பரா மாகாணம்
பரா
Farah فراه | |
---|---|
ஆப்கானித்தானின் வரைபடத்தில் ஃபரா உயர்நிலம் அமைந்துள்ள இடம் | |
ஆள்கூறுகள் (தலைநகரம்): 32°30′N 63°30′E / 32.5°N 63.5°E | |
நாடு | ஆப்கானித்தான் |
தலைநகரம் | ஃபரா |
அரசு | |
• ஆளுநர் | முஹம்மத் ஷா ஜஹான் அரிஃப் |
பரப்பளவு | |
• மொத்தம் | 48,470.9 km2 (18,714.7 sq mi) |
மக்கள்தொகை (2015)[1] | |
• மொத்தம் | 5,07,405 |
• அடர்த்தி | 10/km2 (27/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-FRA |
முதன்மை மொழிகள் | பஷ்தூ தாரி |
பரா மாகாணம் (Farah, பசுதூ/பாரசிகம்: فراه) என்பது ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் ஒன்று. இந்த மாகாணம் நாட்டின் மேற்குப் பகுதியில் ஈரானை ஒட்டி உள்ளது. இது ஒரு பரந்த நிலப்பரப்பும், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாகாணமாகும், இந்த மாகாணம் பதினோரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான சிற்றூர்களை உள்ளடக்கி உள்ளது. இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 925,016 ஆகும். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் கிராமப்புற பழங்குடி சமூகமாகவும், பல்லின மக்கள் வாழும் பகுதியாகவும் உள்ளது. பாரா விமான நிலையம் பாரா நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது, இது மாகாணத்தின் தலைநகராக உள்ளது.
புவியியல்ரீதியாக இந்த மாகாணமானது சுமார் 48,000 சதுர கிலோமீட்டர்கள் (19,000 sq mi) பரப்பளவைக் கொண்டதாக உள்ளது. இதனால் மேரிலாந்தைவிட இரு மடங்கு அளவு அல்லது தென் கொரியாவின் பரப்பளவில் அரை அளவுக்கு ஒப்பிடப்படுகிறது. மாகாணமானது வடக்கில் ஹெராட், வடகிழக்குப் பகுதியில் கோர், தென்கிழக்கில் ஹெல்மாண்ட், தெற்கே நிம்ரோஸ், மற்றும் மேற்கில் ஈரான் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இது ஆப்கானிஸ்தானத்தின் நான்காவது பெரிய மாகாணமாகும். இந்த மாகாணமானது "இன்ஃபீடலின் கோட்டை" உள்ளிட்ட பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கி உள்ளது. இக்கோட்டையானது பாரா நகருக்கு தெற்கில் உள்ளது.
வரலாறு
[தொகு]ஷர்ர்-இ கோஹன் ("பழைய நகரம்") அல்லது ஃபெரிடியன் ஷார் ("ஃபிரீடூன் நகரம்") பாரா நகரத்தில் அமைந்துள்ளது. இந்த பண்டைய நகரம் 3000 ஆண்டுகள் பழமையானது. மேலும் இது பாரசீக மன்னர்களின் பண்டைய இடங்களில் ஒன்றாகும், ஃபராஹ் சர்தாரி சாம்ராஜ்யத்துடன் வரலாற்று ரீதியாக சேர்ந்ததாக இது இருந்தது. இங்கே "ஃபெரிடியன்" என்ற பெயரைப் பாரசீக காவியமான சா நாமாவின் நாயகனைக் குறிக்கிறது.
இப்பகுதி கி.மு. 500 இல் டிரானியானா என அறியப்பட்டது, இதன் கிழக்கில் ஆர்க்கோசியாவும், வடக்கில் அரியானாவும் இருந்தன. இது அகாமனிசியப் பேரரசைத் தொடர்ந்து மெக்கானிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கி.மு. 330 ஆம் ஆண்டில் அலெக்சாந்தர் இப்பிராந்தியத்தின் பெருமளவிலான பகுதியைக் கைப்பற்றி அதை தன் பேரரசின் ஒரு பகுதியாக ஆக்கினார். கி.மு. 323 ஆம் ஆண்டில் அலெக்சாந்தரின் அசாதாரண மரணத்தைத் தொடர்ந்து, அவருடைய பரந்த பேரரசுக்காக அவருடைய தளபதிகள் அனைவரும் அவரது வாரிசாகப் போட்டியிட்டனர். தியாடோச்சி என்று வரலாற்றில் அழைக்கப்படும் இந்த வாரிசுரிமைப் போரின் இறுதியில் அலெக்சாந்தரின் பேரரசு செலூக்கியப் பேரரசு, தாலமைக் பேரரசு, ஆண்டிகோணஸ், சசாண்டர், லிசிமச்சூஸ் என ஐந்து பகுதிகளாக பிரிந்தது. இந்த பிராந்தியமானது அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவரான செலூகுசால், செலூக்கியப் பேரரசு என்று பெயரிடப்பட்டது. அவர்களின் மரபைத் தொடர்ந்து இப்பகுதியின் ஆட்சியானது சாசானியப் பேரரசின் வசம் சென்றது. அதன் பிறகு அரேபிய முஸ்லீம்களிடம் வீழ்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் இந்த மாகாணமானது காஜினியப் பேரரசின் பகுதியாக மாறியது. இதன் தலைநகராக காசுனி ஆனது. அவர்களிடமிருந்து குர்துகளின் கைகளுக்கு மாறிய பிராந்தியமானது ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் மங்கோலியப் படையெடுப்புபை சந்தித்தது.
