வில்லியம் ஷாக்லி
William Shockley | |
---|---|
பிறப்பு | William Bradford Shockley Jr. பெப்ரவரி 13, 1910 இலண்டன் பெருநகர்ப் பகுதி, இங்கிலாந்து, United Kingdom |
இறப்பு | ஆகத்து 12, 1989 Stanford, California, United States | (அகவை 79)
தேசியம் | American |
பணியிடங்கள் | |
கல்வி கற்ற இடங்கள் | |
ஆய்வு நெறியாளர் | John C. Slater |
அறியப்படுவது | |
விருதுகள் |
|
வில்லியம் சொக்லி (William Bradford Shockley, பெப்ரவரி 13, 1910 – ஆகஸ்ட் 12, 1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தான் வடிவமைத்த ஒரு வித டிரான்சிஸ்டரை வணிகமயமாக்க முற்பட்ட போது, அதன் விளைவாக உண்டானதே இன்றைய "சிலிகான் பள்ளத் தாக்கு". இதுவே இன்று மின்னணுத் தொழில்நுட்ப நூதனத்தில் மேலோங்கி நிற்கிறது. பிற்காலத்தில் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், செயற்கைத் தேர்வின் மூலம், மனித இனத்தை மேம்படுத்தும் (அப்படி நினைத்தார்) முயற்சிக்கும், ஆதரவாகச் செயல்பட்டார்.
இளமைக் காலமும் கல்வியும்
[தொகு]ஷாக்லி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில், அமெரிக்கப் பெற்றோருக்குப் பிறந்தார். அகவை மூன்றினினிருந்து, அவரது சொந்த ஊரான கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் வளர்ந்தார். அவரது தந்தை வில்லியம் ஹில்மன் ஷாக்லி, சுரங்கங்களைக் கணிக்கும் சுரங்கப் பொறியாளராகப் பணி புரிந்து வந்தார்.
இவற்றையும் பார்க்க
[தொகு]சிறப்புகள்
[தொகு]எண்ணற்ற தவறுகள் செய்தாலும் பரவாயில்லை அதிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும் நாம் என்று தன் குழுவை ஊக்குவித்து அதிலிருந்து சரியான முடிவுகளை கண்டறிய செய்தார் . கச்சிதமான ட்ரான்ஸ்சிஸ்டர் பெல் ஆய்வகத்தில் உருவானது. உலகின் போக்கையே மாற்றிப்போடுகிற சாதனையை இக்கண்டுபிடிப்பு செய்தது என்றால் அது மிகையில்லை [1].
மிகப்பெரிய அளவில் இருந்த பல்வேறு கருவிகள் அளவில் குட்டியானது;துல்லியம் மற்றும் செயல்பாட்டு திறன் அதிகரித்தது .குறைக்கடத்திகள் எனப்படும் ஜெர்மானியம் சிலிகான் முதலியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட ட்ரான்சிஸ்டர்கள் டிவி ரேடியோ கால்குலேட்டர் ஆகியவற்றின் அளவை மிகப்பெரிய அளவில் குறைத்தது ; மின்சார செலவும் குறைந்து அவற்றின் பயன்பாடு அதிகரித்தது ட்ரான்ஸ்பர் ரெசிஸ்டர் என்பதே ட்ரான்சிஸ்டர் என ஆனது .
வெளி இணைப்புகள்
[தொகு]- National Academy of Sciences biography
- Nobel biography பரணிடப்பட்டது 2004-08-03 at the வந்தவழி இயந்திரம்
- PBS biography
- Time Magazine 100 Biography of William Shockley பரணிடப்பட்டது 2007-06-11 at the வந்தவழி இயந்திரம்
- Interview with Shockley biographer Joel Shurkin
- Nobel Lecture
- History of the transistor
- Shockley and Bardeen-Brattain patent disputes
- ↑ http://www.vikatan.com/news/coverstory/24487.html பிப்ரவரி 13: ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்த வில்லியம் ஷாக்லே பிறந்த தின சிறப்பு பகிர்வு