சாவோ லூயிசு
சாவோ லூயிசு | |
---|---|
நகராட்சி | |
சாவோ லூயிசு டொ மாரன்யோ நகராட்சி | |
சாவோ லூயிசு அமைவிடம் | |
நாடு | பிரேசில் |
மண்டலம் | வடகிழக்கு மண்டலம் |
மாநிலம் | மாரன்யோ |
நிறுவியது | செப்டம்பர் 8, 1612 |
அரசு | |
• நகரத்தந்தை | எடிவால்டோ ஓலந்தா ஜூனியர் |
பரப்பளவு | |
• நகராட்சி | 827.141 km2 (319.360 sq mi) |
ஏற்றம் | 4 m (12 ft) |
மக்கள்தொகை (2010 IBGE) | |
• நகராட்சி | 10,11,943 |
• அடர்த்தி | 1,183.4/km2 (3,064.9/sq mi) |
• பெருநகர் | 12,27,659 |
நேர வலயம் | ஒசநே-3 (UTC-3) |
அஞ்சல் குறியீடு | 65000-000 |
இடக் குறியீடு | +55 98 |
இணையதளம் | சாவோ லூயிசு, மாரன்யோ |
சாவோ லூயிசு (São Luís, ஆங்கிலம்: Saint Louis) பிரேசிலிய மாநிலம் மாரன்யோவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். இந்த நகரம்சாவோ மார்கோசு விரிகுடாவில் உள்ள சாவோ லூயிசு தீவில் அமைந்துள்ளது. நகரத்தின் மக்கள்தொகை 2008இல் 986,826 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை ஆக உள்ளது. இது பிரேசிலில் 16வது மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது.
சாவோ லூயிசு நகரத்தை பிரான்சு நிறுவியது. பிரேசிலில் தீவுகளில் அமைந்துள்ள மூன்று நகரங்களில் ஒன்றாக சாவோ லூயிசு விளங்குகிறது. இந்த நகரத்தில் இரண்டு துறைமுகங்கள் அமைந்துள்ளன: மதீரா துறைமுகம், இட்டாகுயி துறைமுகம். இவற்றின் வழியாக பிரேசிலின் அமேசானில் கிடைக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள முதன்மையான தொழிலாக மாழை தொழிலகங்கள் (ஆலுமார், வேல்) இயங்குகின்றன. மாரன்யோ கூட்டரசு பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.
இங்கு குடியேறிய முதல் ஐரோப்பியர்கள் பிரான்சியர் ஆவர். 1612இல் பிரான்சு இதனை தங்கள் குடியேற்றத்திற்கான மையமாக்க திட்டமிட்டிருந்தனர். இங்கு தங்கள் அரசர் மற்றும் அவரது புனித மூதாதையின் நினைவாக செயின்ட் லூயி என்ற கோட்டையை கட்டினர். இந்த நகரத்தை 1615இல் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இதற்கு சாவோ லூயிசு எனப் பெயர்மாற்றம் செய்தனர்.
சாவோ லூயிசின் மூதாதைகளின் பாலிலாப் பண்பணுப் பாரம்பரிய டி. என். ஏ. ஆய்வின்படி, 42% ஐரோப்பியர்கள், 39% உள்நாட்டு அமெரிக்கர் மற்றும் 19% ஆபிரிக்கர் ஆகும்.[1]
சாவோ லூயிசை அழைக்க உள்ளூர் பகுதிக்கான தொலைபேசிக் குறியீடு (பிரேசிலில் இது டிடிடி எனப்படுகிறது) 98 (DDD98) ஆகும்.[2]
வெளி இணைப்புகள்
[தொகு] விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ http://www.scielo.br/scielo.php?script=sci_arttext&pid=S1415-47572005000100004
- ↑ "São Luis do Maranhao, DDD98 area phone code". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 12, 2012.