இந்த மாகாணம் தைமூரின் வசம் சென்றது பின்னர் சபாவித்து வம்சம் இதைக் கைப்பற்றியது. இது சபாவித்துகளிடமிருந்து டிரான்சோக்சியானாவின் உஸ்பெக்கியர்களிடம் வீழ்ந்தது. ஆனாலும் சபாவித்துகளின் எதிர் தாக்குதலை கி,பி, 1600 காலகட்டத்தில் உஸ்பெக்கியர் சந்தித்து அவர்களிடமே பிராந்தியத்தை இழந்தனர்.[2] 1709 இல், ஆப்கானியர்கள் சபாவித்து வம்சத்திடமிருந்து விடுதலைப் பெற்றனர், அதைத் தொடர்ந்து பரா பிராந்தியமானது ஹாட்டாகி பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. 1747 வாக்கில், அது கடைசி ஆப்கானியப் பேரரசான அகமது ஷா துரானியின் ஆப்கானிய பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. 19 ஆம் நூற்றாண்டின் போது, பிரித்தானிய இராணுவம் ஹெராத் மாகாணத்தில் படையெடுத்துவந்த பாரசீகர்களுக்கு எதிராகவும் ஆப்கானிய படைகளை ஆதரிப்பதற்காகவும் மாகாணத்தைக் கடந்தது.
1978 இல் கம்யூனிஸ்டுகளின் புரட்சியைத் தொடர்ந்து, அரசியல்ரீதியாகவும், இன, சமய ரீதியாகவும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இருந்த பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட நகரங்களில் பாரா நகரமும் ஒன்றாகும்.[3]
1995 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இஸ்மாயில் கான் காந்தகாரில் தோல்வி அடைந்த பின்னர் முழு பாரா மாகாணமும் 1995 செப்டம்பர் 5 இல் தாலிபன்களால் வெற்றிக் கொள்ளப்பட்டது.[4]
அண்மைய வரலாறு
[தொகு]பின்னர் தலிபான் வட்டாரத்தில் இருந்து இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக, தாலிபன் ஆட்சிக்கு சிறிய அளவிலான உள்ளூர் கட்டுப்பாட்டை ஃபரா கொண்டிருந்தது. தலிபான் காலம் முடிவடைந்தபின், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான எட்டு பாடசாலைகளை, கந்தகார் மற்றும் ஃபரா ஆகியவற்றில் தலிபான்கள் அங்கீகரித்து ஆதரவளித்தனர்.[5]
2001 செப்டம்பர் 11 க்கு பின்னர் வடக்குக் கூட்டணியின் நுழைவைத் தொடர்ந்தும், தொடர் வான்வழித் தாக்குதலின் காரணமாக தாலிபன் இப்பகுதியில் இருந்து புறப்படலாயினர்.[6][7]
அரசியல் மற்றும் ஆட்சி
[தொகு]மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் டாக்டர் முஹம்மத் ஷா ஜஹான் அரிஃப் இவர் முகமது ஆசிஃப் நாங்கிற்கு பின்னர் ஆளுநர் பதவிக்கு வந்தவர். மாகாணத்தின் அனைத்து சட்டம் ஒழுங்கு அமலாக்க நடவடிக்கைகளானது ஆப்கான் தேசிய காவல் துறையால் (ஏஎன்பி) நிர்வகிக்கப்படுகின்றது. ஆப்கான் எல்லைக் காவல் படையானது (ஏபிபீ) அண்டை ஈரான் எல்லையை கண்காணிக்கிறது. ஏஎன்பி மற்றும் ஏபிபீ போன்றவற்றை வழிநடத்த ஒரு மாகாண பொலிஸ் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். காபூலின் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக காவல் தலைவர் உள்ளார். ஏஎன்பி மற்றும் ஏபிபீ போன்றவற்றுக்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
பொருளாதாரம்
[தொகு]ஃபராவின் பொருளாதாரமானது பெரிய அளவில் வேளாண்மையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. மாகாணமானது ஜிப்சம், சுண்ணாம்பு, கட்டுமான கற்கள், நிலக்கரி யுரேனியம் போன்ற கனிமங்களைக் கொண்டுள்ளது. மாகாணத்தில் உள்ள உற்பத்தி நிறுவனங்களில் 1300 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.[8] கிராமப்புறங்களில் 74% குடும்பங்களின் முதன்மை வருமான ஆதாரமாக வேளாண்மை அல்லது கால்நடை வளர்ப்பு என கூறியுள்ளனர். 24% வீதம் குடும்பங்கள், சேவைத் துறையை (வேளாண் அல்லாத தொழிலாளர்கள் உட்பட) நம்பி உள்ளனர்.[9]
போக்குவரத்து
[தொகு]ஃபரா விமான நிலையம் பாரா நகரை அடுத்தது அமைந்துள்ளது, 2014 மே ஆண்டு முதல் தொடர்ச்சியாக விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டது.
