உள்ளடக்கத்துக்குச் செல்

பிறவிக் குறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறவிக் குறை (Birth defects) என்பது ஒரு கருப்பையில் உள்ள சிசுவின் வடிவம் அல்லது செயல்களில் ஏற்படும் பிறழ்வு நிலைகளைக்

(வளர்சிதைமாற்றக் கோளாறுகளைக்) குறிக்கின்றது. இந்தக் குறைகளினால் பிறக்கும் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாக பாதிக்கப்படலாம். அவ்வாறான குறைகள் அவர்களுக்கு உடல் , மனவளர்ச்சிக் குறையாகவோ அல்லது வளர்ச்சிக் குறையாகவோ இருக்கலாம்.[1] இவ்வகையான குறைகளின் பாதிப்பின் தீவிரத் தன்மையானது குறைவான பாதிப்பு முதல் அதீத பாதிப்பாகவும் இருக்கலாம்.[2] பிறவிக் குறையை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். அதில் முதலாவது உடற் கட்டமைப்பு குறைபாடு மற்றொன்று செயற்பாட்டுக் குறை. இதில் உடற் கட்டமைப்புக் குறை என்பது அவர்களின் உடல் வடிவத்தில் வழக்கத்திற்கு மாறாக இருக்கும் குறையைக் குறிக்கின்றது. செயற்பாட்டுக் குறை என்பது உடல் செயல்படுவதில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளைக் குறிக்கின்றது.[3] செயற்பாட்டுக் குறையானது வளர்சிதைமாற்ற குறைகள் மற்றும் சிதைவுறு குறைகள் (இழையம் மற்றும் உள்ளுறுப்பு போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினைகள்) போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.[3] சில பிறவிக் குறைகள் உடற் கட்டமைப்பு குறைபாடு மற்றும் செயற்பாட்டுக் குறை ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்.[3]

பிறவிக் குறை என்பது மரபு வழியாகவோ அல்லது நிறப்புரி பிறட்சிகள் மூலமாகவோ அல்லது கருத்தரிப்பு காலங்களில் ஏற்படும் சில தொற்று போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது.[4] கருத்தரிப்பு காலங்களில் ஏற்படும் உயிர்ச்சத்து பி குறைபாடு, மது அருந்துதுதல் அல்லது புகையிலை பிடித்தல் மற்றும் கட்டுப்படுத்த இயலாத நீரிழிவு நோய் அல்லது 35 வயதிற்கு மேல் கருத்தரித்தல் போன்றவற்றினாலும் பிறவிக்குறை ஏற்படுகிறது.[2][5] பிறவிக் குறை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருப்பதாக பெரும்பான்மையான மக்கள் நம்புவதாக கருதப்படுகிறது.[2] இவ்வகையான குறைகளை திறத் தணிக்கைச் சோதனையின் மூலமாகவோ அல்லது பிறப்பின் போதிலோ கண்டறிய இயலும்.[6] பிள்ளைப் பேறுக்கு முன்பான சோதனையின் மூலம் பல நோய்களின் அறிகுறிகளைக் கண்டறிய இயலும்.[6]

சிகிச்சை

[தொகு]

பிறவிக் குறையின் தன்மையைப் பொறுத்து அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மாறுபடுகின்றன.[7] மருத்துவச் சிகிச்சை அளித்தல் ,மருந்து உட்கொள்ளுதல் அல்லது அறுவைச் சிகிச்சை செய்தல் போன்ற பல வகைகளில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.[7] 2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி 96 மில்லியன் மக்கள் பிறவிக் குறையினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.[8] அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிறக்கும் 3 விழுக்காடு குழந்தைகளுக்கு பிறவிக் குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[9] 1990 இல் 751,000 ஆக இருந்த இறப்ப்பு வீதம் 2015 இல் 628,000 ஆக குறைந்துள்ளது.[10][11] இதில் பெரும்பானமையான இறப்புகள் இதயக் குழலிய நோய் (303,000) மற்றும் முள்ளந்தண்டு வட நோய் (65,000) போன்றவற்றினால் இறக்கிறார்கள்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Birth Defects: Condition Information". www.nichd.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
  2. 2.0 2.1 2.2 "Facts Birth Defects". Centers for Disease Control and Prevention (in அமெரிக்க ஆங்கிலம்). 7 September 2017. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
  3. 3.0 3.1 3.2 "What are the types of birth defects?". www.nichd.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
  4. "What causes birth defects?". www.nichd.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
  5. "How many people are affected by/at risk for birth defects?". www.nichd.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
  6. 6.0 6.1 "How do health care providers diagnose birth defects?". www.nichd.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
  7. 7.0 7.1 "What are the treatments for birth defects?". www.nichd.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
  8. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
  9. "Birth Defects". Dec 15, 2015. பார்க்கப்பட்ட நாள் 17 Jan 2016.
  10. 10.0 10.1 GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
  11. GBD 2013 Mortality and Causes of Death, Collaborators (17 December 2014). "Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990–2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.". Lancet 385 (9963): 117–71. doi:10.1016/S0140-6736(14)61682-2. பப்மெட்:25530442. 

வெளி இணைப்புகள்

[தொகு]

CDC’sபிறவிக் குறை மற்றும் வளர்ச்சிக் குறைகளுக்கான தேசிய மையம்