உள்ளடக்கத்துக்குச் செல்

எட்வர்ட் ஆல்பீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வர்ட் ஆல்பீ

எட்வர்ட் ஆல்பீ (Edward Franklin Albee III 12 மார்ச்சு, 1928-16 செப்டம்பர், 2016) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் மூன்று முறை புலிட்சர் பரிசு பெற்றவர்.[1]

பெயர்க் காரணம்

[தொகு]

இவருடைய இயற்பெயர் எட்வர்ட் ஆர்வீ ஆகும் அனால் ரீட் ,பிரான்சிசு ஆல்பீ என்ற இணையர் இவரைத் தத்து எடுத்துக் கொண்ட காரணத்தால் எட்வார்ட் ஆர்வீ என்னும் தம் பெயரை எட்வார்ட் பிராங்க்ளின் ஆல்பீ III என மாற்றிக் கொண்டார்.

படைப்புகளும் பரிசுகளும்

[தொகு]

தமது 30 ஆம் அகவையில் விலங்கு காட்சிக் கதை என்னும் நாடகத்தை எழுதி வெளி உலகுக்கு அறிமுகமானார். ஹு ஈஸ் அப்ரைட் ஆப் வெர்ஜினியா உல்ப் என்னும் படைப்பும் வரவேற்பைப் பெற்றது. இதற்காக பல விருதுகள் எட்வார்ட் ஆல்பிக்கு வழங்கப்பட்டன. முப்பதுக்கும் மேலான நாடகங்கள் எழுதினார். மூன்று புலிட்சர் பரிசுகளை 1967, 1975, 1994 ஆகிய ஆண்டுகளில் எட்வர்ட் ஆல்பீ பெற்றார். வாணாள் சாதனைக்காக டோனி விருது 2005 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்

[தொகு]