உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ருதா பட்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ருதா பட்கி
2012இல் நடந்த ஒரு அழகிப் போட்டியில் அம்ருதா பட்கி.
தேசியம் இந்தியா
வாழ்க்கைத்
துணை
ஜோதிந்திர கனேகர்
வடிவழகுவியல் தகவல்
உயரம்1.78 m (5 அடி 10 அங்) (5 அடி 10 அங்)
வலைத்தளம்
www.amrutapatki.in

அம்ருதா பட்கி (Amruta Patki ; 16 ஆகஸ்ட் 1985) ஒரு இந்திய வடிவழகியும், முன்னாள் அழகு ராணியும் ஆவார். பெமினா மிஸ் இந்தியா 2006 பட்டத்தை வென்றார். பின்னர் பெமினா மிஸ் இந்தியா எர்த் பட்டத்தையும் பெற்றார். மிஸ் எர்த் 2006 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதில் 2006 ஆம் ஆண்டு மிஸ் எர்த் ஏர் பட்டத்தை பெற்று முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

தற்போது,  ஒரு வடிவழகியாகவும், நடிகையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரகவும், சீர்ப்படுத்தும் நிபுணராக பணியாற்றுகிறார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான ஹைட் & சீக் திரைப்படத்தில் அறிமுகமானார். சத்ய சாவித்திரி சத்யவான் ( 2012 ) என்ற மராத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ரேடியோ மிர்ச்சி மியூசிக் விருதுகள் 2012 இன் போது மராத்தி திரைப்படத்தின் விளம்பரப் பாடலான மதலசா என்ற பாடலுக்கான அறிமுக பாடகியாகவும் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

உளவியலில் தனது பட்டப்படிப்பை முடித்தார். மேலும், ஒரு தொழில்முறை ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். அம்ருதா ஜனவரி 2017 இல் புனேவைச் சேர்ந்த பங்கு தரகர் ஜோதிந்திர கனேகர் என்பவரை மணந்து இப்போது சிங்கப்பூரில் வசிக்கிறார்.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]