கருங்கல் (பாறை)
கருங்கல் என்பதே இங்கே மீள்வழிப்படுத்தப்படுகிறது. கருங்கல் என்ற ஊரை குறித்த கட்டுரையை பார்ப்பதற்கு, காண்க: கருங்கல் (ஊர்)
கருங்கல் (Granite) என்பது என்பது உடையக்கூடிய தன்மை கொண்ட எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகும் ஒரு வகை கற்பாறை ஆகும். இதன் சராசரி அடர்த்தியானது 2.65 - 2.75 கி/செ.மீ3 ஆகும்.[1] இதன் அழுத்தம் தாங்கும் திறன் 200 மெகா பாசுகல் (MPa) மேல் உள்ளது மற்றும் உருகு நிலை 1215–1260 °செ.[2] இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சிலசமயங்களில் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி இருப்பதுண்டு. கருங்கற்கள், அவற்றின் வேதியியல் மற்றும் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம்.
இவ்வகைப் பாறைகள் சிலைகள் செய்வதற்கும், கட்டிடங்கள் மற்றும் கற்கோவில்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "முதன்மை பாறை இயக்கவியல் (ஆங்கிலத்தில்)". Webpages.sdsmt.edu. Archived from the original on 2008-05-02. பார்க்கப்பட்ட நாள் 2010-05-09.
- ↑ லார்சன், எசுப்பர் எசு. (1929). "பாறைக்குழம்பின் வெப்பநிலை". அமெரிக்கன் மினராலஜிசுட்டு 14: 81–94. http://www.minsocam.org/msa/collectors_corner/arc/tempmagmas.htm.