உள்ளடக்கத்துக்குச் செல்

அவலோகிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவலோகிதரரின் நான்கு கைகளுடன் இருக்கும் உருவம்
பெயர்கள்
சமஸ்கிருதம்: अवलोकितेश्वर
IAST: Avalokiteśvara
திபெத்திர வரிவடிவம்: སྤྱན་རས་གཟིགས
திபெத்திய மொழி: சென்ரெட்ஸிக்
அவலோகிதர், கையில் தாமரைப்பூ ஏந்தியவராய்

அவலோகிதர் (சமஸ்கிருதம்: अवलोकितेश्वर , அவலோகிதேஷ்வர "கீழே நோக்கி பார்க்கும் தேவன்"), மஹாயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு போதிசத்துவர் ஆவார். அவர் அனைத்தும் புத்தர்களின் கருணையின் வடிவாக கருததப்படுகிறார். சீனத்தில் இவரை குவான்-யின் என்ற பெண் வடிவத்தில் போற்றப்படுகிறார். திபெத்திய மொழியில் இவரை சென்ரெட்ஸிக் என்று அழைக்கின்றனர்.

அவலோகிதர் பத்மபானி (தாமரையைக் கையில் ஏந்தியிருப்பவர்) என்ற குறிப்புப்பெயரிலும் போற்றப்படுகிறார். திபெத்தின் தலாய் லாமா அவலோகிதரரின் அவதராமாக கருத்தப்படுபவர்.

'லோகேஷ்வர ராஜா' (தமிழில் உலகநாதன்) என்பது அவலோகிதரரின் ஒரு சிறப்புப்பெயாராகும். இதற்கு அனைத்தும் உலகங்களின் அரசன் என்று பொருள் கொள்ளலாம்

சொற்பிறப்பியல்

[தொகு]

அவலோகிதேஷ்வர என்ற சொல் மூன்று பகுதிகளால் ஆனது , அவ, என்றால் கீழே என்று பொருள். லோகித என்றால், பார்க்க என்று பொருள், 'ஈஷ்வரர்' என்றால் கடவுள் என்று பொருள். இந்த மூன்று சொற்களும் சமஸ்கிருதம் சந்தி விதிகளின் படி இணைந்து அவலோகிதேஷ்வரர் என்று ஆனது. இதற்கு கீழே (உலகத்தை) பார்க்கும் தேவன் என்று பொருள். திபேத்திய சொல்லான சென்ரெட்ஸிக் என்பதற்கு அனைது உயிர்களையும் பார்ப்பவர் என்று பொருள்

இந்தப் பெயரை சீன பௌத்தர்கள் அவலோகிதேஸ்வரர் என்று தவறாக புரிந்து கொண்டு, இவரை உலகத்தின் அனைத்து ஒலிகளையும் கேட்பவர் (குவான் யீன்) என்று போற்றினாரென (ஸ்வர என்றால் ஒலி) என கருதியதாக கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி அவலோகிதேஸ்வரர் தான், இந்த போதிசத்துவரின் ஆதிமூல பெயர் என கருதப்படுகிறது. ஏனெனில் -ஈஷ்வரர் என்ற பின்னொட்டு சமஸ்கிருதத்தில் ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் காணக்கிடைப்பத்தில்லை. மேலும் அவலோகிதேஸ்வரர் என்ற சொல் ஐந்தாம் நூற்றாண்டும் பௌத்த சமஸ்கிருத படைப்புகளின் காணக்கிடைப்பது இந்த கருத்துக்கு வலுசேர்க்கிறது.

அவலோதேஷ்வரர் மற்றும் அவலோகிதேஸ்வரர் ஆகிய இருச்சொற்களுக்கும் அடிச்சொல்லாகிய அவலோகித(மேற்பார்வை) என்ற சொல்லைக்கொண்டே இந்த போதிசத்துவர் தமிழில் அவலோகிதர் என அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பெயரின் மூல வடிவம் போதிசத்துவரின் கடமையை உணர்த்துவதாக உள்ளது. எனினும், இந்தப்பெயர் ஈஷ்வரர் என மாறியது சைவத்தின் தாக்கத்தை காட்டுகிறது. ஏனெனில் ஈஷ்வரர் என்பது இந்து மத தெய்வங்களுடன் முக்கியமாக சிவனுடன் தொடர்புடையது.

