உள்ளடக்கத்துக்குச் செல்

குதுப் ஷாஹி வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோல்கொண்டா சுல்தானகம்
1518–1687
கொடி of குதுப் ஷாஹி
குதுப் ஷாஹிக்களின் கொடி
கோல்கொண்டா சுல்தானகம்.[1]
கோல்கொண்டா சுல்தானகம்.[1]
தலைநகரம்கோல்கொண்டா (1519-1591)
ஐதராபாத்து (1591-1687)
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி (அலுவல்)[2]
தெலுங்கு[3]
தக்காணிய உருது
சமயம்
சியா இசுலாம்
வரலாறு 
• தொடக்கம்
1518
• முடிவு
1687
நாணயம்மொஹர்
முந்தையது
பின்னையது
[[பாமினி சுல்தானகம்]]
[[முகலாயப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள்இந்தியா

குதுப் ஷாஹி வம்சம் (Qutb Shahi dynasty) என்பது பொ.ச. 1518 முதல் 1687 வரை தென்னிந்தியாவில் கோல்கொண்டா சுல்தானகத்தை ஆட்சி செய்த ஒரு வம்சமாகும். இவர்கள் துர்கோமன் முஸ்லிம் பழங்குடியினரான காரா கொயுன்லுவைச் சேர்ந்த காரா யூசுப்பின் வழித்தோன்றல்கள் ஆவர். பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், "குதுப் ஷாஹி" வம்சம் கி.பி 1518 இல் குலி குதுப் முல்க் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் "சுல்தான்" என்ற பட்டத்தையும் வைத்துக் கொண்டார். 1636 ஆம் ஆண்டில், ஷாஜகான் இவர்களை முகலாய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தினார். முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றி ஆக்கிரமித்தபோது, 1687ஆம் ஆண்டில் அதன் ஏழாவது சுல்தான் அபுல் ஹசன் குதுப் ஷா ஆட்சியின் போது வம்சம் முடிவுக்கு வந்தது. [4] [5] இந்த இராச்சியம் நவீன கால மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்காணாவின் பகுதிகளிலிருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. [6] கோல்கொண்டா சுல்தானகம் பிஜப்பூர் சுல்தானகத்துடனும் தக்காண சுல்தானகங்களுடனும் தொடர்ந்து மோதலில் இருந்தது. [7]

குதுப் ஷாஹிகள் தொடர்ச்சியான சியா கலாச்சாரத்தின் சிறந்த புரவலர்களாக இருந்தனர். [8] இறுதியில் இது தக்காணத்தின் பிராந்திய கலாச்சாரத்தையும் (தெலுங்கு கலாச்சாரம், மொழி மற்றும் உருது மொழியில் புதிதாக உருவாக்கப்பட்ட தக்காணிய பேச்சுவழக்கு) ஏற்றுக்கொண்டது. தெலுங்கு அவர்களின் தாய்மொழி இல்லை என்றாலும், கோல்கொண்டா ஆட்சியாளர்கள் தெலுங்கைப் பேசினர். எழுதினர். [9] மேலும், தெலுங்கை மிகவும் பிரத்தியேகமாக ஆதரித்தனர். இதனால் அவர்கள் "தெலுங்கு சுல்தான்கள்" என்று அழைக்கப்பட்டனர். [10] குதுப் ஷாஹிகள் மதச்சார்பற்ற ஆட்சிக்கு பெயர் பெற்றவர்கள். [11]

வரலாறு

[தொகு]
ஒளிபுகா வண்ணம் மற்றும் காகிதத்தில் தங்க நிற பின்புறத்தில் வரையப்பட்ட கோல்கொண்டா ஓவியம் - பறவை, பட்டாம்பூச்சி, தேனீதட்டாரப்பூச்சி (தக்காணம், கோல்கொண்டா), 1650-1670 ஓவியம்
ஐதராபாத்தில் சுல்தான் முஹம்மது குதுப் ஷாவின் கல்லறை.

