உள்ளடக்கத்துக்குச் செல்

கல்பர் விலாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பர் விலாங்கு
கூழைக்கடா விலாங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
உள்வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
Saccopharyngiformes
Families

See text

கல்பர் விலாங்கு (Saccopharyngiformes) என்பது அசாராரணமான அக்டினோட்டெரிகீயை வரிசை மீனாகும். இது மேலோட்டமாக விலாங்கு மீனை ஒத்ததாக உள்ளது, ஆனால் பல உள் வேறுபாடுகளைக் கொண்டது. இதில் பெரும்பாலான வகைகள் ஆழ்கடல் வரிசையைச் சேர்ந்தவை. இவற்றில் சில உயிரோளிர்வு கொண்டவை. சில மீன்களால் கடலின் 3,000 m (10,000 feet) ஆழ ஆழ்கடல் இருட்பகுதியில் வாழ இயலும். கல்பர் விலாங்கு மீன்கள் ஆழ்கடல் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன.

கல்பர் விலாங்கு மீன்களுக்கு பல எலும்புகள் கிடையாது, அதாவது தலையோடு, விலா எலும்பு போன்றவை கிடையாது. இதேபோல இவற்றிற்றிற்கு எந்த செதிலும், இடுப்புத் துடுப்பும் கிடையாது. இந்த விலாங்கு மீனுக்கு மிகப் பெரிய வாயும் அதில் சிறிய பற்களும் உண்டு. தன்னைவிட பெரிய இரை வந்தாலும் இது தன் வாயை ஒரு வலை போல் விரித்து, இரையை அப்படியே பிடித்துவிடும். பெரிய இரையைத் தாங்கும் அளவு இதன் வயிறும் விரிவடையும். இதற்கு நீண்ட, சாட்டை போன்ற வால் உண்டு.[1]

வகைப்பாடு

[தொகு]

நான்கு குடும்பங்களும் இரண்டு துணை வரிசைகளும்:

  • Suborder Cyematoidei
    • Cyematidae (bobtail snipe eels)
  • Suborder Saccopharyngoidei
    • Eurypharyngidae (pelican eel)
    • Monognathidae (onejaws)
    • Saccopharyngidae (swallowers, gulpers or gulper eels)

மேற்கோள்கள்

[தொகு]
  1. மிது (19 அக்டோபர் 2016). "கடலைக் கலக்கும் விநோத மீன்கள்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]