தோற்றம்

[தொகு]

மேற்கத்திய கருத்து

[தொகு]

மேற்கத்திய அறிஞர்களிடைய அவலோகிதரரின் தோற்றத்தை குறிந்து ஒருமித்த கருத்து இல்லை. சிலர், இவர் அக்கால வேத மதத்தில் இருந்து தோன்றியவராக இருக்கலாம் என்று கருதிகின்றனர் (ஈஷ்வர - வேத மதத்தின் தேவர்களை குறிக்கக்கூடிய சொல்).

தேரவாத பௌத்தத்தில், 'லோகேஷ்வரர்' என்பது ஒரு புத்தரை குறிக்கக்கூடிய ஒரு சொல். இந்த புத்தர், அமிதாப புத்தரின் மடத்தில் புத்த பிக்குவாக (பிட்சுவாக) முற்பிறவில் இருந்ததாக கூறுவர்

தமிழ்நாட்டினரின் கருத்து

[தொகு]

அவலோகிதர் வாழ்வதாக பௌத்த சூத்திரங்களில் போதாலகம் என்னும் மலை பொதிய மலை எனவும், இவருடைய வடிவத்திற்கும் தெக்கணமூர்த்தி என்னும் தட்சிணாமூர்த்தி வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்புடையதென்றும் கூறுவர் ([1]). அவலோகிதர் அகத்திய முனிவருக்கு தமிழ் கற்பித்தார் என வீரசோழியம் கூறுகின்றது [1].

மஹாயான பௌத்தத்தினரின் கருத்து

[தொகு]

மஹாயான கருத்தின்படி, அவலோகிதர் "துன்பத்தில் இருக்கும் அனைத்து உயிர்களின் வேண்டுதலைகளைக் கேட்பதாகவும், அனைத்து உயிர்களும் நிர்வாணம் (மோக்ஷம்) அடைய உதவும் வரையில் தான் புத்தத்தன்மையை அடைவதில்லை" என்ற உயரிய உறுதிமொழி பூண்டவாரக கருதுகின்றனர். மஹாயான சூத்திரங்களுள் இருதய சூத்திரம், தாமரை சூத்திரமும் இவருக்கு தொடர்புடையன. குறிப்பாக தாமரை சூத்திரத்தின் 25-ஆவது அத்தியாயம் 'அவலோகிதேஷ்வர சூத்திரம்' என்று அழைக்கப்படுகின்றது.

அவலோகிதரரின் ஆறு தன்மைகள்:

  1. மகா கருணை,
  2. சிறந்த அன்பு,
  3. தைர்யம்,
  4. பிரபஞ்ச ஒலி,
  5. தேவர்கள் மற்றும் மனிதர்களின் தலைமை,
  6. எங்கும் நிறைந்து இருக்கும் தன்மை.

அவலோகிதர போதிசத்துவரின் ஆறு குணங்களும் ஆறு உலகங்காளான நரக, ப்ரேத, மிருக, அசுர, மனித மற்றும் தேவ உலகங்களில் வாழ்பவர்களை நிர்வாணத்திற்கு (மோக்ஷம்) அழைத்து செல்ல உதவுகிறது

திபெத்திய பாரம்பரியத்தில், அவலோகிதர் சென்ற கல்பத்தில் இருந்த ஒரு கருணை நிரம்பிய புத்த பிக்கு, தற்போதைய கல்பத்தில் போதிசத்துவம் அடைத்தாக கருதிகின்றனர். இன்னொரு கருத்தின் படி அவலோகிதர் பிரபஞ்ச கருணையின் வடிவமாகும்.

அவலோகிதர போதிசத்துவரின் ஏழு உருவங்கள்:

  • 1.அமோகபாஸா( தவறே புரியாத வலையை ஏந்தியவர், பாசா-வலை)
  • 2.சஹஸ்ரபுஜ-சஹஸ்ரநேத்ரா (ஆயிரம் கரங்களும், ஆயிரம் கண்களும் உடையவர்)
  • 3.ஹயக்ரீவா (குதிரை முகம் உடையவர்)
  • 4.ஏகாதசமுகா (11 முகம் கொண்டவர்)
  • 5.சுண்டி
  • 6.சிந்தாமணி சக்ரா (சிந்தாமணி இரத்தினத்தை ஏந்தியவர்)
  • 7.ஆர்ய அவலோதேஷ்வரா (சிறந்தவர், மேன்மையானவர்)

மந்திரங்கள்

[தொகு]

திபெத்திய பௌத்தத்தில், அவலோகிதரரை 'ஓம் மணி பத்மே ஹூம்' என்ற மந்திரந்தால் வணங்குகின்றனார். இந்த ஆறெழுத்து மந்திரத்தின் அதிபதி ஆகையால் இவரை ஷடாக்ஷரி (ஷட-ஆறு, அக்ஷரம் - எழுத்து) என்ற அழைக்கின்றனர்.

