சீசர் விருது
Appearance
சீசர் விருது | |
---|---|
2000ஆம் ஆண்டின் சீசர் விருது விழாவின்போது | |
விளக்கம் | சிறந்தத் திரைப்படம் |
நாடு | பிரான்சு |
வழங்குபவர் | திரைப்படக் கலை மற்றும் தொழில்நுட்ப அகாதமி Académie des Arts et Techniques du Cinéma |
முதலில் வழங்கப்பட்டது | 1975 |
இணையதளம் | http://www.lescesarducinema.com/ |
சீசர் விருது (César Award) பிரான்சின் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும். 1975ஆம் ஆண்டில் முதல் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான நியமனங்களை திரைப்படக் கலை மற்றும் தொழில்நுட்ப அகாதமி (Académie des arts et techniques du cinéma) தேர்ந்தெடுக்கிறது.[1]
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரியில் பாரிசில் உள்ள சாடெலெட் தியேட்டரில் நடைபெறும் விருது வழங்கும் விழா நாடெங்கும் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப் படுகிறது.
இந்த விருது 1921 - 1998இல் வாழ்ந்த சிற்பக்கலைஞர் சீசர் பால்டச்சினி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. வழங்கப்படும் விருதுகள் இந்தக் கலைஞரின் சிற்பங்களின் படியாகும். இந்த விருதுகள் அமெரிக்காவின் ஆசுகார் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.