ஹிஸ்புல்லா
ஹிஸ்புல்லா | |
---|---|
தொடக்கம் | 1985 (அதிகாரபூர்வம்) |
கொள்கை | |
நிறங்கள் |
|
லெபனான் நாடாளுமன்றம் | 12 / 128
|
2016 லெபனான் அமைச்சரவை | 2 / 30
|
இணையதளம் | |
Official website |
ஹெஸ்புல்லா (Hezbollah) என்பது லெபனான் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமாகும். ஹெஸ்புல்லா என்பதற்கு அரபு மொழியில் கடவுளின் கட்சி என்று அர்த்தம்.
இவ்வியக்கம், லெபனானின் அரசியல் கட்சியொன்றாக இருக்கும் அதேவேளை ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் உள்ளது. 1982ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய படையினரை எதிர்த்துப்போராடவென உருவானது. ஹெச்புல்லாவின் பொதுச் செயலாளராக அசன் நசுரல்லா 1992 – 27 செப்டம்பர் 2024 வரை இருந்து கொல்லப்பட்டார். தற்போது அசீம் சபி அல்-தீன் - செப்டம்பர் 2024 முதல் ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளராக உள்ளார். இவரும் அக்டோபர் 03 அன்று இசுரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். தற்போது நசிம் காசம் என்பவர் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்[15][16]
அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பிரித்தானியாவும் ஹெஸ்புல்லாவை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைத்துள்ளன.
வரலாறு
[தொகு]அமல் இயக்கம் ஒரு சியா இசுலாம் குடிப்படை. இது 1982இல் பிளவுபட்டது. பிளவுபட்ட இயக்கம் இசுலாமிய அமல் என அழைக்கப்பட்டது. ஈரானின் புரட்சிகரப்படையின் ஆதரவைப் பெற்ற இதுவே சியா குடிப்படைகளில் பலமிக்கதாக விளங்கியது. பின்னாளில் இதுவே ஹிஸ்புல்லா அமைப்பாக மாறியது. 1985 ஆம் ஆண்டு அதிகாரபூர்மாக இயக்கம் உருவாகிவிட்டதை அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் முதன்மை எதிரிகள் என்றும் இசுரேலை இல்லாமல் அழித்தொழிப்பது என்ற அறிவிப்பின் மூலம் தெரிவித்தது. [17]
1990 களின் இறுதிப்பகுதியில் ஹெஸ்புல்லா ஓர் அரசியல் கட்சியை உருவாக்கியதோடு லெபனான் மக்கள் மத்தியிலும் கிராம மட்டத்திலும் பல சமூக நல செயற்றிட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தது. இலவச வைத்தியசாலைகள், இலவச பாடசாலைகள் போன்றவற்றை இவ்வியக்கம் நடத்திவருகிறது.
மே 2000 இல் லெபானானை விட்டு இஸ்ரேல் வெளியேறியதைத்தொடர்ந்து இவ்வெளியேற்றத்திற்கான காரணமாக பரந்தளவில் கருதப்பட்டது ஹெஸ்புல்லாவின் போராட்டமேயாகும். இஸ்ரேல் படையை தோற்கடித்த முதல் அரபுப்படையாக ஹெஸ்புல்லா இனங்காணப்பட்டது. அடிப்படையில் சியா இசுலாம்களிடையே உருவான அமைப்பாக ஹெஸ்புல்லா கருதப்பட்டாலும், சுன்னி முஸ்லிம்கள், லெபனான் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் இவ்வியக்கம் ஆதரவினையும் புகழினையும் பெற்றுக்கொண்டது.
இஸ்ரேல் படை வெளியேறியபின்னர் உலக வல்லரசுகள் சில ஹெஸ்புல்லா ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக அரசியலில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்தின. 2000ம் ஆண்டின் இறுதிப்பகுதில் ஆயுதக்களைவுக்கான தீவிர வெளிநாட்டு அழுத்தங்களை இவ்வியக்கம் எதிர்கொண்டது.
தாக்குதல்
[தொகு]1992 வரை கெசபுல்லாவின் பொதுச் செயலாளர் ஆக இருந்த அப்பாஸ்-அல்-முசாவி இசுரேல் வான் படையால் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக வடக்கு இசுரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு சிறுமி இறந்தார். துருக்கியிலுள்ள இசுரேலிய தூதரகத்தில் வாகனத்தில் வெடியை வெடித்து நடத்தப்பட்ட தாக்குதலில் இசுரேலிய பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டார். அர்கெந்தீனாவின் தலைநகரில் இசுரேல் தூதரகத்தை மனிதவெடி குண்டு மூலம் 29 பேர் கொல்லப்பட்டார்கள் [17] 1982 ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரமித்த தெற்கு லெபனானில் இருந்து 2000 ஆம் ஆண்டு இசுரேல் வெளியேறியது[18]. இதை அரபுகள் இசுரேலுக்கு எதிராக பெற்ற முதல் வெற்றியாக கெசபுல்லா (ஹெஸ்புல்லா) அறிவித்தது.
