வெடிபொருள்
வெடிபொருள் (Explosive material) என்பது எந்த ஒரு பொருள் அல்லது பொருட்களின் கலவை பேரளவு இயக்க ஆற்றலை தன்னுள் வைத்திருந்து, அதை வெப்படுத்தினாலோ அல்லது அதிரும்படி செய்தாலோ அளவுக்கு அதிகமான வேகத்தில் விரிவடைந்து வெடித்தலை நிகழ்த்தக் கூடியதோ அவ்வினைப்பொருள் வெடிப்பொருள் எனப்படுகிறது. ஆற்றல் உடனடியாக விடுவிக்கப்படுவதால் பேரளவு ஒளி, வெப்பம், ஒலி, அழுத்தம் ஆகியனவும் வெளிப்படுகின்றன. வெடிப்பு ஆற்றல் என்பது அளந்தறியக்கூடிய வெடிபொருளின் அளவால் கூறப்படுகிறது. இவ்வெடிபொருள் ஒரு உட்கூறோ அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உட்கூறுகளின் கலவையாகவோ இருக்கலாம்.
வெடிபொருளின் பொதிவாற்றல் கீழ்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றாக அமையலாம்:
- வேதி ஆற்றல், (நைட்ரோகிளிசரின், குறுணைத் தூசு)
- அழுத்தமூட்டிய வளிம அமுக்கி, (வளிம உருளை, காற்றுக் கரைசல் தெளிப்பான் போன்றவை)
- அணுக்கரு ஆயுதம், ( பிளவுறு ஓரகத் தனிமம், யுரேனியம்-235, புளூட்டோனியம்-239 போன்றவை)
வெடிபொருள்களை விரிவடையும் வேகத்தை வைத்து உயர்வேக வெடிபொருள்கள், தாழ்வேக வெடிபொருள்கள் எனப் பிரிக்கலாம். வெடிக்கும்போது வேதிவினை முகப்பின் வேகம் ஒலி வேகத்தை விட கூடுதலாக அமையும் பொருள்கள் உயர்வேக வெடிபொருள்களாகும், கொளுத்தினால் எரிய மட்டுமே செய்பவை தாழ்வேக வெடிபொருள்களாகும். இவற்ரை அவற்றின் வெடிதிறத்தை வைத்தும் பிரிக்கலாம். சிறிது வெப்பத்தாலோ அல்லது சிறிது அழுத்தத்தாலோ வெடிப்பவை முதன்மை வெடிபொருள்களாகும். ஓரளவு அவ்வளவு வேகமாக வெடிக்காதவை துணை வெடிபொருள்கள்/மூன்றாம்நிலை வெடிபொருள்கள் எனப்படுகின்றன.
பலவகை வேதிமங்கள் வெடிக்கவல்லனவாக உள்ளன; இவற்றில் சில பொருட்கள் மட்டுமே வெடிபொருளாகச் செய்யப்படுகின்றன. பிற குறுகிய காலத்தில் சிதைவனவாகவோ அல்லது தரமிழப்பனவாகவோ அமைய, மற்றவை அச்சமூட்டும் வெடிதிறத்தோடும் நச்சுத்தன்மையுடன் நிலைப்பற்றவையாகவும் உள்ளன.
மாறாக, சில பொருட்கள் கொளுத்தினால் வெடிக்காமல் எரியக் கூடியவையாக மட்டுமே அமைகின்றன.
எனினும் இந்த வேறுபாடு கருக்காக அமைவதில்லை. இயல்பான நிலைமைகளில், சில தூசுகள், தூள்கள், வளிமங்கள், ஆவியாகும் கரிம வேதிமங்கள் ஆகியவை எரிய மட்டுமே செய்கின்றன. இவையே சில வேளைகளிலும் வடிவங்களிலும் வெடிக்கின்றன. எடுத்துகாட்டாக, தூசு விரவிய காற்றுமுகில்களும் உடனே விடுவிக்கும்போதோ அல்லது செறிக்கும்போதோ வளிமங்களும் வெடிக்கின்றன.
