டியாக்சி சர்க்கரைகள்
Appearance
ரைபோசு (மேலே) மற்றும் [டியாக்சிரைபோசு (கீழே).கட்டமைப்புகளின் ஒப்பீடு |
டியாக்சி சர்க்கரைகள்[1] (Deoxy sugars) என்பவை ஐதராக்சில் குழு நீக்கப்பட்ட சர்க்கரைகளைக் குறிக்கும். இவ்வாறு நீக்கப்படும் ஐதராக்சில் குழுக்கள் ஐதரசன் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டுகள்:
- டியாக்சிரைபோசு, அல்லது 2-டியாக்சி-டி-ரைபோசு, டி.என்.ஏ வின் பகுதிக்கூறு.
- பியூகோசு, அல்லது 6-டியாக்சி-எல்-காலக்டோசு, பழுப்பு பாசியின் பியூகோயிடனில் உள்ள முக்கியமான பகுதிக்கூறாகும். என் இணைப்பு கிளைகேன்களிலும் இது காணப்படுகிறது.
- பியூகுளோசு, அல்லது 6-டியாக்சி-எல்-டாகேட்டோசு, ஏவியன் இன்புளுவென்சா வைரசின் பகுதிக்கூறுகளில் ஒன்றாகும்.
- ரேமினோசு, அல்லது 6-டியாக்சி-எல்-மேனோசு, தாவர கிளைக்கோசைடுகளில் காணப்படுகிறது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deoxy sugars". Nature Publishing Group. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.