2006 ஆம் ஆண்டு கெசபுல்லா வடக்கு இசுரேலில் எல்லை தாண்டி நடத்திய தாக்குதலில் எட்டு இசுரேலி போர்வீரர்கள் கொல்லப்பட்டனர், இருவர் கடத்தப்பட்டனர். இதற்கு பதிலடியாக இசுரேல் பெய்ரூத்தின் தென் பகுதியில் 32 நாட்கள் நடத்திய தாக்குதலில் 1,125 இக்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பான்மையினர் குடிமக்கள். இசுரேல் தரப்பில் 119 வீரர்களும் 45 குடிமக்களும் கொல்லப்பட்டனர்.
1983 ஆம் ஆண்டு ஏப்பிரல் 18 அன்று பெய்ரூத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தை 2000 பவுண்டு டிஎன்டி சக்தியுள்ள குண்டுகளை டிரக்கில் ஏற்றி வந்து மோதியதில் 17 அமெரிக்கர் உட்பட 63 பேர் கொல்லப்பட்டனர்.
மீண்டும் அக்டோபர் 23, 1983 அன்று பெய்ரூத்திலுள்ள அமெரிக்க ஈரூடகப்படையினர் தங்கியுள்ள 4 மாடி குடியிருப்பில் 12,000 டிஎன்டி சக்தியுள்ள குண்டுகளை டிரக்கில் ஏற்றி வந்து மோதியதில் 200 அமெரிக்கர ஈரூடகப்படையினர், 18 கடற்படையினர், 3 தரைப்படையினர் கொல்லப்பட்டனர். 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குவைத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தை டிரக்கில் குண்டு ஏற்றி மோதியதில் தூதரகத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது இதில் தூதரகத்தில் வேலைபுரிந்த அமெரிக்கர் அல்லாதவர் நான்கு பேர் கொல்லப்பட்டனர். [19]
1984 ஆம் ஆண்டு யூலை மாதம் அமெரிக்கா பாதுகாப்பு கருதி தன் தூதரகத்தை மேற்கு பெய்ரூத்திலிருந்து சிறிது பாதகாப்புள்ள கிறுத்துவர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு பெய்ரூத்துக்கு மாற்றியது. செப்டம்பர் 20, 1984 அன்று 3000 பவுண்டு டிஎன்டி சக்தியுள்ள குண்டுகளை டிரக்கில் ஏற்றி வந்து மோதியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். ஆறு மாடியுள்ள தூதரகத்தின் முன்புறம் இதில் சேதமுற்றது. [20]
1994 ஆம் ஆண்டு அர்கெந்தீனாவின் தலைநகர் புவெனசு ஐரிசின் யூத குடியிருப்பில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர், 300 இக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். [21] [22][23]
ஹெஸ்புல்லாவின் சமூகசேவை
[தொகு]ஹெஸ்புல்லாவின் சமூக சேவைப்பிரிவு ஏராளமான சமூக சேவைகளை லெபனானில் புரிந்துவருகிறது. கழிவகற்றல் தொடக்கம் வைத்தியசாலைகள், கல்விக்கூடங்கள் வரை ஒரு அரசு செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் இது செய்துவருகிறது.
மே 2006 இல் ஐக்கிய நாடுகள் அவையின் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் பணிமனை வெளியிட்ட அறிக்கையின்படி, ஹெஸ்புல்லா இயக்கத்தின் சமூகசேவைப்பிரிவு 4 பெரும் வைத்தியசாலைகள், 12 சிறு வைத்திய கூடங்கள், 12 பாடசாலைகள், 2 விவசாய நிலையங்களை நடத்திவருகிறது. விவசாய கூடங்கள் வழியாக விவசாயிகளுக்கு தொழிநுட்ப ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சூழலியல் திணைக்களம் ஒன்றையும் இவ்வமைப்பு கொண்டிருக்கிறது. வைத்திய உதவிகள், லெபனானில் இயங்கும் மற்றைய தனியார் வைத்தியசாலைகளைவிடவும் மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதோடு, ஹெஸ்புல்லா அங்கத்துவர்களுக்கு இலவச சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. தற்போது ஹெஸ்புல்லா வறிய விவசாயிகளுக்கான கல்விக்கூட நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
ஜூலை 2006 இல் இஸ்ரேலிய தாக்குதலின் காரணமாக தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வழங்கல் தடைப்பட்டுள்ள நிலையில் ஹெஸ்புல்லா நகரமெங்கும் நீர்வினியோகத்தையும் மேற்கொள்கிறது.