வரலாறு
[தொகு]கிரேக்கத் தீ போன்ற மிகப்பழைய தீ ஆயுதங்கள் பண்டைய காலத்திலேயே இருந்திருந்தாலும், போரிலும் சுருங்கையிலும் மிகப் பரவலாகப் பயனபடுத்திய வெடிபொருள் கருந்தூளே ஆகும். இது சீனாவில் ஒன்பதாம் நூற்றாண்டிலி சுபோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீருடன் வினைபுரிந்து கரும்புகையை ஏராளமாக வெளியிடக்கூடியது. இதைவிட வலிமைவாய்ந்த பயன்மிகுந்த வெடிபொருள் 1847 இல் உருவக்கப்பட்ட நiத்திரோகிளிசரின் ஆகும். நீர்ம வடிவத்தில்உள்ள இது மிகவும் நிலைப்பற்றதாகும். எனவேஇதை நைத்திரோ நாரிழையமான முந்நைத்திரோதொலுயீனும் கெலிகினைட்டும் 1867 இல் பதிலீடு செய்தது. இவை இரண்டும் நிலைப்பான, நுட்பமான நைத்திரொகிளிசரினின் மாற்று வடிவங்களேயன்றி மாற்று வேதிமங்கள் அல்ல. மேலும் இவை புகையற்ற வெடிபொருள்களாகும். இவை இரண்டுமே ஆல்பிரெடு நோபல் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.முதல் உலகப் போரில் TNT (முந்நைத்திரோகிளிசரின்) பீரங்கி குண்டுகளில் பயன்பட்டன இரண்டாம் உலகப் போர் பல புதிய வலிமையான வெடிபொருள்களைப் பயன்படுத்தியது. மறுபடியும் இவையும் கூட மிகவும் வலிமைவாய்ந்த வெடிபொருள்களாகிய C-4, PETN ஆகியவற்றால் பதிலிடப்பட்டன. என்றாலும், C-4, PETN ஆகியவை பொன்மத்தோடு வினைபுரிந்து தீப்பற்ரிக்கொள்கின்றன. ஆனால், இவை நீர் எதிர்ப்பும் தகடாக்க வல்லவையும் ஆகும்.[1]
சிறந்த வெடிபொருளுக்கான நிபந்தனைகள்
[தொகு]- மிகக் குறைந்த நேரத்தில் வெடித்து மிக அதிக அளவு வெப்பத்தையும் வாயுக்களையும் கொடுக்க வேண்டும்.
- குறைந்த விலைமதிப்பு கொண்டதாகவும், சாதாரண சூழல்களில் நிலைப்புத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
- வெடிபொருளுக்குள் இருக்கும் பிணைப்புகளில் குறைந்தபட்சம் ஒன்றாவது பிளவுறும் வகையில் இருக்க வேண்டும். பொதுவாக வெடிபொருள்கள் குறைந்த பிளவு ஆற்ரறல் கொண்ட பிணைப்புகளான நைட்ரசன் - நைட்ரசன், நைஒட்ரசன் - ஆக்சிசன், நைட்ரசன் - குளோரின், ஆக்சிசன் - குளோரின் போன்ற பிணைப்புகளைக் கொண்டிருக்கும்.
பயன்பாடுகள்
[தொகு]வணிகப் பயன்பாடு
[தொகு]வெடிபொருளின் மிகப் பரவலான பயன்பாடு சுருங்கையில் கணிம வெட்டும் பணியில் அமைகிறது. மேற்பரப்புச் சுருங்கையானாலும் அடியாழச் சுருங்கையானாலும், குறுகிய இடத்தின் பகுதியில் தாழ் அல்லது உயர்வெடிபொருளின் வெடிப்போ அல்லது எரிதலோ நொறுங்கியல்பு பொருளைக் கணிசமான அளவுக்கு பிரித்தெடுக்கும். சுருங்கைத் தொழிலகம் நட்டிரேட் சார்T வெடிபொருள்களைப் பயன்படுத்துகிறது. அவற்றுள் எரியெண்ணெய், அம்மோனியம் நைட்டிரேட்டு கரைசல்கள், அம்மோனியம் உர உருண்டைகளின் கலவை எரியெண்ணெய்(ANFO), அம்மோனியம் நைட்டிரேட்டு, எரிதகவு எரிமங்களின் பசைத் தொங்கல்கள் அல்லது குழம்புகள் ஆகியவை அடங்கும்.
