உள்ளடக்கத்துக்குச் செல்

சத்லஜ் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சத்லஜ் ஆறு (பஞ்சாபி: ਸਤਲੁਜ, சமஸ்கிருதம்: शतद्रु \ सुतुद्री, உருது: ستلج, இந்தி: सतलुज) பஞ்சாபில் பாயும் ஆறுகளில் மிகவும் நீளமானதாகும். கயிலை மலைக்கு அருகிலுள்ள இராட்சசதல ஏரியில் உற்பத்தியாகிறது. இது மேற்கு, தென்மேற்காக பாய்ந்து சிறப்புமிக்க ஒருங்கிணைந்த பஞ்சாபில் பாய்ந்து அதை வளம் கொழிக்கச்செய்கிறது.[1] இதற்கு கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பகுதி வறண்டதாகும் இதுவே தார் பாலைவனம் எனப்படுகிறது.

இந்திய பஞ்சாபில் பியாஸ் ஆறு இதனுடன் இணைகிறது, பாகிஸ்தான் பஞ்சாபில் செனாப் ஆறு இதனுடன் இணைந்ததும் பஞ்சநாடு ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் கலக்கிறது. இந்திய பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட சிந்து நீர் ஒப்பந்தம் சத்லஜ் ஆற்று நீரை இந்தியா வேளாண்மைக்கு பயன்படுத்த அனுமதிக்கிறது. பக்ரா-நங்கல் திட்டம் சத்லஜ் ஆற்று நீரை பெருமளவில் பயன்படுத்த ஏற்படுத்தப்பட்டதாகும்.[2]

லூதியானா & பாகிஸ்தானின் பகவல்பூர் இவ்வாற்றின் கரையில் அமைந்த பெரிய நகரங்களாகும்.

சத்லஜ் ஆறு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Asiatic Society of Bengal (1848). Journal of the Asiatic Society of Bengal, Volume 17, Part 1. p. 210, paragraph two.
  2. "Bhakra Beas Management Board". wrmin.nic.in. Archived from the original on 31 August 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்லஜ்_ஆறு&oldid=3911666" இலிருந்து மீள்விக்கப்பட்டது