உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்சுபர்கு அரசமரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்சுபர்கு கோமகன்களின் அரசச்சின்னம்

ஆப்சுபர்கு அரச மரபு அல்லது சுருக்கமாக ஆப்சுபர்கு (Habsburg) கோமகன்கள், அரசர்கள், மற்றும் மன்னர்களின் குடும்பமாகும். இந்தக் குடும்பத்தினர் ஐரோப்பிய வரலாற்றில் முதன்மையான பங்காற்றி உள்ளனர். இவர்கள் ஆசுதிரியா, பின்னர் ஆசுத்திரியா-அங்கேரியை 600 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுள்ளனர். சில காலம் எசுப்பானியா, நெதர்லாந்து, மற்றும் புனித உரோமைப் பேரரசும் இவர்களது ஆட்சியில் இருந்தன.

1515இல் வியன்னாவில் ஆப்சுபர்கு குடும்பத்தைச் சேர்ந்த ஆசுதிரியா அரசருக்கும் யக்கியெல்லோன் அரசமரபைச் சேர்ந்த போலந்து, லித்துவேனியா மன்னர்களுக்கும் இடையே பொகிமியா மற்றும் அங்கேரியின் மன்னர்களுக்கு ஆண் வாரிசு இல்லையென்றால் ஆசுதிரிய மன்னர் அப்பகுதியின் ஆட்சியைக் கைக்கொள்வார் என்று உடன்பாடு ஏற்பட்டது. சார்தீனியா இராச்சியமும் இவர்களது கைவசம் இருந்தது.

இந்த அரச மரபின் கடைசி பேரரசியாக பூர்பொன்-பார்மாவின் சீடா இருந்தார். இவர் 1989இல் சுவிட்சர்லாந்தில் இறந்தார். 1916 முதல் 1918 வரை தமது கணவர் சார்லசுடன் ஆட்சி புரிந்துள்ளார்.

முதன்மை பதவிகள்

[தொகு]

இந்தக் குடும்பத்தினர் ஏற்ற பல்வேறு முதன்மை பதவிகள்:

  • உரோம அரசர்கள்
  • புனித உரோமைப் பேரரசர்கள்
  • செருமனியின் அரசர்
  • ஆசுதிரியாவின் ஆட்சியாளர்கள் (1453 முதல்)
  • பொகிமியா அரசர்கள் (1306–1307, 1437–1439, 1453–1457, 1526–1918),
  • அங்கேரி அரசர்கள் மற்றும் குரோசியா அரசர்கள் (1526–1918),
  • எசுப்பானிய அரசர்கள் (1516–1700),
  • போர்த்துக்கேய அரசர்கள் (1581–1640),
  • கலீசியா மற்றும் லோடொமெரியா அரசர் (1772–1918),
  • டிரான்சில்வேனியா பேரிளவரசர் (1690–1867).

இவை தவிர பல பட்டங்கள் இக்குடும்ப அரசர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

[தொகு]