பொருள் அறிவியலிலும் பொறியியலிலும் வெடிபொருள்கள் மேலுறையிடப் பயன்படுகின்றன. ஒரு தடித்தபொருளின்மேல் ஒரு மெல்லிய தகடுவைஇக்கப்படுகிறது. இரண்டு அடுக்குகளுமே பொன்மத்தாலானவையே. மெல்லிய அடுக்கின் மீது வெடிபொருள் வைக்கப்படுகிறது. வெடிபொருளின் ஒருமுனை களுத்திவிடப்படுகிறது. இரண்டு அடுக்குகளுமொன்றாக உயர்வெகத்திலும் பெருவிசையுடனும் இறுக்கப்படுகின்றன. வெடிப்பு பற்ரவைத்த முனையில் இருந்து வெடிபொருளின் முழுவதும் தொடரும். இது இரு அடுக்குகளிடையே பொன்மவியல் பிணைப்பை ஏற்படுத்துகிறது.
எந்தவொரு புள்ளியிலும் அதிர்ச்சி அலை செலவிடும் நேரம் மிகச் சிறியதாகையால், ஆழத்தின் சிறுபகுதிவரை இரு பொன்மங்களும் கலந்திடுவதால் அவற்றின் மேற்பரப்பு வேதி இயல்புகளும் கலக்கின்றன. இவற்றின் ஒவ்வொரு மேற்பரப்பு அடுக்குகளிலும் ஒருபகுதி பொருள் வெளியேற்றப்படுவதால் வினை இறுதியில் உள்ள பற்றுவைத்த இரட்டை அடுக்கின் பொருண்மை, இரண்டின் தொடக்கநிலை அடுக்குகளின் பொருண்மையை விட குறைவாக இருக்கும்.
உயர்விரைவு எறிபடைகளை உருவாக்கும் அதிர்ச்சி அலை, நிலைமின்னியல் பயன்பாடுகளும் உள்ளன.
போர் காலத்தில் வெடிபொருள்கள் அதிக அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தாதுகளை உடைக்க, நிலக்கரியை உடைக்க, மலைகளைக் குடைய, அணைகள் கட்ட, எண்ணெய் கிணறுகள் தோண்ட சில விவசாயப் பணிகள் என வெடிபொருள்கள் ஆக்கப்பணியிலும் பயன்படுத்தப்படுகின்றன.
படைத்துறை
[தொகு]முதன்மைக் கட்டுரை:வெடிபொருள் ஆயுதங்கள்
பொதுத்துறை
[தொகு]காண்க, வெடிபொருள் பொறியியல்
பாதுகாப்பு
[தொகு]முதன்மைக் கட்டுரை:வெடிபொருள் பாதுகாப்பு
வகைகள்
[தொகு]வேதியியல் வெடிபொருள்கள்
[தொகு]வெடித்தல் என்பது தன்னியல்பு வேதிவினை ஆகும். எனவே, ஒருமுறை தொடங்கியதும், வினைபடுபொருள்களில் இருந்து விளைபொருள்களாக மாறுகையில், பேரளவு வெப்ப வெளியீடு (பேரளவு வெப்ப விடுவிப்பு), பேரளவு நேரியல் மாற்றம் இயல்வெப்ப மாற்றம் (பேரளவு வளிமங்கள் விடுவிப்பு)ஆகிய இரண்டாலும் இயக்கப்படுகிறது. எனவே, இது வெப்ப இயங்கியலாக விரும்பத்தகும் நிகழ்வாகவும்மிக வேகமாகப் பரவும் நிகழ்வாகவும் அமைகிறது. இவ்வாறு, வெடிபொருள்கள் வெதிப் பிணைப்புகளில் பேரளவு ஆற்றலைத் தேக்கிவைத்துள்ள பொருள்களாகும். ஆற்றல் மிகும் நிலைப்பு வாய்ந்த வளிம விளைபொருள்களும் அவற்றின் உருவாக்கமும் 1 MJ/mole அளவுக்கு வலிமையான இரட்டை, மும்மைப் பிணைப்புகள் கொண்ட கரிம ஓர் உயிரகி, கரிம ஈருயிரகி, இருகாலகம் ஆகியவற்றின் உருவாக்கத்தால் ஏற்படுகின்றன. எனவே, பெரும்பாலான வணிகை பயன் வெடிபொருள்கள் -NO2, -ONO2, -NHNO2 ஆகிய சேர்மக் குழுக்களைப் பெற்றுள்ளன. இவை வெடிக்கும்போது, மேலே கூறிய வளிமங்களை விடுவிக்கின்றன(எ. கா: நைட்ரோகிளிசரின், முந்நைத்திரோதொலூயின் (TNT), HMX, PETN, நைத்திரோ நாரிழையம்).[2]
வெடிபொருட்கள், தாழ் வெடிபொருட்கள், உயர் வெடிபொருட்கள் என அவற்றின் எரிதல் வீத அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. தாழ் வெடிபொருட்கள் விரைவாக எரியக்கூடியவை. உயர் வெடிபொருட்கள் வெடிக்கக் கூடியவை. இந்த வரைவிலக்கணங்கள் தெளிவாக இருப்பினும், விரைவான சிதைவைத் துல்லியமாக அளவிடுவது கடினமானது என்பதால் நடைமுறையில் வெடிபொருட்களை வகைபடுத்துவது அவ்வளவு எளிதல்ல.
