புறவழி மூளைக் காயம்
புறவழி மூளைக் காயம் | |
---|---|
பெருமூளை நசுங்கல்கள், குருதிப்பெருக்கு, மூளை உறையடி குருதிக் கன்றல் மற்றும் மண்டையோட்டு விரிசல்களைக் காட்டும் சி.டி வரைவு[1] | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | அவசர மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | S06. |
ஐ.சி.டி.-9 | 800.0-801.9, 803.0-804.9, 850.0-854.1 |
நோய்களின் தரவுத்தளம் | 5671 |
மெரிசின்பிளசு | 000028 |
ஈமெடிசின் | med/2820 neuro/153 ped/929 |
ம.பா.த | D001930 |
புறவழி மூளைக் காயம் (Traumatic brain injury, TBI), அல்லது மண்டையோட்டிற்குள்ளான காயம் (intracranial injury) புறவிசையினால் மூளை காயப்படுத்தப்படுவதைக் குறிக்கும். இது மேலும் நோயின் தீவிரம், ஏற்பட்ட விதம் (உட்புற அல்லது ஊடுருவு மண்டைக் காயம்), மற்றும் பிற தன்மைகளால் (காட்டாக, குறிப்பிட்ட இடத்தில் அல்லது பரவலான பரப்பில்) வகைப்படுத்தப்படுகின்றன. தலைக் காயம் என்பது பொதுவாக இதனைக் குறிப்பிட்டாலும் அது விரிவான பொருளுடையது;மூளையல்லாது மண்டையாட்டிலோ உச்சந்தலையிலோ ஏற்படும் காயங்களையும் குறிக்கும்.
புறவழி மூளைக் காயம் உலகளவில் உயிரிழப்பு மற்றும் ஊனத்திற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது; குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே உயிரிழப்பிற்கு முதன்மைக் காரணமாக உள்ளது. பெண்களை விட ஆண்களே கூடுதலாக இந்நோய்க்கு வாய்ப்படுகின்றனர். கீழே விழுதல், வாகன விபத்துகள், வன்முறை ஆகியன காரணங்களாக அமைகின்றன. சாலை விபத்துகளில் தொழில்நுட்ப உதவியால் காயத்தின் தீவிரத்தைக் குறைத்தல் (தலைக்கவசங்கள், இருக்கைப் பட்டிகள், காற்று பைகள்) மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பரப்புரைகள், சாலை விதிகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துதல் போன்றவை இதற்கான தடுப்பு வழிகளாகும்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Rehman T, Ali R, Tawil I, Yonas H (2008). "Rapid progression of traumatic bifrontal contusions to transtentorial herniation: A case report". Cases journal 1 (1): 203. doi:10.1186/1757-1626-1-203. பப்மெட்:18831756. பப்மெட் சென்ட்ரல்:2566562. http://www.casesjournal.com/content/1/1/203.