உள்ளடக்கத்துக்குச் செல்

இலூவா அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலூவா அருங்காட்சியகம்
இலூவா மாளிகை (ரிச்செலியூ சிறகம்)
இலூவா அருங்காட்சியகம் is located in Paris
இலூவா அருங்காட்சியகம்
Location within Paris
நிறுவப்பட்டது1793
அமைவிடம்வேந்திய மாளிகை, இலூவா அருங்காட்சியகம்,
75001 பாரிசு, பிரான்சு
வகைகலை அருங்காட்சியகம், வடிவமைப்பு/துணிவகை அருங்காட்சியகம், வரலாற்றுக் களம்
வருனர்களின் எண்ணிக்கை8.3 மில்லியன் (2007)[1]
8.5 மில்லியன் (2008)[2]
8.5 மில்லியன் (2009)[3]
இயக்குனர்என்றி லோய்ரெட்
மேற்பார்வையாளர்Marie-Laure de Rochebrune
பொது போக்குவரத்து அணுகல்வேந்திய மாளிகை - இலூவா அருங்காட்சியகம் (பாரிசு மெட்ரோ)
வலைத்தளம்www.louvre.fr

இலூவா அருங்காட்சியகம் (Louvre Museum, பிரெஞ்சு மொழி: Musée du Louvre) பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று. இது உலகிலேயே மிகவும் அதிகமான பார்வையாளர்கள் வரும் அருங்காட்சியகம் என்பதோடு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும் ஆகும். பாரிசு நகரத்தின் முக்கிய இடமாக விளங்கும் இது முதலாவது மாவட்டத்தில் செயின் ஆற்றின் வலது கரையில் (வடக்குப்புறக் கரையை 'Rive Droite' - வலப்புறக் கரை என அழைக்கிறார்கள்) அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ 35,000 அரும்பொருட்கள், 60,600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

14ஆம் லூயுடைய அரண்மனைதான் தற்போது இந்த அருங்காட்சியகமாக உள்ளது. பரந்து விரிந்த உயர்ந்த இவ்வருங்காட்சியகம் வெளிப்பறத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதே பழைய கட்டடக்கலை நுட்பத்துடன் பேணப்படுகிறது. புகழ் பெற்ற ஓவியர் இலியானார்டோ தாவின்சியின் ஓவியமான மோனா லிசாவின் அசல் படி இந்த அருங்காட்சியகத்தில்தான் உள்ளது.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. Sandler, Linda (February 25, 2008). "இலூவா 8.3 மில்லியன் பாரவையாளர்கள் இதனை உலகின் முதல் நிலை அருங்காட்சியகம் ஆக்கியுள்ளனர்". Bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2008-04-17.
  2. "Fréquentation record en 2008 pour le musée du Louvre contrairement au Musée d'Orsay". La Tribune. 2009-01-09 இம் மூலத்தில் இருந்து 2011-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110928151514/http://www.latribune.fr/culture/week-end-voyages/20090109trib000329551/frequentation-record-en-2008-pour-le-musee-du-louvre-contrairement-au-musee-dorsay.html. பார்த்த நாள்: 2009-02-01. 
  3. "Exhibition and museum attendance figures 2009" (PDF). London: The Art Newspaper. April 2010. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 May 2010. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.66