உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தீசு பக்ராசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தீசு சந்திர பக்ராசி
Satish Chandra Pakrashi
সতীশচন্দ্র পাকড়াশী
மேற்கு வங்க மாநிலக் குழு உறுப்பினர்
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பதவியில்
1964–1973
Member
மேற்கு வங்காள சட்ட மேலவை
பதவியில்
1957–1963
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1893-12-00)திசம்பர் 1893
மாதவ்திகி, டாக்கா மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு30 திசம்பர் 1973(1973-12-30) (அகவை 79–80)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சி
அறியப்படுவதுபொதுவுடைமை புரட்சியாளர், சுதந்திரப் போராட்ட வீரர்

சத்தீசு சந்திர பக்ராசி (Satish Pakrashi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொதுவுடைமைப் புரட்சியாளரும் சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.[1] 1893 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இவர் பிறந்தார். மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகவும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தார்.[2]

ஆரம்பகால வாழ்க்கையும் மரணமும்

[தொகு]

சத்தீசு சந்திர பக்ராசி 1893 டிசம்பரில் வங்காள மாகாணத்தின் (நவீன வங்காளதேசம்) டாக்கா மாதவ்திகி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சகதீசுசந்திர பக்ராசியாகும். இவரது தாயின் பெயர் மிருணாளினி பக்ராசி என்பதாகும்.[3]

சத்தீசு பக்ராசி தீவிர நோயால் பாதிக்கப்பட்டு 1973 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31 ஆம் நாளன்று கல்கத்தா மருத்துவமனையில் இறந்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ஆறு ஆண்டுகள் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக சத்தீசு பக்ராசி இருந்தார்.

1929 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இந்தியாவில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியைத் திட்டமிட்டதற்காக சத்தீசு மற்றும் பிறரை பிரித்தானியப் படைகள் கைது செய்து 7 ஆண்டுகள் செல்லுலார் சிறையில் அடைத்தனர். பின்னர் இவர் 1938 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Unsung Heroes Detail - Satishchandra Pakrashi". Amrit Mahotsav. Government of India. பார்க்கப்பட்ட நாள் 3 August 2024.
  2. Author: Swapan Kumar Chakravorty, Title: "Midnapur: A Study in Indian Politics", Publisher: Primus Books, Year: 2019, Page: 221, URL: [link](https://books.google.co.in/books?id=i4poDwAAQBAJ&pg=PT221&dq=satish+pakrashi+CPIM&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwi1nZG2w5SGAxVqbmwGHWFpCMAQ6AF6BAgMEAM#v=onepage&q=satish%20pakrashi%20CPIM&f=false)
  3. Website: Amrit Mahotsav, Title: "Unsung Heroes", URL: [link](https://amritmahotsav.nic.in/unsung-heroes-detail.htm?4409)
  4. BHATTACHARYA, CHANDRIMA S. (19 December 2022). "Yesterdate: This day from Kolkata's past, December 19, 1929". Telegraph India. https://www.telegraphindia.com/my-kolkata/news/yesterdate-this-day-from-kolkatas-past-december-19-1929/cid/1904580.