உள்ளடக்கத்துக்குச் செல்

அளவை (சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமய நோக்கில் வைதிக நெறி என்பது ஒன்று. [1] மணிமேகலை ஒன்பது சமயக்கணக்கர்களிடம் அவர்களது சமயத் திறங்களைக் கேட்டறிந்தாள். சமயக்கணக்கர் என்போர் சமய நெறிகளைக் கணிக்கும் அறிவர்கள். அந்த 9 பேரில் ஒருவர் வைதிக வழியைப் பின்பற்றும் சமயத்தவர். வைதிக நெறி வேத நெறி. இந்த நெறியாளர்கள் தெரியாத தெய்வத்தைத் தெரியும்படி விளக்கிக் காட்டுபவர்கள். ஐம்புலனால் அறியப்படாத தெய்வத்தை ஐம்புல அனுமானத்ததால் விளக்குபவர்கள். எந்தெந்த வகையான அனுமான அளவைகளால் தெய்வத்தின் இருப்பு உய்த்துணரப்படும் என்பதன் விளக்கமே அளவை.

வைதிகவாதி விளக்கம்

[தொகு]

வைதிக மார்க்கம் அளவை நெறியைப் பின்பற்றுவது.

வேத வியாதன்
கிருத கோடி
சைமினி

என்னும் ஆசிரியர்கள் அளவை நெறியைக் காட்டிய முன்னோர்.

10 அளவைகள்

[தொகு]
  1. காண்டல் (காட்சி)
  2. கருதல்
  3. உவமம்
  4. ஆகமம் (நூல்)
  5. ஆண்டைய அருத்தாபத்தி (பொருட்பேறு)
  1. இயல்பு
  2. ஐதிகம் (உலகுரை)
  3. அபாவம் (இன்மை)
  4. மீட்சி
  5. ஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி (உள்ள நெறி)

அளவை பத்து விளக்கம்

[தொகு]
  • காட்சி
    • கண்ணால் வண்ணமும், செவியால் ஓசையும், மூக்கால் நாற்றமும், நாவால் சுவையும், மெய்யால் ஊறும் காண்பது.
    • சுகம், துக்கம் காண்பது.
    • உயிர், ஐம்பொறி வாயில், மனம் மூன்றைக் காண்பது.
    • இவற்றிற்குப் பெயரிட்டு, அந்தப் பெயரைச் சொன்ன மாத்திரையிலேயே அதன் குணத்தை உணர்ந்துகொள்வது.
  • கருத்து
    • கருத்து என்பது ஒருவனது குறிக்கோள். இது 3 வகை.
  1. பொது (சாதனம், சாத்தியம்) - முன்பு யானையைக் கண்டு அதன் ஒலியைக் கேட்டவன் பின்பு யானை ஒலியை மட்டும் கேட்டபோது அங்கு யானை உண்டு என உணர்தல் அனுமான அனுமேயம்
  2. எச்சம் - ஆற்றில் வெள்ளம் வருவதைப் பார்த்து தோற்றுவாயில் மழை பெய்துள்ளது என உணர்தல்.
  3. முதல் - கருமேகம் கண்டு மழை பெய்யப்போவதை உணர்தல்.பிணத்தைப் பார்த்து உயுர் என ஒன்று உண்டு என உணர்தல்.
  • உவமம்
    • அவன் ஆடை பால் போல் வெள்ளை என்றவுடன் அவனது ஆடை நிறம் மனக்கண்ணில் தோன்றுதல்
  • நூல்
    • அறிவன் செய்த நூல் 'மேலுலகம்' உண்டு என்பதை நம்புதல்
  • பொருட்பேறு
    • 'ஆய்குடி கங்கை' என்றவுடன் கங்கைக் கரையில் ஆய்குடி உள்ளது என உயர்தல்.
  • இயல்பு
    • யானைமேல் இருப்பவன் தன் தோட்டியை (அங்குசத்தை) அடுத்தவனுக்குத் தரமாட்டான்.
  • உலகுரை
    • ஊரார் சொல்வதை நம்புதல். இந்த மரத்தில் பேய் உண்டு எனச் சொல்வதை நம்புதல்.
  • இன்மை
    • குதிரைக்குக் கொம்பு இல்லை என ஒப்பிட்டுத் தெளிதல்
  • மீட்சி
    • இராமன் வென்றான் என்றால் இராவணன் தோற்றான் என உணர்தல்
  • உள்ளநெறி
    • 'நாராசத் திரிவில் கொள்ளத் தகுவது காந்தம்' Get magnate in chemical change.

