உள்ளடக்கத்துக்குச் செல்

புவி நடுவரை அண்மிய வட்டணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவி நடுவரை அண்மிய வட்டணை(near-equatorial orbit) என்பது புவி நடுவரைத் தளத்துக்கு நெருக்கமாக அமையும் வட்டணையாகும். இத்தகைய வட்டணை 0° பாகை சாய்வைக் கொண்டுள்ளது. புவியில், இத்தகைய வட்டணைகள் புவிநடுவரையின் அதே தளத்தில் உள்ள கற்பனையான வான்கோள பெருவட்ட நடுவரையில் உள்ளன. ஒரு புவிநிலைப்பு வட்டணை என்பது ஒரு குறிப்பிட்ட வகை புவிநடுவரை வட்டணையாகும், இது புவி மைய ஒத்தியங்கும் வட்டணையாகும் . புவிநிலைப்பு வட்டணையில் உள்ள செயற்கைக்கோள் புவி மேற்பரப்பில் உள்ள பார்வையாளர்களுக்கு வானத்தில் எப்போதும் ஒரே புள்ளியில் நிலையானதாகத் தோன்றுகிறது.

புவிநடுவரை வட்டணைகள் நடைமுறையில் பல காரணங்களால் பயன்மிக்கதாக அமைகின்றன. விண்வெளிக்கு மனிதத் தொழில்நுட்ப ஏவுதலுகு, புவிநடுவரைக்கு அருகில் உள்ள தளங்களான, கொரோவில் உள்ள கயானா விண்வெளி மையம், பிரேசிலில் உள்ள அல்காந்தாரா ஏவுதள மையம் போன்றவை, ஏவூர்திக்கு சில கூடுதல் வட்டணை வேகத்தை வழங்குவதால், விண்வெளி நிலையங்களுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன. புவி சுழற்சி வேகம், நொடிக்கு 460மீ, ஏவப்படும் போது விண்கலத்திற்கு. [1] கூடுதல் வேகமாக அமைந்து விண்கலத்தை வட்டணையில் செலுத்த தேவையான எரிபொருளைக் குறைக்கிறது. புவி கிழக்கு நோக்கிச் சுழல்வதால், கிழக்கு நோக்கி ஏவுவது மட்டுமே விண்கல வேகத்தை அதிகரிக்கச் செய்கிறது. உண்மையில், புவிநடுவரையில் இருந்து மேற்கு நோக்கி ஏவுதல், குறிப்பாக கடினமாக உள்ளது, ஏனெனில் கூடுதல் சுழற்சி வேகத்தை எதிர்க்க கூடுதலான எரிபொருளைச் செலவழிக்க வேண்டும்.

புவிநடுவரை வட்டணைகள் தகவல்தொடர்பு போன்ற பிற நன்மைகளையும் வழங்குகின்றன: புவிநடுவரை வட்டணையில் உள்ள ஒரு விண்கலம், ஒவ்வொரு சுழற்சியிலும் விண்கலத்தின் புவிநடுவரை மீது நேரடியாக, சாய்ந்த வட்டணையின் வேறுபடும் தரைத் தடவழிக்கு மாற்றாக கடந்து செல்கிறது. [1]

மேலும், புவிநடுவரை வட்டணையில் நேரடியாக ஏவுவது, ஒரு விண்கலத்தின் ஏவுதளப் பாதையில் விலையுயர்ந்த மாற்றங்களின் தேவையை நீக்குகிறது. கேப் கனாவரலின் 28° வ அகலாங்கிலிருந்து நிலாவின் வட்டணையின் 5° சாய்வை அடைவதற்கான முறை அப்பல்லோ திட்டத்தின் சாட்டர்ன் V ஏவூர்தியின் ஏந்துசுமை திறனை 80% வரை குறைக்கும் என்று முதலில் மதிப்பிடப்பட்டது. [1]

சாய்வு இல்லாத சுற்றுப்பாதை

[தொகு]

சாயாத வட்டணை என்பது ஒரு மேற்கோள்தளத்தில் இருந்தான இணத்தள வட்டணையாகும் .முன்னேறும் வட்டணைகளுக்கு வட்டணைச் சாய்வு 0° ஆகவும் பிற்போக்கு சுற்றுப்பாதைகளுக்கு π (180°) ஆகவும்ஆகும்.

மேற்கோள் தளம் ஒரு பாரிய கோள உடலின் புவிநடுவரைத் தளமாக இருந்தால், இந்த வட்டணைகள் நிலநடுவரை வட்டணை என்று அழைக்கப்படுகின்றன, மேலும் சாயாத வட்டனை நிலநடுவரைக்கு அருகிலுள்ள வட்டணையின் ஒரு சிறப்பு நிகழ்வாகும்.

இருப்பினும், ஒரு சாயாத வட்டணையை நிலநடுவரை மேற்கோள் தளத்திற்கு மட்டும் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை. மேற்கோள் தளம் வான்கோள நடுவரைத் தளம் என்றால், அவை வான்கோள நடுவரை வட்டணை என்று அழைக்கப்படுகின்றன.

சாயாத வட்டணைகளில் கணுக்கள் இல்லாததால், அதனுடன் தொடர்புடைய செவ்வியல் வட்டணைக் கூறுகளும், ஏறுவரிசைக் கணுவின் நெட்டாங்கும் புவியண்மை பருமையும் வரையறுக்கப்படுவதில்லை. இந்த வேளைகளில், ஒரு வட்டணை முழுமையாக விவரிக்கப்படுவதை உறுதிப்படுத்த, மாற்று வட்டணைக் கூறுகள் அல்லது வேறுபட்ட வரையறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். [2]

ஒரு புவிநிலைப்பு வட்டணை என்பது பூமத்திய ரேகை வட்டணையின் புவி ஒத்தியங்கும் வட்டணையின் ஒருவகை எடுத்துக்காட்டு ஆகும், இது புவிநடுவரையுடன் இணைதளத்தில் இருக்கும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 . 1978. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)William Barnaby Faherty; Charles D. Benson (1978). "Moonport: A History of Apollo Launch Facilities and Operations". NASA Special Publication-4204 in the NASA History Series. p. Chapter 1.2: A Saturn Launch Site. Archived from the original on 2018-09-15. Retrieved 8 May 2019. Equatorial launch sites offered certain advantages over facilities within the continental United States. A launching due east from a site on the Equator could take advantage of the earth's maximum rotational velocity (460 meters per second) to achieve orbital speed. The more frequent overhead passage of the orbiting vehicle above an equatorial base would facilitate tracking and communications. Most important, an equatorial launch site would avoid the costly dogleg technique, a prerequisite for placing rockets into equatorial orbit from sites such as Cape Canaveral, Florida (28 degrees north latitude). The necessary correction in the space vehicle's trajectory could be very expensive - engineers estimated that doglegging a Saturn vehicle into a low-altitude equatorial orbit from Cape Canaveral used enough extra propellant to reduce the payload by as much as 80%. In higher orbits, the penalty was less severe but still involved at least a 20% loss of payload.
  2. . 1993. {{cite book}}: Missing or empty |title= (help)