ஹிஸ்புல்லா தலைவர்கள்
[தொகு]- சுபி அல்-துபாயிலி -1989–1991
- அப்பாஸ் அல்-மூசாவி - 1991 – 16 பிப்ரவரி 1992
- அசன் நசுரல்லா 16 பிப்ரவரி 1992 – 27 செப்டம்பர் 2024
- அசீம் சபி அல்-தீன் - செப்டம்பர் 2024 - தற்போது வரை
உசாத்துணை
[தொகு]- ↑ Ekaterina Stepanova, Terrorism in Asymmetrical Conflict: Ideological and Structural Aspects பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம், Stockholm International Peace Research Institute, Oxford University Press 2008, p. 113
- ↑ Elie Alagha, Joseph (2011). Hizbullah's Documents: From the 1985 Open Letter to the 2009 Manifesto. Amsterdam University Press. pp. 15, 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-8555-037-8.
- ↑ Shehata, Samer (2012). Islamist Politics in the Middle East: Movements and Change. Routledge. p. 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-78361-5.
- ↑ Husseinia, Rola El (2010). "Hezbollah and the Axis of Refusal: Hamas, Iran and Syria". Third World Quarterly 31 (5). doi:10.1080/01436597.2010.502695.
- ↑ Philip Smyth (February 2015). The Shiite Jihad in Syria and Its Regional Effects (PDF) (Report). The Washington Institute for Near East Studies. pp. 7–8. Archived from the original (PDF) on ஏப்ரல் 2, 2015. பார்க்கப்பட்ட நாள் March 13, 2015.
{{cite report}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Levitt, Matthew (2013). Hezbollah: The Global Footprint of Lebanon's Party of God. p. 356.
Hezbollah's anti-Western militancy began with attacks against Western targets in Lebanon, then expanded to attacks abroad intended to exact revenge for actions threatening its or Iran's interests, or to press foreign governments to release captured operatives.
- ↑ "Who Are Hezbollah?". BBC News. 21 May 2008. http://news.bbc.co.uk/2/hi/middle_east/4314423.stm.
- ↑ An International History of Terrorism: Western and Non-Western Experiences. p. 267.
Based upon these beliefs, Hezbollah became vehemently anti-West and anti-Israel.
- ↑ Criminology: Theories, Patterns & Typology. p. 396.
Hezbollah is anti-West and anti-Israel and has engaged in a series of terrorist actions including kidnappings, car bombings, and airline hijackings.
- ↑ Julius, Anthony. "Trials of the Diaspora: A History of Anti-Semitism in England." Google Books. May 1, 2015.
- ↑ Michael, Robert and Philip Rosen. "Dictionary of Antisemitism from the Earliest Times to the Present." Google Books. May 1, 2015.
- ↑ Perry, Mark. "Talking to Terrorists: Why America Must Engage with Its Enemies." Google Books. May 1, 2015
- ↑ "Analysis: Hezbollah's lethal anti-Semitism". The Jerusalem Post – JPost.com.
- ↑ "Letter that was sent from Neturei Karta to His Excellency Sayyed Hasan Nasrallah:". nkusa.org. 19 February 2008. பார்க்கப்பட்ட நாள் 24 Feb 2017.
- ↑ ‘If Israelis decide to stop…’: Hezbollah's new chief Naim Qassem says will only accept ‘suitable’ truce
- ↑ Hezbollah names Naim Qassem as new chief to replace Nasrallah
- ↑ 17.0 17.1 Who was Hezbollah leader Hassan Nasrallah?
- ↑ Two decades on, Israel confronts legacy of ‘forgotten’ south Lebanon occupation
- ↑ Remembering the 1983 Suicide Bombings in Beirut: The Tragic Events That Created the Diplomatic Security Service
- ↑ 1984 United States embassy annex bombing
- ↑ A bomb destroyed a Jewish community center in Argentina in 1994. What has happened since?
- ↑ Timeline of Hezbollah Violence
- ↑ US charges alleged Hezbollah member over 1994 Buenos Aires bombing
வெளி இணைப்புக்கள்
[தொகு]ஹிஸ்புல்லா குறித்தான் ஐ. நா சபையின் தீர்மானங்கள்
[தொகு]- UN Press Release SC/8181 UN, September 2, 2004
- Lebanon: Close Security Council vote backs free elections, urges foreign troop pullout UN, September 2, 2004
பிற இணைப்புகள்
[தொகு]- Is Hezbollah Confronting a Crisis of Popular Legitimacy? Dr. Eric Lob, Crown Center for Middle East Studies, March 2014
- Hezbollah பரணிடப்பட்டது 2020-10-28 at the வந்தவழி இயந்திரம்: Financing Terror through Criminal Enterprise, Testimony of Matthew Levitt, Hearing of the Committee on Homeland Security and Governmental Affairs, United States Senate
- Hizbullah's two republics by Mohammed Ben Jelloun, Al-Ahram, February 15–21, 2007
- Inside Hezbollah, short documentary and extensive information from Frontline/World on PBS.
- Hizbullah – the 'Party of God' – fact file at Ynetnews