உள்ளடக்கத்துக்குச் செல்

நீதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாஜி எர்ன்ஸ்ட் கால்டன்ப்ரூன்னரின் போர்க்குற்றங்கள் பற்றிய சான்றுகள் நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

நீதி (Justice) என்பது அதன் பரந்த அர்த்தத்தில், தனிநபர்கள் அனைவரும் சமமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தினைக் குறிக்கிறது. [1]

நீதி நிலைநாட்டப்பட்ட சமூகம் என்பது, தனிநபர்கள் தங்களுக்கு "தகுதியானதை" பெறுவதை உறுதிகொண்ட சமூகமாக இருக்கும். இங்கு "தகுதி" என்பது நன்னெறி, பகுத்தறிவு, சட்டம், சமயம், சமத்துவம் மற்றும் நியாயம் போன்ற பல்வேறு துறைகள் மற்றும் தத்துவங்களையும் சார்ந்துள்ளது. நீதிமன்றங்களை இயக்குவதன் மூலமும் அவற்றின் தீர்ப்புகளை அமல்படுத்துவதன் மூலமும் அரசு நீதியைப் பின்பற்றுவதாகக் கூறலாம்.

வரலாறு

[தொகு]

நீதி பற்றிய புரிதலை தெரிவிக்க பல்வேறு தத்துவ மற்றும் தார்மீக கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பழங்கால கிரேக்க தத்துவஞானிகளான பிளாட்டோவின் குடியரசு (நூல்) மற்றும் அரிசுட்டாட்டில், அவரது நிகோமாசியன் எதிக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ் ஆகியவற்றில் நீதியின் ஆரம்பக் கோட்பாடுகள் குறித்து குறிப்பிட்டுள்ளனர்.

மத விளக்கங்களின் கீழ் நீதி என்பது, தெய்வீக கட்டளைக் கோட்பாட்டின் கீழ் தொகுக்கப்படலாம், இதில் நீதி என்பது கடவுளிடமிருந்து வருவதாக நம்பப்டுகிறது. [2]

ஆரம்பகால கிரேக்கர்கள்

[தொகு]

பிளேட்டோவின் கூற்றுப்படி நீதி என்பது, சமநிலை மற்றும் நல்லிணக்கத்தைப் பற்றியதாகும். இது ஒரு தனிநபர் அல்லது ஒரு சமூகத்தில் உள்ள முரண்பாடான அம்சங்களுக்கு இடையிலான சரியான உறவைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பொறுப்பான அல்லது அவர்களுக்குச் சொந்தமானதைச் செய்வது என்று நீதியை வரையறுக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நியாயமான நபர் சமூகத்திற்கு அவர்களின் தனித்துவமான திறன்களுக்கு ஏற்ப பங்களிப்பவர் மற்றும் அவர்களின் பங்களிப்பின் வெகுமதிகளைப் பெறுகிறார். அவர்கள் சரியான இடத்தில் இருக்கிறார்கள், எப்போதும் தங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்கிறார்கள், மேலும் அவர்கள் பெறுவதை நியாயமான மற்றும் சமமான முறையில் திருப்பிச் செலுத்துகிறார்கள். இந்தக் கருத்து தனிப்பட்ட மட்டத்திலும் நிறுவன மற்றும் சமூக மட்டங்களிலும் பொருந்தும். [3]

இயற்கை சட்டம்

[தொகு]

 

மார்டன் வான் ஹீம்ஸ்கெர்க்கின் ஜஸ்டிடியா, 1556. ஜஸ்டிடியா ஒரு வாள்,( தராசு மற்றும் ஒரு கண்கள் கட்டப்பட்டிருப்பது [4] )

நீதி என்பது இயற்கைச் சட்டத்தின் ஒரு பகுதி ஆகும் (எ.கா. ஜான் லாக் ) மனிதனின் இயல்பிலேயே நீதி உள்ளது. [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Moore, Margaret (November 2021). "Justice Principles, Empirical Beliefs, and Cognitive Biases: Reply to Buchanan's 'When Knowing What Is Just and Being Committed to Achieving it Is Not Enough'" (in en). Journal of Applied Philosophy 38 (5): 736–741. doi:10.1111/japp.12547. பன்னாட்டுத் தர தொடர் எண்:0264-3758. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/japp.12547. 
  2. Hare, John E. (2015). God's Command. Oxford: Oxford University Press. pp. 32–49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-960201-8.
  3. Plato, Republic trans. Robin Waterfield (Oxford: Oxford University Press, 1984).
  4. Cuban Law's Blindfold, 23.
  5. See Two Treatises of Government: In The Former the False Principles and Foundation of Sir Robert Filmer and His Followers, are Detected and Overthrown. The Latter is An Essay Concerning the True Original Extent and End of Civil Government (3 ed.). London: Awnsham and John Churchill. 1698. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014. via Google Books

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதி&oldid=4128274" இலிருந்து மீள்விக்கப்பட்டது