விடுதலை மணி
ஆள்கூறுகள் | 39°56′58″N 75°9′1″W / 39.94944°N 75.15028°W |
---|---|
இடம் | லிபர்ட்டி பெல் மையம் பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா |
வடிவமைப்பாளர் | வைட்சப்பல் பெல் பௌண்ட்ரி |
வகை | கோபுர மணி |
கட்டுமானப் பொருள் | 70% செப்பு, 20% வெள்ளீயம், 10% ஏனைய உலோகங்கள் |
அகலம் | 3.82 அடி (1.16 மீ) (சுற்றளவு 12 அடி (3.7 மீ), கிரீடத்தைச் சுற்றி 7.5 அடி (2.3 மீ) |
உயரம் | அண். 4 அடி (1.2 மீ) |
முடிவுற்ற நாள் | 1752 |
இணையதளம் | Liberty Bell Center |
நிறை | 2,080 இறாத்தல் (940 கிகி) |
விடுதலை மணி (Liberty Bell) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையின் உருவகச் சின்னமாக பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியா நகரில் அமைந்துள்ளது. பென்சில்வேனியா மாநில மாளிகையில் வைக்கப்பட்டிருந்த இந்த மணி, தற்போது பென்சில்வேனியா தேசிய வரலாற்றுப் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மணி இலண்டன் லெசுட்டர், பாக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு,[1] "அனைத்து நிலங்களிலும் அதன் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விடுதலையை அறிவிக்கவும்" (லேவியராகமம் புத்தகத்திலிருந்து ஒரு விவிலியக் குறிப்பு 25:10) என்ற வரிகள் பொறிக்கப்பட்டு 1752 ஆம் ஆண்டில் பென்சில்வேனிய மாகாண சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.[2] பிலடெல்பியாவுக்கு வந்தபின் மணி முதலில் ஒலித்த பின்னர் வெடிப்புகள் ஏற்பட்டன. உள்ளூர் தொழிலாளர்களான ஜான் பாஸ் மற்றும் ஜான் ஸ்டோ ஆகியோரால் இரண்டு முறை மறுசீரமைக்கப்பட்டது. இவர்களின் கடைசிப் பெயரக்ள் மணியில் பொறிக்கப்பட்டுள்ளன. மணியில் ஆரம்ப ஆண்டுகளில், சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்ற அமர்வுகளுக்கு வரவழைக்கவும், பொதுக் கூட்டங்கள் மற்றும் பிரகடனங்கள் குறித்து குடிமக்களை எச்சரிக்கவும் இந்த மணி பயன்படுத்தப்பட்டது.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ Purchasing power of British Pounds from 1264 to present. measuringworth.com. Archived from the original on மார்ச்சு 5, 2012. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 26, 2010. The same site indicates that the pound sterling was worth $1.85 in 2008.
- ↑ Paige, pp. 2–3
- ↑ Nash, பக். 1–2
உசாத்துணைகள்
[தொகு]- Nash, Gary B. (2010). The Liberty Bell. New Haven, CT: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-13936-5.
- Paige, John C. (1988). Kimball, David C. (ed.). The Liberty Bell: A Special History Study (Report). Denver, CO: National Park Service (Denver Service Center and Independence National Historical Park). (obtained from Independence National Historical Park Library and Archive, 143 S. 3rd St., Philadelphia PA 19106)
வெளி இணைப்புகள்
[தொகு]- Liberty Bell. Independence Hall Association
- Liberty Bell Center. Independence National Historical Park. National Park Service official website
- The Liberty Bell: From Obscurity to Icon, a National Park Service Teaching with Historic Places (TwHP) lesson plan. National Park Service official website
- Liberty Bell Center, National Park Service. Bohlin Cywinski Jackson (architects) website. Retrieved 2010–03–16.