அளவைக் குற்றம் எட்டு

[தொகு]
  1. சுட்டுணர்வு
  2. திரியக் கோடல்
  3. ஐயம்
  4. தேராது தெளிதல்
  1. கண்டுணராமை
  2. இல்வழக்கு
  3. உணர்ந்ததை உணர்தல்
  4. நினைப்பு

அளவைக் குற்றம் விளக்கம்

[தொகு]
  1. சுட்டுணர்வு - பழைய நிகழ்வை எண்ணிப் பார்த்துப் புதியதும் அவ்வாறே நிகழும் எனக் கருதுதல்
  2. திரியக் கோடல் - வெயிலில் மின்னும் இப்பியைப் (கிளிஞ்சிலைப்) பார்த்து வெள்ளி எனல்.
  3. ஐயம் - தொலைவில் தெரியும் சோளக்கொல்லைப் பொம்மையைப் பார்த்து வைக்கோல் பொம்மையோ, மகனோ என ஐயுறல்
  4. தேராது தெளிதல் - ஆராய்ந்து பார்க்காமல் வைக்கோல் பொம்மையை மகன் எனல்.
  5. கண்டுணராமை - புலியா, ஆண்டலையா (ஆண்டுகொண்டு அலையும் அரிமாவா) என்று கண்ணால் காணாமலேயே உண்ட விலங்கின் மிச்சிலைப் பார்த்து முடிவெடுத்தல்
  6. இல்வழக்கு - முயல் கொம்பு என்று சொல்லுதல். எங்குத் தேடினும் அவன் பெறப்போவது முயற்கொம்பே.
  7. உணர்ந்ததை உணர்தல் - கடும்பனிக்கு மருந்து தீக்காய்தல் என உணர்தல்
  8. நினைப்பு - இவர் தந்தை எனத் தாய் சொல்லக் கேட்டு உணர்தல்.

அளவை நெறியில் ஆறு சமயம் (சாத்தனார் விளக்கம்)

[தொகு]

மணிமேகலை காலத்தில் அளவை மார்க்க நோக்கில் ஆறு உட்பிரிவுகள் இருந்தன. அவற்றைப் பற்றிய செய்திகளை மணிமேகலை நூலில் உள்ளபடி, மணிமேகலை மூல நூலில் உள்ள சொற்களால் பட்டியலிட்டுக் காண்கிறோம்.சேரநாட்டு வஞ்சிமாநகரில் இந்தச் சமயப் பிரிவினர் வாழ்ந்துவந்தனர். இவற்றின் தலைவர்கள் சமயக்கணக்கர் எனப்பட்டனர். மணிமேகலை அவர்களிடம் அவரவர் சமயத்திறங்களைக் கேட்டறிந்தாள்.

சமயம் சமயவாசிரியர் அளவை
உலோகாயதம் பிருகற்பதி மெய்ப்பிரத்தியம்
பௌத்தம் சினன் அனுமானம்
சாங்கியம் கபிலன் சாத்தம்
நையாயிகம் அக்கபாதன் உவமானம்
வைசேடிகம் கணாதன் அருத்தாபத்தி
மீமாஞ்சகம் சைமினி அபாவம்

மணிமேகலை உரைத்திறம் கேட்ட சமயக்கணக்கர்கள்

[தொகு]
  • சமயக்கணக்கர்களை வினவி மணிமேகலை அவரவர் சமயத்தின் உரைத்திறத்தைக் கேட்டறிகிறாள்.
  1. சைவவாதி
  2. பிரமவாதி
  3. வேதவாதி
  4. ஆசீவகவாதி
  1. நிகண்டவாதி
  2. சாங்கியவாதி
  3. வைசேடிகவாதி
  4. பூதவாதி

இவற்றையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. மணிமேகலை, 27 சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவை_(சமயம்)&oldid=3328791" இலிருந்து மீள்விக்கப்பட்டது