சிரிஷா பண்ட்லா
சிரிஷா பண்ட்லா | |
---|---|
தேசியம் | அமெரிக்கா |
நிலை | செயலில் |
பிறப்பு | குண்டூர், ஆந்திரப் பிரதேசம், India[1] |
தற்போதைய பணி | அரசாங்க விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவர், விர்ஜின் கேலக்டிக் |
பயின்ற கல்வி நிலையங்கள் | பர்டூ பல்கலைக்கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் |
விண்வெளி நேரம் | 1 நிமிடம் 10 நொடிகள் |
தெரிவு | விர்ஜின் கேலக்டிக் |
பயணங்கள் | விர்ஜின் கேலக்டிக் யூனிடி 22 |
திட்டச் சின்னம் |
சிரிஷா பண்ட்லா ( c. 1988) (Sirisha Bandla) ஒரு இந்திய-அமெரிக்க விமானப் பொறியாளர் ஆவார். [2] இவர் விர்ஜின் கேலக்டிக் அரசாங்க விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக உள்ளார். [3] மேலும், இவர் விர்ஜின் கேலக்டிக் யூனிட்டி 22 மிஷனில் பறந்தார், இதனால் இவர், இந்தியாவில் பிறந்த இரண்டாவது பெண் விண்வெளிக்குச் சென்றது மற்றும் ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளிக் கோட்டைக் கடந்த நான்காவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். [4] [5] [6]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]சிரிஷா பண்ட்லா இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு பேசும் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். [7] [8] இவர் பிறந்த பிறகு, பண்ட்லாவின் குடும்பம் குண்டூரில் உள்ள தெனாலிக்கு குடிபெயர்ந்தது. ஐந்து வயது வரை, பண்ட்லா தனது நேரத்தை ஹைதராபாத்தில் உள்ள தனது தாத்தாவின் வீட்டிற்கும் தெனாலியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கும் பிரித்துக் கொண்டார். [9] [10] பண்ட்லா பின்னர் தனது பெற்றோருடன் அமெரிக்காவின் ஹூஸ்டனுக்கு குடிபெயர்ந்தார்.
பண்ட்லா பர்டூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும், இவர், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [11]
தொழில்
[தொகு]பண்ட்லா நாசா விண்வெளி வீரராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இவரது கண்பார்வை காரணமாக மருத்துவ காரணங்களால் விலக்கப்பட்டார். [12] இவர் முன்பு வணிக விண்வெளிப் பயணக் கூட்டமைப்பிற்காக மேத்யூ இசகோவிட்ஸுடன் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றினார். [13] பின்னர் அவரது நினைவாக மேத்யூ இசகோவிட்ஸ் பெல்லோஷிப்பை இவர் இணைந்து நிறுவினார். [14]
பண்ட்லா 2015 இல் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தில் சேர்ந்தார், அங்கு இவர் அரசாங்க விவகாரங்களின் துணைத் தலைவராக பணியாற்றினார். [15] ஞாயிற்றுக்கிழமை, ஜூலை11, 2021 அன்று சர் ரிச்சர்ட் பிரான்சன், டேவ் மேக்கே, மைக்கேல் மசூசி, பெத் மோசஸ், கொலின் பென்னட் ஆகியோருடன் விர்ஜின் கேலக்டிக் யூனிட்டி 22 சோதனை விமானத்தில் பண்ட்லா பறந்தார். ராக்கெட் விமானம் 85 km (53 mi) பூமிக்கு மேலே பறந்தது. இதன் மூலம் குழுவினர் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் (FAA) வணிக விண்வெளி வீரர்களாக தகுதி பெறுகின்றனர். விமான பயணத்தின் போது, புளோரிடா பல்கலைக்கழகத்தில் இருந்து புவியீர்ப்பு மாற்றத்திற்கு தாவரங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதை ஆராய பண்ட்லா ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். இவரது விமானப் பயணம் பற்றி, பண்ட்லாவின் தாத்தா டாக்டர் பண்ட்லா ராகய்யா கூறினார்: “சிறு வயதிலிருந்தே, வானம், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை ஆராய்வதில் இவருக்கு இந்த லட்சியம் இருந்தது. சிரிஷா தனது கண்களை விண்வெளியில் வைத்துள்ளார், மேலும் இவர் தனது கனவை நனவாக்கத் தயாராக இருப்பதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை." [16] அவரது விண்வெளிப் பயணத்தின் போது, அவர், பூமியின் மேற்பரப்பில் இருந்து 89.9 கி.மீ உயரத்தை எட்டினார். இருப்பினும், அவர் விமானக் குழுவில் உறுப்பினராக இல்லாததால் (VF-01 ஒரு தானியங்கி ஏவுதல் என்பதால்), அவர் ஃபெடரல் ஏவியேஷன் ஆணையத்தால் ஒரு விண்வெளி சுற்றுலாப் பயணியாக வகைப்படுத்தப்பட்டார். [17]
டிசம்பர் 2022 இல் பிபிசியின் 100 பெண்களில் ஒருவராக இவர் கௌரவிக்கப்பட்டார் [18]
சான்றுகள்
[தொகு]- ↑ "Meet Sirisha Bandla: India-born woman set to go to space alongside Richard Branson". The Economic Times. July 10, 2021. பார்க்கப்பட்ட நாள் July 25, 2021.