முதன்மைச் சாலை ரூட் 515 ஆகும், இது ஹராத் மற்றும் காந்தகார் இடையேயான வட்டச் சாலையுடன் ஃபராவை இணைக்கிறது. 2009 இல் பல ISAF நாடுகள் ஒருங்கிணைந்து இந்த இரு சாலைகளையும் மேம்பட்டுத்தின.
நலவாழ்வு
[தொகு]சுத்தமான குடிநீர் கிடைக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 2005 இல் 3% என்ற நிலையில் இருந்து 2011 இல் 14% ஆக உயர்ந்தது.[10] 2011 இல் நிகழ்ந்த பிரசவங்களில் 6% பயிற்சியுடைய தாதிகளின் உதவியோடு நிகழ்ந்தது.
கல்வி
[தொகு]ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் (வயது 6+ ) 2005 இல் 28% ஆக இருந்து 2011 இல் 18% ஆக வீழ்ச்சியுற்றது.
மக்களவகைப்பாடு
[தொகு]ஃபரா மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 925,016 ,[11] இது பெரும்பாலும் பழங்குடி மற்றும் கிராமப்புற சமுதாய மக்களைக் கொண்டது. மாகாணத்தில் குச்சி மற்றும் பிற நாடோக்கள் 482,400 பேர் உள்ளனர்.[12] 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் பஷ்டூன்கள் இன மக்கள் (குச்சி நாடோடிகளை விடுத்து), தாஜிகளுக்கு இரண்டாவது இடத்தில் உள்ளனர் இவர்கள் பாரா நகரத்தில் உள்ளனர். பலூச் மக்கள் மூன்றாவது பெரிய இனக் குழுவாக உள்ளது.
மாகாணத்தில் பெரும்பான்மையினர் பேசும் மொழியாக பாஷ்டோ மற்றும் தார் (ஆப்கானிய பாரசீக மொழி) பாஷ்டோ சுமார் 80% பேசப்படுகிறது, அதற்கடுத்து 10% -15% தார் [13] மேலும் எஞ்சியிருக்கும் மக்கள் பலுச்சி மற்றும் ப்ருஹூ மொழிகளை பேசுகின்றனர்.
சமயத் தளங்கள்
[தொகு]முஹம்மது ஜவுன்புரியின் அடக்கத் தலம் ஃபாராவில் உள்ளது என நம்பப்படுகிறது.
மேலும் வாசிக்க
[தொகு]- Words in the Dust (fiction), by author Trent Reedy who was one of the first American soldiers to enter Farah in 2004. Link
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Afghanistan at GeoHive
- ↑ William Bayne Fisher. The Cambridge history of Iran. Cambridge University Press, 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-20094-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-20094-3
- ↑ Olivier Roy. Islam and resistance in Afghanistan. Cambridge University Press, 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-39700-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-39700-1. Pg 97
- ↑ Peter Marsden. The Taliban: war, religion and the new order in Afghanistan. Palgrave Macmillan, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85649-522-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85649-522-6
- ↑ Susan Hawthorne, Bronwyn Winter. September 11, 2001: feminist perspectives. Spinifex Press, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-876756-27-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-876756-27-7
- ↑ Malalai Joya. A Woman Among Warlords: The Extraordinary Story of an Afghan Who Dared to Raise Her Voice. Simon and Schuster, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4391-0946-X, 9781439109465
- ↑ Harvey Langholtz, Boris Kondoch, Alan Wells. International Peacekeeping: The Yearbook of International Peace Operations[தொடர்பிழந்த இணைப்பு]. Martinus Nijhoff Publishers, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-411-2191-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-411-2191-2
- ↑ National Area-Based Development Programme, Farah Provincial Profile,"Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ WFP, http://www.foodsecurityatlas.org/afg/country/provincial-Profile/Farah பரணிடப்பட்டது 2014-03-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Archive, Civil Military Fusion Centre, https://www.cimicweb.org/AfghanistanProvincialMap/Pages/DaiKundi.aspx பரணிடப்பட்டது 2014-05-31 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Province: Farah" (PDF). Program for Culture & Conflict Studies. Naval Postgraduate School(NPS). February 3, 2009. பார்க்கப்பட்ட நாள் 2013-01-13.
- ↑ "Settled Population of Farah province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Islamic Republic of Afghanistan, Central Statistics Organization. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-10-22.
- ↑ https://my.nps.edu/web/ccs/farah