வம்சத்தின் நிறுவனர், சுல்தான் குலி குதுப்-உல்-முல்க் காரா யூசுப்பின் ( துருக்கிய முஸ்லிம் பழங்குடியினமான காரா கொயுன்லுவிலிருந்து) வழி வந்தவர். அவர் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமலான் மாகாணத்திலிருந்து (இப்போதைய ஈரானில் அவரது மூதாதைய துருக்கிய பழங்குடியினரால் ஆளப்பட்டது) தனது மாமா அல்லாஹ்-குலி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலருடன் தில்லிக்கு குடிபெயர்ந்தார். [12] பின்னர் அவர், தக்காணத்திற்கு குடிபெயர்ந்து, பாமினி சுல்தான், இரண்டாம் மஹ்மூத் ஷா பாமினி என்பவரிடம் பணியாற்றினார் . [13] பாமினி இராச்சியம் ஐந்து தக்காண சுல்தானங்களாக சிதைந்த பின்னர் அவர் கோல்கொண்டாவை கைப்பற்றினார். விரைவில், அவர் பாமினி சுல்தானகத்திடமிருந்து பிரிந்து தன்னை சுதந்திர ஆட்சியாளராக அறிவித்தார். குதுப் ஷா என்ற பட்டத்தையும் வைத்துக் கொண்டார். இதன் மூலம் கோல்கொண்டாவின் குதுப் ஷாஹி வம்சத்தையும் நிறுவினார். பின்னர் அவர் 1543இல் தனது மகன் ஜாம்ஷீத் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். பின்னர், ஜாம்ஜீத் சுல்தானாக பொறுப்பேற்றார். 1550 இல் ஜம்ஷீத் புற்றுநோயால் இறந்தவுடன், [14] அவரது இளைய மகன் ஒரு வருடம் ஆட்சி செய்தார். அந்த நேரத்தில் சில பிரபுக்கள் இப்ராஹிம் குலி என்பவரை சுல்தானாக நிறுவினர். முஹம்மது குலி குதுப் ஷாவின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றன. இந்துக்கள் தீபாவளி, ஹோலி போன்ற மத விழாக்களை மீண்டும் தொடங்கினர். [15] குதுப் ஷாஹி மாநிலத்தில் சில இந்துக்கள் முக்கியத்துவம் பெற்றனர். மாதண்ணா மற்றும் அக்கண்ணா இவ்வாறு முக்கியத்துவம் பெற்ற இரண்டு சகோதரர்கள் ஆவர்.

கோல்கொண்டா, மற்றும் சார்மினார் கட்டுமானத்துடன், பின்னர் ஐதராபாத்து, சுல்தானகத்தின் தலைநகரங்களாக செயல்பட்டன. [13] மேலும் இரு நகரங்களும் குதுப் ஷாஹி சுல்தான்களால் அலங்கரிக்கப்பட்டன.

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் 1687இல் தக்காணத்தைக் கைப்பற்றும் வரை இவ்வம்சம் 171 ஆண்டுகள் கோல்கொண்டாவை ஆட்சி செய்தது. [16]

பொருளாதாரம்

[தொகு]

பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்காணப் பிராந்தியத்தில் ஒரு வலுவான பருத்தி-நெசவுத் தொழில் இருந்துள்ளது. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி நுகர்வுக்காக பெரிய அளவிலான பருத்தி துணி உற்பத்தி செய்யப்பட்டது. மஸ்லின் துணியாலும் காலிகோவால் செய்யப்பட்ட உயர்தர வெற்று மற்றும் வடிவத் துணி தயாரிக்கப்பட்டது. வெற்று துணி வெள்ளை அல்லது பழுப்பு நிறமாக, வெளுக்கப்பட்ட அல்லது சாயப்பட்ட வகைகளில் கிடைத்தது. இந்த துணிகள் பெர்சியா (ஈரான்) மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வடிவமைக்கப்பட்ட துணி அச்சுகளால் ஆனது. அவை நீல நிறத்திற்காக இண்டிகோ, சிவப்பு நிற அச்சிட்டுகளுக்கு வண்ண வேர்கள் மற்றும் காய்கறி மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு உள்நாட்டிலேயே செய்யப்பட்டன. வடிவமைக்கப்பட்ட துணியானது முக்கியமாக சாவகம், சுமாத்திரா மற்றும் பிற கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியானது. [17]

