உள்ளடக்கத்துக்குச் செல்

பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை ('Transmission Control Protocol') இணைய விதிமுறைகளை மட்டும் பயன்படுத்தி தரவுகளை பரப்புவதை (transmit) சீர்படுத்தும் முறை. இணைய விதிமுறைகள் மூலம் பரப்பு செய்யும் பொழுது சில இலக்க உறை தரவுகள் துலைந்தும், சில கால காலதாமதமும் பெறப்பட்டன. இதனால் எழும் தவறுகளை சீர் செய்வதற்கு பரப்புகை கட்டுப்பாடு விதிமுறைகள் (Transmission Control Protocol) ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை தகுந்த கால கட்டுப்பாட்டுக்குள், தரவுகளைத் துலைகாமல், தேவையற்ற மீள் பரப்பு செய்யாமல் தகவல்களை பரப்புவதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது.

பரப்புகை கட்டுப்பாடு விதிமுறை அடிப்படையில் இணைய விதிமுறைகளை பயன்படுத்தியே தகவலை பரப்பு செய்யும். பரப்புகை கட்டுப்பாடு விதிமுறை தரவு இணைய விதிமுறை (Internet Protocol) தரவுகளின் தகவலாக பரப்பு செய்யப்படும் (data). ஒரு முனையில் இருந்து மற்று முனைக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்ட பின்பு, இ.வி (IP) தகவலை கொடுக்கும்.

பொதுவாக இணைய விதிமுறைக்களும் (Internet Protocol) பரப்புகை கட்டுப்பாடு விதிமுறைகளும் இணைந்தே இணையத்தில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

மேலும் காண்க

[தொகு]

கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்