உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டீபன் ஹாக்கிங்

விக்கிமேற்கோள் இலிருந்து

அறிமுகம்

[தொகு]
பாலியல் நூல்களை மடோனா விற்றிருப்பதைக் காட்டிலும் இயற்பியல் நூல்களை நான் அதிகமாக விற்றுள்ளேன்.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்; இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். 21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (myotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார்.

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் (Brief History Of time), பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design) மற்றும் கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) மேலும் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஒரு மிகச் சாதாரண நட்சத்திரத்தின் மிகச் சிறிய கிரகத்தில் வாழும் சற்றே முன்னேறிய குரங்கினம்தான் நாம்!
  • பாலியல் நூல்களை மடோனா விற்றிருப்பதைக் காட்டிலும் இயற்பியல் நூல்களை நான் அதிகமாக விற்றுள்ளேன்.
  • தாலமியின் புவிமையக் கோட்பாட்டில் காணப்பட்ட பெரும் நன்மை யாதென்றால் அது நிலையான விண்மீன்களின் கோளத்திற்குப் புறத்தே சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஏராளமாய் இடம் விட்டு வைத்திருந்தது. அதனால்தான் கிறித்துவ திருச்சபை ஏற்றுக் கொண்டது.[1]
  • கடவுள் அண்டத்தைப் படைப்பதற்கு முன் என்ன செய்தார்? என்ற கேள்விக்கு, இத்தகைய வினாக்களைக் கேட்பவர்களுக்காக அவர் நரகத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.
  • பரிசோதனைகளின் முடிவுகள் ஒரு கோட்பாட்டுக்கு எத்தனை முறை ஒத்துப் போனாலும் சரி, அடுத்த முறை அம்முடிவு அக்கோட்பாட்டுடன் முரண்படாது என்பதற்கு உறுதியேதுமில்லை.
  • கடவுளின் மனதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.[1]
  • பாதுகாப்பு உணர்வு என்பது நாம் என்ன வைத்திருக்கவில்லை என்பதை விட மற்றவர்களிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து இப்போது மதிப்பிடப்படுகிறது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Brief History Of time
  2. 1987இல் போப்புடன் உரையாடிய போது

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: