][3][4][5][6][7]

சிரிய அரசாங்கத்தின் முன்னெடுப்புகளின் முக்கிய ஆதாரமாக மாறிய அசாத் ஒரு அரசியல் வாரிசைத் தேடத் தொடங்கினார். அவரது முதல் தேர்வு அவரது சகோதரர் ரிஃபாத், ஆனால் ரிஃபாத் 1983-84ல் ஹபீஸின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்தபோது அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றார். எனவே ஹபீஸின் உடல்நிலை குணமடைந்ததும் ரிஃபாத் நாடு கடத்தப்பட்டார். ஹபீஸின் அடுத்த வாரிசு தேர்வு அவரது மூத்த மகன் பாஸல் . ஆயினும், 1994 ஆம் ஆண்டில் பாஸல் ஒரு கார் விபத்தில் இறந்தார், அதனால் ஹபீஸ் தனது மூன்றாவதாக தனது இளைய மகன் பசார் அல்-அசத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். அந்த நேரத்தில் அவருக்கு அரசியல் அனுபவம் இருந்திருக்கவில்லை. இந்த நடவடிக்கை சிரிய ஆளும் வர்க்கத்தின் சில பகுதிகளுக்குள் விமர்சனங்களை எழுப்பியது, ஆனால் அசாத் தனது திட்டத்தைத் தொடர்ந்தார். மேலும் இந்த வாரிசு நடவடிக்கையை எதிர்த்த பல அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார். 2000 ஆம் ஆண்டில் ஹபீஸ் இறந்தார், அவருக்குப் பின் பசார் அல்-அசத் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Historical Dictionary of Syria.
  2. Wedeen, Lisa. Ambiguities of domination: Politics, rhetoric, and symbols in contemporary Syria. University of Chicago Press, 2015.
  3. Peter Beaumont No longer the pariah President. The Observer, 16 November 2008
  4. Halla Diyab All in the family: Building the Assad dynasty in Syria, Al-Arabiya Friday, 28 November 2014
  5. ANNIA CIEZADLO Bashar Al Assad: An Intimate Profile of a Mass Murderer, The New Republic 19 December 2013
  6. Shadid, Anthony (8 November 2011). "In Assad's Syria, There Is No Imagination". PBS.
  7. Lund, Aron (9 June 2014). "Syria's Phony Election: False Numbers and Real Victory". Diwan. Carnegie Middle East Centre.