உள்ளடக்கத்துக்குச் செல்

கசான் அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசான் அரங்கு

ஐ.கா.ச.ஒ பகுப்பு 4 அரங்கு
இடம் கசான், தத்தாரிஸ்தான், உருசியா உருசியா
எழும்பச்செயல் ஆரம்பம் மே 2010
திறவு சூலை 2013
உரிமையாளர்
தரை புல்தரை
கட்டிட விலை $ 450 மில்லியன்
கட்டிடக்கலைஞர் பாப்புலசு, வி. மோடாரின்
குத்தகை அணி(கள்) ரூபின் கசான் கால்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 45,379
பரப்பளவு 105 x 68 மீ

கசான் அரங்கு (Kazan Arena, உருசியம்: «Казань Арена») உருசியாவின் தத்தாரிஸ்தான் தலைநகர் கசானில் உள்ள விளையாட்டரங்கம். இது சூலை, 2013 இல் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு கால்பந்துப் போட்டிகள், குறிப்பாக ரூபின் கசான் கால்பந்துக் கழகத்தின் தாயக ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வரங்கில் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய வெளிப்புற காட்சித்திரை அமைக்கப்பட்டுள்ளது.

விவரணம்

[தொகு]
உலகளவில் கால்பந்து விளையாட்டரங்குகளில் நிறுவப்பட்ட ஒளி உமிழ் இருமுனைய முகப்புகளில் இந்த அரங்கிலுள்ளதே மிகப்பெரிய ஒன்றாகும்.[1]

இந்த விளையாட்டரங்கில் 2013 கோடைக்கால பல்கலைக்கழகங்களிடை போட்டிகளின் துவக்க விழாவும் நிறைவு விழாவும் 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளும் நடைபெற்றன. இங்கு 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளும் நடைபெறவுள்ளன. இதில் ஏறத்தாழ 45,379 பார்வையாளர்கள் ஆட்டங்களைக் காண முடியும்.[2] இதற்கு முன்னதாக கசானின் முதன்மை விளையாட்டரங்கமாக இருந்த சென்ட்ரல் விளையாட்டரங்கத்திற்கு மாற்றாக இது தற்போது விளங்குகின்றது. கசான் அரங்கில் 2015க்கான உலக நீர் விளையாட்டுக்கள் போட்டிகள் நடந்துள்ளன.

இதற்கான கட்டிட வடிவமைப்பை பாப்புலசு நிறுவனம் வடிவமைத்துள்ளது. உள்ளூர் பண்பாட்டையும் பண்புகளையும் எதிரொளிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக முதன்மை வடிவமைப்பாளர் டேமன் லெவெல் கூறுகிறார்.

2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி

[தொகு]
நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
18 சூன் 2017 18:00  போர்த்துகல் 2–2  மெக்சிக்கோ குழு ஏ 34,372[3]
22 சூன் 2017 21:00  செருமனி 1–1  சிலி குழு பி 38,222[4]
24 சூன் 2017 18:00  மெக்சிக்கோ 2–1  உருசியா குழு ஏ 41,585[5]
28 சூன் 2017 21:00  போர்த்துகல் 0–0 (0–3 p)  சிலி அரை-இறுதி 40,855[6]

2018 பிபா உலகக் கோப்பை

[தொகு]
நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
16 சூன் 2018 13:00  பிரான்சு  ஆத்திரேலியா குழு சி
20 சூன் 2018 21:00  ஈரான்  எசுப்பானியா குழு பி
24 சூன் 2018 21:00  போலந்து  கொலம்பியா குழு எச்
27 சூன் 2018 17:00  தென் கொரியா  செருமனி குழு எஃப்
30 சூன் 2018 17:00 வாகையாளர் குழு C இரண்டாமவர் குழு டி பதின்மர் சுற்று
6 சூலை 2018 21:00 வாகையாளர் ஆட்டம் 53 வாகையாளர் ஆட்டம் 54 கால்-இறுதி

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://invidis.de/2013/07/kazan-arena-groste-led-fassade-an-einem-fusballstadium/
  2. "Футбольный стадион «Казань Арена» - Казань Арена". kazanarena.com.
  3. "Match report – Group A – Portugal - Mexico" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 18 சூன் 2017. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2017. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Match report – Group B – Germany - Chile" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 22 சூன் 2017. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Match report – Group A – Mexico - Russia" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 24 சூன் 2017. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "Match report – Semi-final – Portugal - Chile" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 28 சூன் 2017. Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2017. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]