- ↑ Fisher, Kristin (10 December 2021). "First on CNN: The US gives Bezos, Branson and Shatner their astronaut wings". CNN. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
The US government is making it official, Jeff Bezos, Richard Branson, and William Shatner have earned the title of astronaut after their flights to the edge of space. The Federal Aviation Administration will also award Commercial Space Astronaut Wings to 12 other people who have flown at least 50 miles above Earth on a FAA licensed commercial spacecraft, including the crew of SpaceX's Inspiration4 mission. The FAA will award wings to eight people who flew on Blue Origin's New Shepherd spacecraft, three who flew on Virgin Galactic's SpaceShipTwo, and to the four members of the SpaceX crew who spent three days in space in September.
- ↑ "Exclusive: Sirisha Bandla's Proud Grandfather on Second India-Born Woman in Space". The Better India (in ஆங்கிலம்). 2021-07-06. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
- ↑ "Sirisha Bandla: India celebrates woman who flew on Virgin Galactic" (in en-GB). 2021-07-12. https://www.bbc.com/news/world-asia-india-57801518.
- ↑ "Family of Indian-American astronaut on Virgin Galactic crew "happy and overwhelmed"". Reuters. 2021-07-05. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
- ↑ Madhok, Diksha (12 July 2021). "Sirisha Bandla, India-born woman and Virgin Galactic executive, flies into space with Richard Branson". CNN. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
- ↑ "Andhra Pradesh-Born Sirisha Bandla Will Be Second Indian-Origin Woman To Fly To Space". outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
- ↑ "India-Born Sirisha Bandla To Fly On Virgin Galactic Spacecraft Tomorrow". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
- ↑ "Sirisha Bandla goes to space: 'Always wanted to explore sky, stars'". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-12. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
- ↑ Pandey, Ashish (July 11, 2021). "A look at childhood photographs of Indian-American astronaut Sirisha Bandla before she zooms off into space". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
- ↑ "Sirisha Bandla will become the second Indian-born woman to fly into space". https://economictimes.indiatimes.com/tech/tech-bytes/sirisha-bandla-will-become-the-second-indian-born-woman-to-fly-into-space/articleshow/84073727.cms.
- ↑ "Indian-origin aeronautical engineer Sirisha Bandla set to fly into space on Virgin Galactic spacecraft". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/science/indian-origin-aeronautical-engineer-shirisha-bandla-set-to-fly-into-space-on-virgin-galactic-spacecraft/articleshow/84290566.cms?from=mdr. பார்த்த நாள்: 2021-07-13."Indian-origin aeronautical engineer Sirisha Bandla set to fly into space on Virgin Galactic spacecraft".
- ↑ "Sirisha Bandla will become the second Indian-born woman to fly into space". The Economic Times. https://economictimes.indiatimes.com/tech/tech-bytes/sirisha-bandla-will-become-the-second-indian-born-woman-to-fly-into-space/articleshow/84073727.cms. பார்த்த நாள்: 2021-07-13."Sirisha Bandla will become the second Indian-born woman to fly into space".
- ↑ "MIFP Team Member Sirisha Bandla Earns Astronaut Wings on Virgin Galactic Spaceflight". Matthew Isakowitz Fellowship Program (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
- ↑ "Family of Indian-American astronaut on Virgin Galactic crew "happy and overwhelmed"". Reuters. 2021-07-05. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13."Family of Indian-American astronaut on Virgin Galactic crew "happy and overwhelmed"".
- ↑ "Sirisha Bandla goes to space: 'Always wanted to explore sky, stars'". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-12. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13."Sirisha Bandla goes to space: 'Always wanted to explore sky, stars'".
- ↑ "FAA Commercial Space Policy" (PDF).
- ↑ "BBC 100 Women 2022: Who is on the list this year?". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.