முதல்நிலை வெடிபொருள்
[தொகு]சிறிய அளவு வெப்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் கூட செயல்படக் கூடிய வெடிபொருள்கள் முதல்நிலை வெடிபொருள்கள் எனப்படும். இவை சிறிதளவு வெப்பத்தால் தீப்பற்ற வைத்தாலும், அதிர்ச்சியூட்டினாலும் உடனே வெடித்துச் சிதறும். உயர்தர வெடிபொருள்களின் செயல்பாட்டைத் தொடங்கவே இவற்றைப் பயன்படுத்தலாம் என்பதால் துவக்க வெடிபொருள்கள் என்றும் இவற்றை அழைக்கலாம். அதிக எச்சரிக்கையுடன் இவை கையாளப்பட வேண்டும்.
ஈய அசைடு, பாதரச பல்மினேட்டு, டெட்ரசீன், டையசோடைநைட்ரோபீனால் உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
கீழ்த்தர வெடிபொருள்
[தொகு]இவை எரியும். ஆனால் வெடிப்பதில்லை. இவை வலிமை குறைந்த வெடிபொருட்கள் ஆகும். இதனால் வெளியாகும் வாயுக்களின் கன அளவை கணக்கிடவும் கட்டுப்படுத்தவும் முடியும். பட்டாசுகள், இராக்கெட்டுகளில் உந்துப் பொருளாக இவற்றை பயன்படுத்துகிறார்கள்.
துப்பாக்கி ரவை, புகைபொடி உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
உயர்தர வெடிபொருட்கள்
[தொகு]முதல்நிலை வெடிபொருட்களைப் பயன்படுத்தி இவற்றை வெடிக்கச் செய்ய வேண்டும். திவைப்பதால் இவை வெடிப்பதில்லை. வெடிப்பதால் அதிக சிதறலும், அதிக வெப்ப வெளியீடும் இருக்கும். ஒரு பொருளாகவோ அல்லது பொருட்களின் கலவையாகவோ இவை இருக்கும்.
பிக்ரிக் அமிலம், அமோனியம் நைட்ரேட்டு போன்றவை இதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.
மரபான வெடிபொருள்களின் இயங்குமுறை, கரிமத்தையும் நீரகத்தையும் அதிர்ச்சு மூட்டும் உயிரகமேற்றம் வழியாக சார்ந்துள்ளது கரி ஈருயிரகியாகவும் கரி ஓருயிரகியாகவும் நீராவி வடிவிலான நீராகவும் மாற்ருவதே ஆகும். கரிம்ம், நீரகம் கலந்த எரிபொருளை எரிக்க தேவையான உயிரகத்தை நைட்டிரேட்டுகள் தருகின்றனஉயர்வெடிபொருள்கள் ஒரே கரிம மூலக்கூறில் கரிமம், நீரகம், உயிரகம் பெற்றுள்ளன. குறைந்த வெடிதிறப் பொருள்களான ANFO போன்றவை கரிம,நீரக எரிம எண்ணெயும் அம்மோனியம் நைட்டிரேட்டும் கலந்த சேர்மானங்களைக் கொண்டுள்ளன. அலுமினியத்தூள் போன்ற வெடிதிறமூட்டிகளை வெடிபொருளுக்கு வெடிப்பு ஆற்றலைக் கூட்டுவதற்காகச் சேர்க்கலாம். வெடித்ததுமே காலகப் பகுதி, காலக வளிமமாகவும் நச்சுள்ள காலக உயிரகியாகவும் மாறுகிறது.
