உள்ளடக்கத்துக்குச் செல்

பெகாசசு (விண்மீன் குழு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pegasus
பெகாசசு
விண்மீன் கூட்டம்
Pegasus
பெகாசசு இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்Peg
GenitivePegasi
ஒலிப்பு/ˈpɛɡəsəs/,
genitive /ˈpɛɡəs/
அடையாளக் குறியீடுஇறக்கையுடன் குதிரை
வல எழுச்சி கோணம்23 [1] h
நடுவரை விலக்கம்+20[1]°
பரப்பளவு1121 sq. deg. (7வது)
முக்கிய விண்மீன்கள்9, 17
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
88
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்12
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்5
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்3
ஒளிமிகுந்த விண்மீன்ε பெக் (2.38m)
மிக அருகிலுள்ள விண்மீண்EQ பெகாசி
(20.38 ly, 6.25 pc)
Messier objects1
எரிகல் பொழிவுயூலை பெகாசிடுகள் bordering = அந்திரொமேடா
லாசெர்ட்டா
சிக்னசு
வுல்பேகுலா
டெல்பினசு
எக்கூலியசு
கும்பம்
மீனம்
Visible at latitudes between +90° and −60°.
அக்டோபர் மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.

பெகாசசு (Pegasus, பெகாசஸ்) என்பது வடக்கு வானில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும். கிரேக்கத் தொன்மவியலில் பெகாசசு என்ற இறக்கைகளுடன் கூடிய குதிரையின் பெயர் இவ்விண்மீன் குழுவிற்கு சூட்டப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வானியலாளர் தொலெமி வகைப்படுத்திய 48 விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்றாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 88 விண்மீன் குழுக்களில் இதுவும் ஒன்று.

வெறும் கண்களில் தெரியும் பெகாசசு விண்மீன் குழு.

விண்மீன்கள்

[தொகு]

இவ்விண்மீன் குழுவில் α பெகாசி, β பெகாசி, γ பெகாசி, ஆகியவற்றுடன் α அந்திரொமேடா ஆகியன இணைந்து பெரும் பெகாசசு சதுக்கம்' என்ற பெயரில் அழைக்கப்படும் பெரும் விண்மீன் கூட்டம் ஒன்றை அமைக்கின்றன.

பெகாசசு விண்மீன் குழாமில் உள்ள 51 பெகாசி என்பதே புறக்கோள் ஒன்றைக் கொண்டிருக்கக்கூடிய சூரியனைப் போன்ற விண்மீன்களில் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டடாகும்.

ஐகே பெகாசி என்பது மிகக்கிட்டவான மீயொளிர் விண்மீன் வெடிப்புள்ள விண்மீன் ஆகும்.

இவ்விண்மீன் குழுவில் உள்ள எச்டி 209458 பி என்ற புறக்கோளில் சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள நீராவி இருக்கக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட முதலாவது கோள் என அறியப்பட்டுள்ளது.

பெகாசசில் உள்ள எச்ஆர் 8799 என்ற விண்மீனைச் சுற்றிவரும் புறக்கோள்களே முதற் தடவையாகப் படம் பிடிக்கப்பட்ட புறக்கோள்கள் ஆகும்.

விண்மீன்கள்ன் பெயர்கள்

[தொகு]
பெயர் பேயர் குறியீடு ஆரம்பம் அர்த்தம்
மார்க்காபு α அரபு குதிரைச் சேணம்
சியாட் β அரபு கால்
ஆல்ஜெனிப் γ அரபு விலா
எனிப் ε அரபு மூக்கு
ஓமம் ζ அரபு உயர் ஆன்மா
மாட்டார் η அரபு
பாகம் θ அரபு கால்நடைகள்
சடல்பாரி μ அரபு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Pegasus, Constellation Boundary". The Constellations (International Astronomical Union). http://www.iau.org/public/constellations/#peg. பார்த்த நாள்: 13 February 2014. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெகாசசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: Sky map 23h 00m 00s, +20° 00′ 00″