தாவாவ் மக்களவைத் தொகுதி
தாவாவ் (P190) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Tawau (P190) Federal Constituency in Sabah | |
தாவாவ் மக்களவைத் தொகுதி (P190 Tawau) | |
மாவட்டம் | தாவாவ் மாவட்டம் |
வட்டாரம் | தாவாவ் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 87,477 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | தாவாவ் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | செம்பூர்ணா; தாவாவ்; கூனாக் |
பரப்பளவு | 1,332 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1966 |
கட்சி | சபா பாரம்பரிய கட்சி |
மக்களவை உறுப்பினர் | லோ சு புய் (Lo Su Fui) |
மக்கள் தொகை | 230,531 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
தாவாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tawau; ஆங்கிலம்: Tawau Federal Constituency; சீனம்: 斗湖联邦选区) என்பது மலேசியா, சபா, தாவாவ் பிரிவு; தாவாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P190) ஆகும்.[5]
தாவாவ் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து தாவாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
தாவாவ் மாவட்டம்
[தொகு]தாவாவ் மாவட்டம் என்பது சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் தாவாவ் நகரம். கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 531 கி.மீ. (330 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது.
சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 452 கி.மீ. (280 மைல்) தொலைவில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 1900-ஆம் ஆண்டுகளில், தாவாவ் மாவட்டத்தில் குகாரா தோட்டம், குபோத்தா தோட்டம் எனும் பெரும் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் ரப்பர், சணல், தென்னை போன்றவை பயிர் செய்யப்பட்டன.
போர்னியோ காடுகள்
[தொகு]தாவாவ் மாவட்டத்தின் தென் கிழக்குப் பகுதியில், சுலாவெசி கடலும், சூலு கடலும் அமைந்துள்ளன. மேற்குப் பகுதியில் அடர்ந்த போர்னியோ காடுகள் உள்ளன. இந்த மாவட்டத்தின் தென் பகுதியில் இந்தோனேசியாவின் கலிமந்தான் பெருநிலம் உள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தாவாவ் நகரை நிர்வாகம் செய்து வந்த பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம், மறு சீரமைப்பு செய்வதில் தீவிரமான கவனம் செலுத்தியது. 1963-ஆம் ஆண்டு, பிரித்தானிய பேரரசிடம் இருந்து சபா விடுதலை பெற்றது.
தாவாவ் மக்களவைத் தொகுதி
[தொகு]தாவாவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
தாவாவ் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8][9] | |||
3-ஆவது மக்களவை | P120 | 1971-1973 | இயே பாவ் சூ (Yeh Pao Tzu) |
சபா சீனர் சங்கம் (SCA) |
1973-1974 | பாரிசான் நேசனல் சபா சீனர் சங்கம் (SCA) | |||
4-ஆவது மக்களவை | P130 | 1974-1978 | அலெக்ஸ் பாங் (Alex Pang) | |
5-ஆவது மக்களவை | 1978-1982 | இயூ நியூக் இங் (Hiew Nyuk Ying) |
பாரிசான் நேசனல் (சபா மக்கள் முன்னணி) (BERJAYA) | |
6-ஆவது மக்களவை | 1982-1986 | கான் யாவ் பா (Kan Yau Fa) | ||
7-ஆவது மக்களவை | P151 | 1986-1990 | சாம்சன் சின் (Samson Chin) |
ஜனநாயக செயல் கட்சி |
8-ஆவது மக்களவை | 1990-1995 | ஜெப்ரி இயீ (Geoffrey Yee) |
காகாசான் ராக்யாட் (GR) (ஐக்கிய சபா கட்சி) (PBS) | |
9-ஆவது மக்களவை | P165 | 1995-1999 | சுவா சூன் புய் (Chua Soon Bui) |
பாரிசான் நேசனல் (சபா முற்போக்கு கட்சி) (SAPP) |
10-ஆவது மக்களவை | 1999-2004 | சிம் பாவ் பாட் (Shim Paw Fatt) | ||
11-ஆவது மக்களவை | P190 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008 | சுவா சூன் புய் (Chua Soon Bui) | ||
2008-2013 | சபா முற்போக்கு கட்சி (SAPP) | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | மேரி யாப் கைன் (Mary Yap Kain) |
பாரிசான் நேசனல் (ஐக்கிய சபா கட்சி) (PBS) | |
14-ஆவது மக்களவை | 2018-2022 | கிறிஸ்டினா லியூ (Christina Liew) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | லோ சு புய் (Lo Su Fui) |
சபா மக்கள் கூட்டணி (GRS) (ஐக்கிய சபா கட்சி) (PBS) |
தேர்தல் முடிவுகள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
லோ சு புய் (Lo Su Fui) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 19,865 | 39.19 | 39.19 | |
கிறிஸ்டினா லியூ (Christina Liew) | பாக்காத்தான் (PH) | 16,065 | 31.69 | 18.36 ▼ | |
சென் கெட் சுயின் (Chen Ket Chuin) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 11,263 | 22.22 | 22.22 | |
முகமது சலே பச்சோ (Mohd Salleh Bacho) | சுயேச்சை (Independent) | 1,776 | 3.50 | 3.50 | |
எர்மன் அம்தாஸ் (Herman Amdas) | தாயக இயக்கம் (GTA) | 1,067 | 2.11 | 2.11 | |
சின் சி சின் (Chin Chee Syn) | சுயேச்சை (Independent) | 651 | 1.28 | 1.28 | |
மொத்தம் | 50,687 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 50,687 | 98.20 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 929 | 1.80 | |||
மொத்த வாக்குகள் | 51,616 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 87,477 | 57.94 | 15.26 ▼ | ||
Majority | 3,800 | 7.5 | 3.56 ▼ | ||
சபா மக்கள் கூட்டணி கைப்பற்றியது (தொகுதியின் முதல் தேர்தல்) | |||||
மூலம்: [10] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகஸ்ட் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
- ↑ Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm.
- ↑ "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.