உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியத் தொலைநோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Alt
சிகீனரின் சூரியத் தொலைநோக்கி

சூரியத் தொலைநோக்கி (Helioscope) என்பது சூரியனையும் சூரியப்புள்ளிகளையும் உற்றுநோக்கி ஆராய உதவும் ஒரு கருவியாகும். 1578 முதல் 1643 வரையிலான காலத்தைச் சார்ந்த பெனிதெட்டோ காசிடெல்லி முதன்முதலில் இத்தொலை நோக்கியை உபயோகித்தார். பின்னர் 1564 முதல் 1642 வரையிலான காலத்தைச் சார்ந்த கலீலியோ இத்தொலை நோக்கியை மேம்படுத்தினார். தொலைநோக்கியைப் பயன்படுத்தி சூரியனின் பிம்பத்தை இருட்டறையில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு வெள்ளைக் காகிதத்தில் படம்பிடிப்பது இம்முறையின் வழிமுறையாகும்[1][2]

1575 முதல் 1650 வரையிலான காலத்தைச் சார்ந்த கிரிசுதோப் சிகீனர் அவருடைய சூரியப்புள்ளி உற்றுநோக்கல் ஆய்வுக்கு உதவியாக முதன்முதலில் சூரியத் தொலைநோக்கியை வடிவமைத்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Helioscope - Museo Galileo
  2. Helioscope video - Museo Galileo
  3. Scheiner, Christoph (1630). Rosa Ursina. pp. 137–8. {{cite book}}: External link in |title= (help) (Latin)