உள்ளடக்கத்துக்குச் செல்

மண் வகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண் வகைகள்

மண் அமைப்புகளின் அடிப்படையில், மண் வகைை (Soil type) என்பது மண்ணியியலின் ஒரு வகைப்பாட்டு அலகு. இது மண்களை முறையாக வகைப்படுத்தும் "மண் வகைப்படுத்தல்" என்ற இயலுக்குரியச் சொல்லாகும். மண் வகைப்பாடுகளின் வரிசையில் "மண் வகை"யானது உயர்ந்த அல்லது இடைப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு மண் வகையை மேலும் உள் வகைகளாகப் பிரிக்கலாம் அல்லது சில முறைகளில் பல மண் வகைகளை இணைத்தும் ஒரு உயர் வகைப்பாடு உருவாக்கப்படுகிறது. எனினும் ஐக்கிய அமெரிக்காவின் (விட்னி, 1909) முதல் வகைப்படுத்தும் முறைமையில், "மண் வகை" அடிநிலை அலகாக உள்ளது.[1]

மண் வகை என்ற அலகை வரையறுப்பதற்கு, சில முறைமைகள் மண்-உருவாகும் செயல்முறைகளால் ஏற்படும் விளவுகளை முதன்மைப் பண்புகளாக எடுத்துக்கொள்கின்றன. இதற்கு செருமானிய முறைமையொரு எடுத்துக்காட்டாகும்.[2] பிற முறைமைகள் மண்-உருவாதலில் ஏற்படும் பண்புகளுடன் தாய்-பொருளிலிருந்து பெறப்படும் பண்புகளையும் சேர்த்துக் கணக்கிடுகின்றன. "மண் வளங்களுக்கான உலக ஆதார மூலம்" (World Reference Base for Soil Resources) என்ற பன்னாட்டு மண் பிரிப்பு முறைமை இதற்கு எடுத்துக்காட்டாகும்.[3] [4] மண்ணின் பண்புகள், மண்-உருவதலால் பெறப்பட்டவையா இல்லையா என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத மற்ற முறைமைகளும் உள்ளன. "ஆஸ்திரேலிய மண் வகைப்படுத்தல்" முறைமை இதற்குச் சான்றாகும்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. M. Whitney (1909). Soils of the United States. US Dept. Agric. Bur. Soil Bull. 55. Washington, D.C.
  2. Ad-hoc-AG Boden (2005). Bodenkundliche Kartieranleitung, 5. Auflage. Schweizerbart, Stuttgart.
  3. IUSS Working Group WRB (2022). "World Reference Base for Soil Resources, 4th edition". IUSS, Vienna.
  4. "Keys to Soil Taxonomy 2014". Archived from the original on 2018-11-28. பார்க்கப்பட்ட நாள் 2018-12-03.
  5. R.F. Isbell and the National Committee on Soil and Terrain (2016). "Australian Soil Classification, second edition (as Online Interactive Key)". CSIRO.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_வகை&oldid=4053150" இலிருந்து மீள்விக்கப்பட்டது