சிதைவு
[தொகு]வெடிபொருளொன்று சிதைவடைவதற்கு ஆண்டுக் கணக்கிலோ, நாள் கணக்கிலோ, மணிக் கணக்கிலோ அல்லது ஒரு செக்கனில் ஒரு பகுதி நேரமோ எடுக்கக்கூடும். வேகம் குறைந்த சிதைவு, தேக்குதலின் போதே நடைபெறுவதுடன், இது வெடிபொருட்களின் நிலைப்பு தொடர்பிலேயே முக்கியமானது. வெடிபொருட்கள் என்றவகையில் அவற்றின் சிதைவு தவிர, சடுதியாக எரிதலும், வெடித்தலும் ஆகிய இரு வடிவங்கள் முதன்மை வாய்ந்தவையாகும்.
எரிதல்
[தொகு]வெப்பப் பரிமாற்ற எரிதலில், வெடிபொருளின் சிதைவு ஒலிவேகத்தைவிட பொருளூடாக மெதுவாக நகரும் தணலின் முகப்பில் பரவுகிறது (வழக்கமாக 1000 மீ/நொ அள்வினும் குறைவானது) [3] மாறாக, வெடித்தல் ஒலியின் வேகத்தைவிட பெருவேகத்தில் நகர்கிறது. வெப்பப் பரிமாற்ற எரிதல் தாழ்வெடிபொருள்களின் இயல்பாகும்.
வெடித்தல்
[தொகு]வெடித்தல் என்பது பொருளூடாக ஒலிவேகத்தை விடக் கூடுதலான வேகத்தில் அதிர்ச்சி அலைகளால் சிதைவு பரவும் நிகழ்வாகும்.[4] அதிர்ச்சி முகப்பு உயர்வெடிபொருளூடாகப் பல்லாயிரம் மீ/நொ வேகத்தில் அதாவது மீயொலி வேகத்தில், பரவக் கூடியதாகும்.வெடிபொருட்கள் பொதுவாக பெட்ரோலியப் பொருட்களிலும் குறைவான அழுத்த ஆற்றல் கொண்டவை. ஆனால், அவற்றின் உயர்ந்த ஆற்றல் வெளிவிடும் வீதம் காரணமாக வெடிபொருட்கள் உயர்ந்த வெடிப்பு அழுத்தத்தை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. முந்நைத்திரோ தொலுயீன் (TNT) 6,940 மீ/நொ வெடிப்பு வேகம் கொண்டது. பென்டேன்-வளிக் கலவை 1,680 மீ/நொடியும், பெட்ரோல் வளியில் எரியும் போதான தணலின் வேகம் 0.34 மீ./நொடியுமாக உள்ளன.
வெடிப்பு விசை வெடிபொருளின் மேற்பரப்புக்குச் செங்குத்துத் திசையில் வெளிப்படுகின்றது. மேற்பரப்பு வெட்டப்பட்டால், அல்லது ஏதாவது குறிப்பிட்ட வடிவில் அமைக்கப்பட்டால், வெடிக்கும் விசையைக் குறித்த ஓரிடத்தை நோக்கிக் குவிக்க முடியும்.
உணர்திறன்
[தொகு]ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான ஒரு வெடிப்பொருளின் பொருத்தத்தைத் தீர்மானிக்க அதன் இயற்பியல் பண்புகள் முதலில் அறியப்பட வேண்டும். வெடிபொருளின் பாதிக்கக்கூடிய பண்புகள் மற்றும் அவற்றால் பாதிக்கப்படும் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக புரிந்துகொள்ளுக் போதுதான் வெடிப்பொருளின் பயன் சிறக்கும். சில மிக முக்கியமான அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
ஒரு வெடிபொருள் வெடிப்பதற்குத் தேவைப்படும் அதிர்ச்சி, உராய்வு அல்லது வெப்பத்தின் அளவு உணர்திறன் எனப்படுகிறது. உணர்திறனைத் தீர்மானிக்க சில சோதனை முறைகள் உள்ளன:
தாக்கம்: – குறிப்பிட்ட எடையுள்ள ஒரு பொருள் குறிப்பிட்ட அளவு தொலைவில் இருந்து வெடிபொருளின் மீது எறியப்பட்டால் அது வெடிக்கும் என்பதைக் கூறுவதன் மூலம் உணர்திரனை அளவிடலாம்.
