பாரிஸ் உடன்படிக்கை (1763)
1750களின் மத்தியில் போர் மூளுவதற்கு முன்பாக ஏழாண்டுப் போரில் போரிட்டவர்கள் காட்டப்பட்டுள்ளனர்.
பெரிய பிரித்தானியா, பிரசியா, போர்த்துகல், கூட்டாளிகளுடன்
பிரான்சு, எசுப்பானியா, ஆத்திரியா, உருசியா, கூட்டாளிகளுடன் | |
அமைப்பு | ஏழாண்டுப் போர் முடிவுறல் (வட அமெரிக்காவில் பிரெஞ்சு மற்றும் இந்தியப் போர் என அறியப்பட்டது) |
---|---|
கையெழுத்திட்டது | 10 பெப்ரவரி 1763 |
இடம் | பாரிஸ், பிரான்சிய இராச்சியம் |
பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் | |
கையெழுத்திட்டோர் |
|
தரப்புகள் |
|
முழு உரை | |
பாரிசு உடன்படிக்கை (1763) விக்கிமூலத்தில் முழு உரை | |
See also: Treaty of Hubertusburg (1763) |
பாரிசு உடன்படிக்கை (Treaty of Paris) அல்லது 1763 உடன்படிக்கை என்பது ஏழாண்டுப் போரில் பிரான்சு, எசுப்பானியாவை பிரித்தானியா வென்ற பின்னர் பாரிய பிரித்தானியா, பிரான்சு மற்றும் எசுப்பானியா இராச்சியங்கள் போர்த்துகல்லுடன் பெப்ரவரி 10, 1763ஆம் ஆண்டில் ஒப்பிட்ட உடன்படிக்கை ஆகும்.
இந்த உடன்படிக்கை ஏழாண்டுப் போரை முறையாக முடிவுக்கு வந்தது.[1] தவிரவும் ஐரோப்பாவிற்கு வெளியே பிரித்தானியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இது துவக்கமாகவும் அமைந்தது.[2] பிரான்சும் எசுப்பானியாவும் போரின்போது தாங்கள் கையகப்படுத்திய பகுதிகளை திருப்பித் தந்தன; பிரித்தானியாவிற்கு வட அமெரிக்காவில் பிரான்சின் நிலப்பகுதிகள் சொந்தமாயின. மேலும், பிரித்தானியா புதிய உலகில் உரோமைக் கத்தோலிக்கத்தை பாதுகாக்க உடன்பட்டது. இந்த உடன்படிக்கை பிரசியாவையும் ஆத்திரியாவையும் கட்டுப்படுத்தவில்லை; ஐந்து நாட்கள் கழித்து அவை தனியாக ஹுபர்டுசுபர்கு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
பிரதேசங்களின் பரிமாற்றங்கள்
[தொகு]போர் நடந்து கொண்டிருந்தபோது இங்கிலாந்தானது கனடா, குவாடெலோப், மார்டினீகு, செயின்ட் லூசியா, டாமினிகா, கிரனாடா, செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரெனடைன்கள், டொபாகோ அகிய பிரெஞ்சுக்காலணிகளையும், இந்தியவிலிருந்த பிரன்சு தொழிற்சாலைகளையும், கோரீயிலிருந்த அடிமை வணிக நிலையங்களையும், செனெகல் நதி மற்றும் அதன் உடன்படிக்கைய் இடங்களையும், பிலிப்பீன்சிலிருக்கும் மனிலா மற்றும் கியூபாவின் ஹவானா ஆகிய எசுப்பானிய காலணிகளையும் வென்றிருந்தது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Marston, Daniel (2002). The French–Indian War 1754–1760. Osprey Publishing. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-96838-0.
- ↑ "Wars and Battles: Treaty of Paris (1763)". www.u-s-history.com.
In a nutshell, Britain emerged as the world's leading colonial empire.
வெளி இணைப்புகள்
[தொகு]- Treaty of Paris Profile and Videos - Chickasaw.TV
- The Treaty of Paris and its Consequences (பிரெஞ்சு)
- Entry on the Treaty of Paris from The Canadian Encyclopedia பரணிடப்பட்டது 2011-09-22 at the வந்தவழி இயந்திரம்
- Treaty of Paris at the Avalon Project of the Yale Law School0