உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தூரி சிக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தந்தூரி சிக்கன்
தந்தூரி சிக்கன் மும்பை,இந்தியா
மாற்றுப் பெயர்கள்இல்லை[1][2][3][4] [5][6][7][8][9]
பரிமாறப்படும் வெப்பநிலைபசி தூண்டி அல்லது முக்கிய உணவு
பகுதிஇந்தியா[6][7][8] [10][11][12]
முக்கிய சேர்பொருட்கள்கோழி இறைச்சி, தயிர் தேன், தந்தூரி மசாலா
வேறுபாடுகள்பன்னீர், மீன் தந்தூரி

தந்தூரி சிக்கன் என்பது தெற்காசியா உணவாகும், தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊறவைக்கப்பட்டு செய்யப்படும் உணவாகும். இது ஒரு உருளை வடிவ களிமண் அடுப்பில் வறுத்தெடுக்கப்படுகிறது. தற்பொழுது இந்த உணவு உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாகும். 1940 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புது டில்லியில் உள்ள மோதி மஹால் உணவகத்தால் இந்த உணவின் நவீன வடிவம் பிரபலப்படுத்தப்பட்டது.

தோற்றம்

[தொகு]

இந்தியாவில் வெண்கல காலத்தில், ஹரப்பா நாகரிகத்தின் போது தந்தூரி சிக்கன் போன்ற உணவு வகைகள் இருந்திருக்கலாம்.தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் ஷிண்டேவின் கூற்றுப்படி தந்தூரி சிக்கன் போன்ற உணவிற்கான தொடக்ககால சான்றுகள் ஹரப்பா நாகரிகத்தில் கிடத்துள்ளன இவற்றின் காலம் கி.மு.3000.பஞ்சாப் மாநிலத்தில் பயன்படுதப்படும் பழங்கால தந்தூர் போன்ற அடுப்புகளை ஹரப்பா தொல்லியற்தளத்தில் அவரது குழுவினர் கண்டறிந்துள்ளனர்.அதில் கரி அடையாளங்களுடன் கூடிய கோழி எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.[13][14][15] ஹரப்பா வீடுகளில் மையத் தூண்களுடன் கூடிய சாவித் துளை அடுப்புகள் இருந்தன, அவை இறைச்சிகளை வறுக்கவும் ரொட்டி சுடவும் பயன்படுத்தப்பட்டன.சுஷ்ருத சம்ஹிதை இறைச்சியை அடுப்பில் சமைத்தபின்,கருப்பு கடுகு தூள் மற்றும் நறுமண மசாலாப் பொருட்களில் இட்டு இறைச்சி சமைத்ததை பதிவு செய்துள்ளது.[16]

தந்தூரி சிக்கன் ஒரு உணவாக இந்திய பிரிவினைக்கு முன் பஞ்சாபில் உருவானது.[17][18] 1940 ஆண்டில் பெஷாவரில் இருந்து வெளியேறிய பஞ்சாபி இந்துக்களான குந்தன் லால் ஜக்கி மற்றும் குந்தன் லால் குஜ்ரால் ஆகியோரால் புது டெல்லியில் தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள மோதி மஹால் உணவகத்தால் இது பிரபலமடைந்தது.[19][20] இவர்கள் மோதி மஹாலை நிறுவியவர்கள் ஆவார்கள்.[10][21][22][23][24] as well as the founders of the Moti Mahal restaurant.[1][2][3][4][23] மோகா சிங் பிரித்தானியாவின் இந்தியாவின் பெஷாவர் பகுதியில் உணவகத்தை நிறுவினார், அது இப்போது அண்டை நாடான பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ளது.[5][6][25]

தந்தூரி சிக்கன் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1960 ஆம் ஆண்டுகளில் உணவு பட்டியலில் இடம்பெறத் தொடங்கியது.ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ்1962 இல் ரோமில் இருந்து பம்பாய்க்கு வந்த விமானத்தில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.[26] தந்தூரி கோழிக்கறிக்கான செய்முறை 1963 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் அச்சிடப்பட்டது.[27]

செய்முறை

[தொகு]

கோழியின் உடல் பாகங்கள் தோலுரிக்கப்பட்டு, தயிர் மற்றும் தந்தூரி மசாலா,கலவையில் ஊறவைக்கப்படுகின்றன. அவை மிளகு, சிவப்பு மிளகாய் தூள் அல்லது காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் அல்லது உணவு வண்ணம் ஆகியவற்றால் பதப்படுத்தப்பட்டு வண்ணம் பூசப்படுகின்றது.

