உள்ளடக்கத்துக்குச் செல்

புசிமி இனாரி தையிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புசிமி இனாரி-தையிசா
Fushimi Inari-taisha
伏見稲荷大社
தோரி பாதை. புசிமி இனாரி-தையிசா கோயிலில் தொங்கு விளக்கு
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்புசிமி-கு, கியோட்டோ, கியோட்டோ, கியோட்டோ மாவட்டம், நிப்பான்
புவியியல் ஆள்கூறுகள்34°58′2″N 135°46′22″E / 34.96722°N 135.77278°E / 34.96722; 135.77278
சமயம்சிந்தோ
இணையத்
தளம்
inari.jp/en/

புசிமி இனாரி தையிசா (Fushimi Inari-taisha) என்பது நிப்பானில் கியோட்டோவில் புசிமி-கு வில் உள்ள நிப்பானிய "காமி" எனப்படும் தொல் இயற்கை வழிபாட்டுக் கோயில். இது இனாரி என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலை கடல் பட்டத்தில் இருந்து 233 மீ உயரத்தில் உள்ளது. இம்மலையில் சிறியதாக வேறு பல கோயில்களும் உள்ளன. இம்மலையில் ஏறி இறங்க ஏறத்தாழ 2 மணிநேரம் ஆகும்[1] .

இனாரி முதலிலும் இப்பொழுதும் முதன்மையாக அரிசி/நெல் "காமி" (கடவுள்) ஆகவும் வேளாண்மைக் கடவுளாகவும் உள்ளது. தொழில் செய்வோர் தொழிலின் கடவுளாகவும் கொள்கின்றார்கள்[மேற்கோள் தேவை]. புசிமி இனாரி-தையிசாவின் தோராயமான 10,000 "தோரி"களை (வாயில் முகப்பு) தொழில் முதலாளி ஒருவர் நன்கொடையாகத் தந்தார். இவற்றுள் 800 தோரிகள் ஒரு குகையுள் நுழைவது போன்ற தோற்றம் தருகின்றன[2].

இந்தக் கோயிலின் பரவலான புகழால் ஏறத்தாழ 32,000 கிளைக்கோயில்கள் நிப்பான் முழுவதும் உள்ளனவாம்[3].

வரலாறு

[தொகு]
(video) வாயில் முகப்புகள் அமைந்த தோரி பாதையில் ஒரு பகுதியில் நடத்தல்
ஐதானின் முன் தோற்றம்
தோரி என்னும் வாயில் முகப்புகளின் பாதை
ஓந்தன் (honden)
முதன்மை வாயில்

இக்கோயில் ஐனான் (Heian) காலப்பகுதியின் முற்பகுதியில் பேரரசின் பாதுகாப்பின் கீழ் வந்தது.[4] கி.பி 965 இல் , முக்கியமான நிகழ்ச்சிகலைப்பற்றிய செய்திகளை நிப்பானின் காப்புக் கடவுளின் கோயில்களுக்கு தெரிவிக்க பேரரசர் முராக்காமி ஆணையிட்டார். இந்த ஐயாக்குகள் (heihaku) முதலில் 16 கோயில்களுக்கு அனுப்ப்பப்பட்டன [5]

1887 முதல் 1946 வரை, புசிமி இனாரி தையிசா நிப்பானின் அரசு பாதுகாப்பின் வரிசையிலும் உதவி பெறுவதிலும் முதல் நிலை கோயில் என இருந்தது [6]

கட்டட அமைப்புகள்

[தொகு]

முதன் முதல் கட்டப்பட்டவை கி.பி 711 இல் கியோட்டோவின் தென்மேற்கில் அமைந்த இனாரி மலையில் (இனாரியாமா), ஆனால் 816 இல் அங்கிருந்த கூக்கை என்ற துறவியின் வேண்டுகோளின்படி வேறிடத்துக்கு மாற்றப்பட்டது. கோயிலின் முதன்மையான கட்டட அமைப்பு 1499 கட்டப்பட்டது.[7] மலையின் அடிவாரத்தில் முதன்மை கோபுர வாயிலும் (உரோமோன் எனப்படும் வாயில்) main gate (楼門? rōmon, "tower gate") "கோஃகோண்டென்" (go-honden) எனப்படும் முதன்மைக் கோயிலும் main shrine (御本殿? go-honden) அமைந்துள்ளது. அதன் பின்னே மலையின் நடுவே ஓக்குமியா (okumiya) inner shrine (奥宮? okumiya)என்னும் உள்நிலைக் கோயிலை ஆயிரக்கணக்கான வாயில் முகப்புகளின் வழியே சென்றடையலாம். . மலையின் உச்சியில் "சுக்கா அல்லது துசுக்கா"(tsuka) என்னும் mounds (? tsuka) ஆயிரக்கணக்கான தனியார் வழிபாட்டு மேடைகள் உள்ளன.

சென்போன் தோரி

[தொகு]

உயரமான வாயில் நிலைகால் போன்ற வாயில் முகப்புகளைத் தோரி என்கிறார்கள். வரிசையாக அமைந்த இந்த வாயில் முகப்புகளான சென்போன் தோரி சிறப்பாக அறியப்படுகின்றது. ஈடோ காலத்திலிருந்து (1603–1868) இந்த வாயில் முகப்பாகிய தோரியை வேண்டுதலாக வழங்குவது வழக்கமாக உள்ளது.

நரி

[தொகு]

நரியைக் கித்துசுனே (kitsune) என்கிறார்கள், இது தூதுவராகக் கருதப்படுகின்றது. இதன் வாயில் நெற்கதிர் இருப்பது வழக்கம்.

மற்ற சிந்தோ கோயில்கள் போலல்லாமல், புசிமி இனாரி-தையிசாவில் தொழப்படும் உருவம் விருப்ப்ப்படி இருக்கும் (ஓர் ஆடி (கண்ணாடி))

இக்கோயில் பல மில்லியன் வழிபாட்டாளர்களை ஈர்க்கின்றது. நிப்பானின் புத்தாண்டில் மூன்றே நாளில் 2.69 மில்லியன் பேர்கள் வந்தார்கள் (2006 ஆம் ஆண்டில்)

பட வரிசை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 全国のお稲荷さんの総本宮、伏見稲荷大社を参拝しました。 [Nationwide Inari Shrines, I visited the Fushimi Inari-taisha.] (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 28 March 2014.
  2. "伏見稲荷大社にある千本鳥居の由来と数を知りたい". National Diet Library of Japan Collaborative Reference Database. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
  3. Motegi, Sadazumi. "Shamei Bunpu (Shrine Names and Distributions)". Encyclopedia of Shinto. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.
  4. Breen, John et al. (2000). Shinto in History: Ways of the Kami, pp. 74–75.
  5. Ponsonby-Fane, Richard. (1962). Studies in Shinto and Shrines, pp. 116–117.
  6. Ponsonby-Fane, Richard. (1959). The Imperial House of Japan, pp. 124.
  7. Nussbaum, Louis-Frédéric et al. (1998). Japan encyclopedia, p. 224.

வெளி இணைப்புகள்

[தொகு]