கலாச்சாரம்

[தொகு]
கோல்கொண்டா சுல்தான்களின் ஆடை பாணிகள்
கோல்கொண்டாவில் இசை, 1660-1670. இசைக்கலைஞர் ரூபாப் என்ற ஒரு கருவியை வகிக்கிறார்.

குதுப் ஷாஹி ஆட்சியாளர்கள் சிறந்த கட்டிடக் கலைகளை கற்றுக் கொள்பவர்களாகவும், ஆதரிப்பவர்களாகவும் இருந்தனர். அவர்களின் கட்டமைப்புகளில் சார்மினாரும் அடங்கும். [9] குலி குதுப் முல்கின் அரசசபை பாரசீக கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கான புகலிடமாக மாறியது. [7] சுல்தான் முஹம்மது குலி குதுப் ஷா (1580-1612) தாகினி உருது, பாரசீக மற்றும் தெலுங்கில் கவிதைகளை எழுதி ஒரு பெரிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். பாரசீக, இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இருந்து சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்தும் போது அடுத்தடுத்த கவிஞர்களும் எழுத்தாளர்களும் உருது மொழியில் எழுதினர். 1535 வாக்கில், குதுப் ஷாஹிகள் தெலுங்கை தங்கள் சுல்தானகத்துக்குள் உள்ள வருவாய் மற்றும் நீதித்துறைகளில் பயன்படுத்தினர். [18]

ஆரம்பத்தில், குதுப் ஷாஹி ஆட்சியாளர்கள் ஆதரித்தனர் துருக்கிய கலாச்சாரத்தை ஆதரித்தனர். ஆனால் இறுதியில் தக்காண பிராந்திய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டனர். தெலுங்கு மொழியும் புதிதாக உருவாக்கப்பட்ட தக்காண முதுமொழியும், உருதுவும் பிரபலமாகியிருந்தன.[19] தெலுங்கு இவர்களின் தாய்மொழி இல்லை என்றாலும்,[9] கோல்கொண்டா ஆட்சியாளர்கள் தெலுங்கைப் பேசினர், எழுதினர், மேலும், தெலுங்கிற்கு ஆதரவளித்தனர். எனவே இவர்கள் "தெலுங்கு சுல்தான்கள்" என்று அழைக்கப்பட்டனர்.[10] 1543ஆம் ஆண்டில், தனது உயிருக்கு பயந்து இளவரசர் இப்ராஹிம் குலி விஜயநகர அரசரிடம் தஞ்சமைடைந்தார். இது மேலும், தெலுங்கு மொழியை மிகவும் ஆதரித்தது. 1550இல் சுல்தானாக அரியணையில் அமர்ந்தவுடன், இப்ராஹிம் குலி தெலுங்கு அழகியலை நன்கு அறிந்திருந்தார்.[10]

குதுப் ஷாஹி ஆட்சியாளர்கள் தங்கள் மற்ற முஸ்லிம் சகாக்களை விட மிகவும் தாராளமாக இருந்தனர். பொ.ச. 1634 இல் அப்துல்லா குதுப் ஷாவின் ஆட்சியின் போது, பண்டைய இந்தியாவின் பாலியல் கையேடான ரதி ரகசியம் பாரசீக மொழியில் லாசாத்-உன்-நிசா (பெண்ணின் சுவைகள்) என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. [20]

கட்டிடக்கலை

[தொகு]

குதுப் ஷாஹி கட்டிடக்கலை இந்திய-இசுலாமியக் கட்டிடக் கலையாகும்., இது இந்திய மற்றும் பாரசீக கட்டடக்கலை பாணிகளின் உச்சக்கட்டமாக இருந்தது. [21] இவர்களின் பாணி மற்ற தக்காண சுல்தான்களின் பாணியுடன் மிகவும் ஒத்திருந்தது.