ஊறவைக்கப்பட கோழியை கம்பியின் மீது வைத்து, ஒரு தந்தூர் அடுப்பில் அதிக வெப்பநிலையில் சமைக்கப்படுகிறது, இது கரி அல்லது மரத்தால் சூடாக்கப்படுகிறது, புகையடித்த சுவையை சேர்க்கிறது. இந்த உணவை ஒரு நிலையான அடுப்பில், அல்லது சூடான கரியின் மீது சமைக்கலாம்.

முழுக்கோழியை சமைப்பதற்க்கான செய்முறைகளும் உள்ளது,அவற்றில் சில தந்தூரிகளிலும்,சில கரி அடுப்புகளிலும் சமைக்கப்படுகிறது.இதில் சிர்கா (வறுத்த முழு கோழி); தந்தூரி முர்க் (பாதாம் பருப்புடன் வறுத்த முழு கோழி) முர்க் கபாப் சீக்கி; கூக்கர் தந்தூரி; தந்தூரி முர்க் மசாலேதார்; மற்றும் முர்கி போகர்.[28]

சமையல் வகை

[தொகு]

தந்தூரி சிக்கன் ஒரு ஆரம்பிக்கும் உணவாகவோ அல்லது பசி தூண்டும் உணாவாகவோ அல்லது முக்கிய உணவாகவோ நான் மற்று ரொட்டியுடன் பரிமாறப்படுகிறது.இது பட்டர் சிக்கன் போன்ற உணவு வகையில் அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. வங்காளத்தில் ரூயி போஸ்டோவில் இருந்து தயாரிக்கப்பட்ட தந்தூரி சிக்கன் உள்ளூர் வகைகள் உள்ளூர் உணவகங்களில், குறிப்பாக கோலாகாட் மற்றும் கொல்கத்தா இடையே உள்ள உணவகங்களில் தோன்றின. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் தந்தூரி சிக்கன், டெல்லியின் தர்யாகஞ்ச், மோதி மஹால் மூலம் பிரபலப்படுத்தப்பட்டது.அது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது. அங்கு, அதிகாரப்பூர்வ விருந்துகளில் தந்தூரி சிக்கன் ஒரு நிலையான உணவாக மாறியது.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Who invented the dal makhani?". NDTV Food. IANS. பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
  2. 2.0 2.1 "Moti Mahal offers complete Tandoori cuisine". Daily Excelsior. August 2013. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.
  3. 3.0 3.1 "10 Best Punjabi Recipes". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.
  4. 4.0 4.1 "What does it mean to be a Punjabi". பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.
  5. 5.0 5.1 "Tandoori Chicken Recipe and History". Indiamarks (in ஆங்கிலம்). June 14, 2012. Archived from the original on July 9, 2012. பார்க்கப்பட்ட நாள் July 7, 2017. After the partition in 1947, Punjab was partitioned with the Eastern portion joining India and the Western, Pakistan. Peshawar became part of Pakistan and Gujral found himself one among many refugees fleeing the rioting and upheaval by moving to India. He moved his restaurant to Delhi in a place called Daryagunj. The Tandoori chicken at Moti Mahal so impressed the first Prime Minister of India, Jawaharlal Nehru that he made it a regular at official banquets.
  6. 6.0 6.1 6.2 Dinesh (October 10, 2008). "Origin of Tandoori Chicken". Indian Foods Guide (in ஆங்கிலம்). Archived from the original on August 2, 2022. பார்க்கப்பட்ட நாள் July 7, 2017. After the partition in 1947, Punjab was partitioned with the Eastern portion joining India and the Western, Pakistan. Peshawar became part of Pakistan and Gujral found himself one among many refugees fleeing the rioting and upheaval by moving to India. He moved his restaurant to Delhi in a place called Daryaganj. The Tandoori chicken at Moti Mahal so impressed the first Prime Minister of India, Jawaharlal Nehru that he made it a regular at official banquets.
  7. 7.0 7.1 Vellampalli, Jaya (June 14, 2017). "The tale of Tandoori chicken" (in ஆங்கிலம்). Telangana Today. Archived from the original on August 2, 2019. பார்க்கப்பட்ட நாள் August 2, 2022. But, do you know what ingredients are used in making this yummy dish, or who invented it? The credit goes to Kundan Lal Gujral, a Punjabi. He invented the recipe of Tandoori chicken at his restaurant Moti Mahal Delux in Delhi.