உராய்வு: எடையிடப்பட்ட ஊசல் ஒன்று வெடிபொருளின் மீது உராய்வதால் என்ன நிகழ்கிறது என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்து உணர்திறன் உணரப்படுகிறது.
வெப்பம் – வெடிபொருள் வெடிப்பதற்குத் தேவையான வெப்பநிலையின் அடிப்படையில் உணர்திறன் அளவிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு வெடி பொருளைத் தெரிவு செய்வதில் உணர்திறன் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.
ஒரு வெடிபொருளின் நிலைப்புத்தன்மையை அதிலுள்ள வேதிப்பொருள்களின் இயைபு, வெப்பநிலை, சூரிய ஒளியில் வெளிபடுதல், மின்சாரம் கடத்தப்படுதல் ஆகிய காரணிகள் நிணயிக்கின்றன.
இயல்பிகந்த/புறம்புநிலை வெடித்தல்
[தொகு]வேதியியல் வெடிபொருள்களைத் தவிர, பல புறம்புநிலை வெடிபொருள்களும் வெடிக்கவைப்பதற்கான சில புறம்புநிலைச் செயல்முறைகளும் உள்ளன. எடுத்துகாட்டாக, அணுக்கரு வெடிபொருள்களைக் கூறலாம். மேலும் ஒருங்கொளியாலோ அல்லது மின்வில்லாலோ உடனடியாக மின்ம நிலைக்குப் பொருளைச் சூடுபடுத்துதல் செயல்முறைகளைக் கூறலாம்.
வெடிபொருளின் இயல்புகள்
[தொகு]வெடிதகவுத் தனிமங்கள்
[தொகு]- வெடிதகவு ஆண்டிமொனி
- யுரேனியம்-235
- புளூட்டோனியம்-239
- காரமண் பொன்மங்கள்
அபாயமான சில வெடிதகவு சேர்மங்கள்:
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ankony, Robert C., Lurps: A Ranger's Diary of Tet, Khe Sanh, A Shau, and Quang Tri, revised ed., Rowman & Littlefield Publishing Group, Lanham, MD (2009), p.73.
- ↑ W. W. Porterfield, Inorganic Chemistry: A Unified Approach, 2nd ed., Academic Press, Inc., San Diego, pp. 479-480 (1993).
- ↑ http://www.chem-page.de/publikationen/geschichte-der-sprengstoffe/195-2-wie-unterscheiden-sich-deflagration-detonation-und-explosion.html பரணிடப்பட்டது 2017-02-06 at the வந்தவழி இயந்திரம் | 2.1 Deflagration | Retrieved 05 February 2017
- ↑ http://www.chem-page.de/publikationen/geschichte-der-sprengstoffe/195-2-wie-unterscheiden-sich-deflagration-detonation-und-explosion.html பரணிடப்பட்டது 2017-02-06 at the வந்தவழி இயந்திரம் | 2.2 Detonation | Retrieved 05 February 2017
- ↑ Sam Barros. "PowerLabs Lead Picrate Synthesis".
வெளி இணைப்புகள்
[தொகு]- Class 1 Hazmat Placards
- Blaster Exchange - Explosives Industry Portal பரணிடப்பட்டது 2019-08-03 at the வந்தவழி இயந்திரம்
- வெடிபொருள் பற்றியத் தகவல்கள் பரணிடப்பட்டது 2013-10-12 at the வந்தவழி இயந்திரம்
- Journal of Energetic Materials
- இராணுவ வெடிபொருட்கள்
- The Explosives and Weapons Forum
- Why high nitrogen density in explosives? பரணிடப்பட்டது 2013-05-26 at the வந்தவழி இயந்திரம்
- YouTube video demonstrating blast wave in slow motion