உள்ளடக்கத்துக்குச் செல்

தாழைக் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாழைக்கோழி
Common moorhen
மகராட்டிராவின் மன்கோன் பகுதியில்
call
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
இராலிடே
பேரினம்:
கேலினுலா
இனம்:
G. chloropus
இருசொற் பெயரீடு
Gallinula chloropus
(லின்னேயஸ், 1758)
தாழைக்கோழியின் பரம்பல்      இனப்பெருக்க பகுதிகள்      வாழிடம்      இனப்பெருக்கமில்லா காலப்பகுதி      மறைந்து போனப் பகுதிகள்
வேறு பெயர்கள்

புலிகா குளோரோபசு லின்னேயஸ், 1758

தாழைக்கோழி (Common Moorhen) என்பது நீர்க்கோழியில் ஓர் வகையாகும். இது இராலிடே குடும்பத்தை சார்ந்தது பறவையாகும். உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது.[2] பொதுவான தாழைக் கோழிகள் தாவரங்கள் நிறைந்த சதுப்பு நிலங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் பிற ஈரநிலங்களைச் சுற்றி வாழ்கின்றன. துருவப் பகுதிகளிலும் வெப்பமண்டல மழைக்காடுகளிலும் இவைக் காணப்படவில்லை. சில பிராந்தியங்களில் யூரேசியன் நாமக்கோழி தவிர, மற்ற இடங்களில் இது மிகவும் பொதுவான சிற்றினமாகக் காணப்படுகிறது. புதிய உலக பொது நாமக்கோழி 2011-ல் அமெரிக்க பறவையியலாளர்கள் ஒன்றியம் மற்றும் பன்னாட்டு பறவையியல் குழுவினால்[2] தனிச் சிற்றினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3]

பெயர்கள்

[தொகு]

தாழைக்கோழியின் ஆங்கிலப் பெயரான மூர்-கென் என்ற பெயர் 13ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. [4] மூர் என்ற சொல் சதுப்பு நிலம் என்று பொருள்படும்.[4] ஆனால் இந்த சிற்றினம் பொதுவாக கரம்பைநிலங்களில் காணப்படுவதில்லை. ஒரு பழைய பொதுவான பெயரான நீர்க்கோழி என்பது இந்தப் பறவையின் வாழ்விடத்தை மிகவும் விவரிக்கிறது.[5] இதன் விலங்கியல் பெயரான, கலினுலா குளோரோபசு என்ற லத்தீன் சொல்லின் கலினுலா என்பது ஒரு சிறிய கோழி அல்லது கோழி என்ற கிரேக்கச் சொல்லான குளோரோபசு (குளோரோசு χλωρός பச்சை அல்லது மஞ்சள், பவுசு πούς கால்) ஆகியவற்றிலிருந்து வந்தது.[6]

உடலமைப்பு

[தொகு]

தாழைக் கோழியின் உடல் நீளம் சுமார் 30 முதல் 38 செ.மீ. நீளமுடையது. தண்ணீரில் நீந்தும்போது வாத்துப் போலவும் தரையில் திரியும் போது கானான் கோழி போலவும் தோற்றம் கொண்டது. சிலேட் சாம்பல் நிற உடலைக் கொண்ட இதனுடைய வாலடி வெள்ளையாக இருப்பது கொண்டு அடையாளம் காணலாம்.

காணப்படும் பகுதிகள், உணவு

[தொகு]

தமிழகம் எங்கும் பரவலாகக் காணப்படும் நீர்க்கோழி இனம் இது ஒன்றே. ஆணும் பெண்ணும் இணையாக நீர்ப்பரப்பின் மீது வாலை அசைத்தபடி வாத்தைப் போல நீந்தியவாறு தாவர விதைகள், நத்தை, தவளை, சிறு மீன் ஆகியவற்றைத் தேடித்தின்னும், கரையோரத்தில் உள்ள நாணல், தாழைப் புதர்களைவிட்டு தண்ணீரில் நெடுந்தொலைவு நீந்திச் செல்லும் பழக்கம் கொண்டது. பறக்க முற்படும்போது சற்று நேரம் இறக்கை அடித்துப் பின் எழுந்து பறக்கும். பறக்கும் திறமை குறைந்தது எனினும் இடம் பெயர நேரும் போது உயர்ந்த மலைகளையும் கடந்து பறந்து செல்லும் திறனுடையது. நீரில் மூழ்கி மறைந்தபடி ஆபத்திலிருந்து தப்பிக்கும் தன்மையுடையது. க்க்ரீக் க்ரெக் ரெக் ரெக் என இனப்பெருக்க காலத்தில் குரல் கொடுக்கக் கேட்கலாம்.[7]

இனப்பெருக்கம்

[தொகு]

சூன் முதல் செப்டம்பர் வரை நீரருகே நாணல், தாழை புதர்களிடையே நீர்த்தாவரங்களைச் சேகரித்து மேடையிட்டு 5 முதல் 12 முட்டைகள் வரை இடும்.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gallinula chloropus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2014. பார்க்கப்பட்ட நாள் 7 June 2015. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 "Common Moorhen (Gallinula chloropus) Linnaeus, 1758". Avibase. பார்க்கப்பட்ட நாள் 1 November 2013.
  3. Chesser, R. Terry; Banks, Richard C.; Barker, F. Keith; Cicero, Carla; Dunn, Jon L.; Kratter, Andrew W.; Lovette, Irby J.; Rasmussen, Pamela C. et al. (2011). "Fifty-second supplement to the American Ornithologists' Union Check-List of North American Birds". Auk 128 (3): 600–613. doi:10.1525/auk.2011.128.3.600. https://zenodo.org/record/1236289. 
  4. 4.0 4.1 Lockwood, W.B. (1993). The Oxford Dictionary of British Bird Names. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-866196-2.
  5. "தாழைக் கோழிCommon_moorhen". பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2017.
  6. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 103, 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  7. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:39

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gallinula chloropus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழைக்_கோழி&oldid=3930794" இலிருந்து மீள்விக்கப்பட்டது