உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரவல்லி மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜஸ்தான் மாநிலத்தில் காணப்படும் ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பகுதி
இந்திய மலைத்தொடர்கள்

ஆரவல்லி மலைத்தொடர் (Aravalli Range) மேற்கு இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குறுக்கே வடகிழக்கிலிருந்து தென்மேற்காகச் சுமார் 300 மைல்கள் நீளமாக அமைந்துள்ளது. இதன் வடக்கு முனை தனித்தனியான குன்றுகளாகவும், பாறை முகடுகளாகவும் ஹரியானா மாநிலத்துக்குள் தொடர்ந்து டெல்லிக்கு அண்மையில் முடிவுறுகிறது. இதிலுள்ள மிக உயர்ந்த சிகரம் அபு மலையில் அமைந்துள்ள குரு சிகரம் ஆகும். 5653 அடி (1723 மீட்டர்) உயரமான இச் சிகரம் தொடரின் தென்மேற்குப் பகுதியில் குசராத்து மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மாவட்டடத்தில் உள்ளது. உதய்ப்பூர் நகரமும் அதன் ஏரியும் இம் மலைத்தொடரின் தென்புறச் சரிவில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [ https://www.britannica.com/place/Aravalli-Range Aravalli Range]