குதுப் ஷாஹி இந்தோ-முஸ்லீம் கட்டிடக் கலைக்கு சில உதாரணங்களாக கோல்கொண்டா கோட்டை, குதுப் சாகி கல்லறைகள், சார்மினார் மற்றும் சார்கமான், மக்கா பள்ளிவாசல், கைர்தாபாத் பள்ளிவாசல், ஹயாத் பக்சி பள்ளி வாசல், தாராமதி பரதாரி மற்றும் தோலி பள்ளிவாசல் போன்றவற்றை கூறலாம். [21] [22]

மதம்

[தொகு]

குதுப் ஷாஹி வம்சம் இந்து-முஸ்லீம் மத-சமூக கலாச்சாரத்தின் "கலப்பு" என்று கருதப்படுகிறது. [23] உதாரணமாக, குதுப் ஷாஹிகள் இராம நவமி அன்று பத்திராசலம் கோவிலுக்கு முத்துக்களை அனுப்பும் புனித பாரம்பரியத்தைத் தொடங்கினர். [24] 

கல்லறைகள்

[தொகு]
முஹம்மது குலி குதுப் ஷா .

குதுப் சாஹி சுல்தான்களின் கல்லறைகள் கோல்கொண்டாவின் வெளிப்புற சுவருக்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இந்த கட்டமைப்புகள் அழகாக செதுக்கப்பட்ட கற்களால் ஆனவை. மேலும், இயற்கையானத் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளன. இவை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். [25]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. For a map of their territory see: Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 147, map XIV.4 (l). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226742210.
  2. Brian Spooner and William L. Hanaway, Literacy in the Persianate World: Writing and the Social Order, (University of Pennsylvania Press, 2012), 317.
  3. = Muzaffar (1998). "The pursuit of Persian: Language in Mughal Politics". Modern Asian Studies 32 (2): 317–349. doi:10.1017/s0026749x98002947. https://archive.org/details/sim_modern-asian-studies_1998-05_32_2/page/317. ""Ibrahim Qutb Shah encouraged the growth of Telugu and his successor Muhammad Quli Qutb Shah patronized and himself wrote poetry in Telugu and in Dakhni. Abdullah Qutb Shah instituted a special office to prepare the royal edicts in Telugu (dabiri-ye faramin-i Hindavi). While administrative and revenue papers at local levels in the Qutb Shahi Sultanate were prepared largely in Telugu, the royal edicts were often bilingual.'06 The last Qutb Shahi Sultan, Abul Hasan Tana Shah, sometimes issued his orders only in Telugu, with a Persian summary given on the back of the farmans."". 
  4. Iran and the Deccan: Persianate Art, Culture, and Talent in Circulation, 1400–1700. பார்க்கப்பட்ட நாள் 1 July 2020.
  5. A Comprehensive History of Medieval India: From Twelfth to the Mid-Eighteenth Century.
  6. A Textbook of Medieval Indian History.
  7. 7.0 7.1 C.E. Bosworth, The New Islamic Dynasties, (Columbia University Press, 1996), 328.
  8. Farooqui Salma Ahmed (2011). A Comprehensive History of Medieval India: From Twelfth to the Mid-Eighteenth Century. Pearson Education India. pp. 177–179. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131732021.Farooqui Salma Ahmed (2011).
  9. 9.0 9.1 9.2 Satish Chandra, Medieval India: From Sultanat to the Mughals, Part II, (Har-Anand, 2009), 210.
  10. 10.0 10.1 10.2 Richard M. Eaton, A Social History of the Deccan, 1300-1761: Eight Indian Lives, Vol. 1, (Cambridge University Press, 2005), 142-143.
  11. Nigam. Romance of Hyderabad Culture. Deva Publications. p. 50.