  8. 8.0 8.1 Behura, Monica (July 21, 2008). "High on bar Be Cues" (in ஆங்கிலம்). தி எகனாமிக் டைம்ஸ். Archived from the original on September 22, 2019. பார்க்கப்பட்ட நாள் August 2, 2022. A pearl among connoisseurs of true blue north western frontier province cuisine, it (Delhi) prides itself as the inventor of the tandoori chicken.
  9. Vishal, Anoothi (August 14, 2017). "Partition Changed India's Food Cultures Forever" (in ஆங்கிலம்). The Wire. Archived from the original on August 2, 2019. பார்க்கப்பட்ட நாள் August 2, 2022. As a new immigrant community poured in from across the new border, new tastes and techniques gained ground. Tandoori became the food of Delhi.
  10. 10.0 10.1 "Punjab on a platter". 31 March 2018.
  11. Gujral, Monish (7 March 2013). On the Butter Chicken Trail: A Moti Mahal Cookbook (1.0 ed.). Delhi, India: Penguin India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143419860.
  12. Hosking, Richard (8 August 2006). Authenticity in the kitchen: proceedings of the Oxford Symposium on food and cookery 2005 (1 ed.). Blackawton: Prospect Books. p. 393. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781903018477.
  13. Lawler, Andrew (30 January 2013). "The Mystery of Curry".
  14. Ritu, Grishm. "Virasat" (PDF).
  15. Bhuyan, Avantika (9 April 2017). "How archaeologists across the country are unearthing the food of ancestors to shed light on the evolution of eating". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/how-archaeologists-across-the-country-are-unearthing-the-food-of-ancestors-to-shed-light-on-the-evolution-of-eating/articleshow/58085366.cms. 
  16. "Full text of "Indian Food Tradition A Historical Companion Achaya K. T."". archive.org. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
  17. Sanghvi, Vir (22 April 2004). Rude Food: The Collected Food Writings of Vir Sanghvi. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143031390 – via Google Books.
  18. "Metro Plus Delhi / Food: A plateful of grain". தி இந்து (Chennai, India). 24 November 2008 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629015351/http://www.hindu.com/mp/2008/11/24/stories/2008112450160200.htm. 
  19. "Punjab on a platter". Hindustan Times. 31 March 2018.
  20. "The History of Tandoori Chicken: Infographics". https://timesofindia.indiatimes.com/life-style/food-news/the-history-of-tandoori-chicken-infographics/articleshow/75203860.cms. 
  21. "'Vadiya Khao': Refugees taught Delhi how to eat out in style". Hindustan Times. 14 August 2017. https://www.hindustantimes.com/delhi-news/vadiya-khao-refugees-taught-delhi-how-to-eat-out-in-style/story-Y5sG96AYWu7gQ9e5V6TXxN.html. 
  22. "ICC 2017 by IFCA – Showcasing the culinary spirit of IndiaKundan". Hospitality Biz India. 11 October 2017.
  23. 23.0 23.1 "Partition brought Moti Mahal, a landmark in India's culinary history, to central Delhi". Sunday Guardian இம் மூலத்தில் இருந்து 2015-06-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150611000137/http://www.sunday-guardian.com/investigation/partition-brought-moti-mahal-a-landmark-in-indias-culinary-history-to-central-delhi. 
  24. Laura Siciliano-Rosen (13 January 2014). "Delhi Food and Travel Guide: The inside scoop on the best North Indian foods".
  25. "Tandoori Chicken – A Royal Punjabi Dish – DESIblitz". DESIblitz. 22 April 2009.
  26. Matt Weinstock, "Strange Beast Puts the Bite on Robert" Los Angeles Times (15 March 1962): A6.
  27. "East Indian Cuisine Provides Inspiration for Hostesses" Los Angeles Times (14 March 1963): D6.
  28. Singh, Dharamjit (1970). Indian Cookery. London: Penguin Handbooks. pp. 119–124.