  12. Minorsky, V. (1955). "The Qara-qoyunlu and the Qutb-shāhs (Turkmenica, 10)". Bulletin of the School of Oriental and African Studies, University of London (Cambridge University Pres) 17 (1): 50–73. doi:10.1017/S0041977X00106342. https://www.jstor.org/stable/609229. பார்த்த நாள்: 20 November 2020. 
  13. 13.0 13.1 George Michell, Mark Zebrowski, Architecture and Art of the Deccan Sultanates, (Cambridge University Press, 1999), 17.
  14. Masʻūd Ḥusain K̲h̲ān̲, Mohammad Quli Qutb Shah, Volume 216, (Sahitya Akademi, 1996), 2.
  15. Annemarie Schimmel, Classical Urdu Literature from the Beginning to Iqbāl, (Otto Harrassowitz, 1975), 143.
  16. Satish Chandra, Medieval India: From Sultanat to the Mughals, Part II, (Har-Anand, 2009), 331.
  17. Moreland, W.H. (1931). Relation of Golconda in the Early Seventeenth Century. Halyukt Society. pp. 78, 89.
  18. A Social and Historical Introduction to the Deccan, 1323-1687, Richard M. Eaton, Sultans of the South: Arts of India's Deccan Courts, 1323-1687, ed.
  19. "Opinion A Hyderabadi conundrum". 15 November 2018.
  20. Akbar, Syed (2019-01-05). "Lazzat-Un-Nisa: Hyderabad's own Kamasutra back in focus - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-01-05.
  21. 21.0 21.1 Salma Ahmed Farooqui, A Comprehensive History of Medieval India: From Twelfth to the Mid-Eighteenth Century, (Dorling Kindersley Pvt.
  22. Centre, UNESCO World Heritage. "The Qutb Shahi Monuments of Hyderabad Golconda Fort, Qutb Shahi Tombs, Charminar - UNESCO World Heritage Centre". whc.unesco.org (in ஆங்கிலம்). Archived from the original on 1 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-09-28.
  23. Islam in South Asia: Practicing tradition today, Karen G. Ruffle, South Asian Religions: Tradition and Today, ed.
  24. Sarma, Mukkamala Radhakrishna; Committee, Osmania University Dept of Ancient Indian History, Culture & Archaeology Felicitation; History, Osmania University Dept of (2004). Glimpses of our past--historical researches: festschrift in honour of Prof. Mukkamala Radhakrishna Sarma, former emeritus fellow (in ஆங்கிலம்). Felicitation Committee, Dept. of Ancient Indian History, Culture, and Archaeology & Dept. of History, Osmania University. p. 326.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  25. Centre, UNESCO World Heritage. "The Qutb Shahi Monuments of Hyderabad Golconda Fort, Qutb Shahi Tombs, Charminar - UNESCO World Heritage Centre". whc.unesco.org (in ஆங்கிலம்). Archived from the original on 1 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-09-28.Centre, UNESCO World Heritage.

மேலும் படிக்க

[தொகு]
  • Chopra, R. M., The Rise, Growth And Decline of Indo-Persian Literature, 2012, Iran Culture House, New Delhi.
  • Jawed Vashisht, Ghizal-e Raana (A selection of Quli Qutab Shah's ghazals)
  • Jawed Vashisht, Roop Ras (Romantic poems of Quli Qutab Shah)
  • Jawed Vashisht, Mohammed Quli aur Nabi ka Sadka
  • Jawed Vashisht, Dakhni Darpan

வெளி இணைப்புகள்

[தொகு]