ஜப்பானிய ஷிங்கோன் பௌத்த மதத்தில் இவரை 'ஓம் அரோ-ரிக்ய ஸ்வாஹா; என்ற மந்திரத்தை பயன்படுத்தி போற்றுக்கின்ற்னர். 'ஓம் மணி பத்மே ஹூம்' என்ற மந்திரத்தையும் அவ்வப்போது பயன்படுத்துவர்.

இவருடன் தொடர்புடைய இன்னொரு பிரபலான மந்திரம் மஹா கருணா தாரணி அல்லது நீலகண்ட தாரணி ஆகும்.

ஆயிரங்கை அவலோகிதர்

[தொகு]
ஆயிரம் கைகள் கொண்ட அவலோகிதர்

புத்த புராணங்களின் படி அவலோகிதர் அனைத்து உயிர்களும் மோட்சம் அடையும் வரை ஒய்வெடுக்கக்கூடாது என்ற உறுதிமொழி பூண்டவர். அந்த உறுதிமொழியின் படி அவர் அனைத்து உயிர்களும் நிர்வாணம் அடைய உதவி வந்தார். ஆனால் எவர், எவ்வளவு முயன்றும் அவர் கரையேற்ற பல உயிர்கள் இருந்தன. இந்த போராட்டத்தில் அவர், தலை பதினோரு துண்டுகளாகவும், கைகள் ஆயிரம் துண்டுகளாகவும் வெடித்து சிதறியது. இதைக்கண்ட அமிதாப புத்தர், அந்த பதினோரு துண்டுகளையும் முழுமையாக்கி பதினொரு தலைகளும், ஆயிரம் துண்டுகளை முழுமையாக்கி ஆயிரம் கைகளும் தந்தார். அவலோகிதர் இந்த பதினோரு தலைகளால் பதினோரு திசைகளை கண்காணித்து, ஆயிரம் கரங்களால் துன்பத்தில் இருக்கும் எண்ணற்ற உயிர்களுக்கு உதவுகிறார்.

அவலோகிதர் குறித்த திபெத்திய நம்பிக்கைகள்

[தொகு]

திபெத்திய பௌத்தத்தில் அவலோகிதர் ஒரு போதியை எய்திய ஒரு பூரண புத்தரகவே கருதப்படிகிறார். மற்ற மஹாயான பிரிவுகளில் அவர் ஒரு உயரிய போதிசத்துவர்.

திபெத்தில் இவர் பொதுவாக 'சஹஸ்ரபுஜ' மற்றும் 'ஏகாதசமுக' ரூபத்தில் வணங்கப்படுகிறாம். திபெத்திய பௌத்ததில் தாரா தேவி இவரிடம் இருந்து தோன்றியவர். உயிர்களின் துன்பங்களை கண்டு இவர் வடித்தே கண்ணீரே தாரா தேவியாக உருவானது.

அவதாரங்கள்

[தொகு]

அவலோகிதரருக்கு பல அவதாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியவானவை

சமஸ்க்ருதம் சீனம் ஜப்பானியம் பொருள் விபரம்
ஆர்யாவலோகிதேஷ்வரா 聖觀自在 ஷோ கன்னோன் புனிதமான அவலோகிதேஷ்வரர் அவலோகிதரரின் மூல உருவம்
ஏகாதசமுகா 十一面 ஜூஇசிமேன் 11 முகங்கள் கொண்டவர் 11 முகங்களும் பதினோரு லோகங்கள் உள்ளவர்களும் தருமத்தை உபதேசிக்க
சஹஸ்ரபுஜ-சஹஸ்ரநேத்ரா 千手千眼 சென்ஞூசென்கான் ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகள் உடையவர் அனைவருக்கு உதவும் உருவம்
சிந்தாமணி சக்ரா 如意輪 ந்யோஇரின் விருப்பங்களை பூர்த்தி செய்பவர்( சிந்தாமணி ரத்தினம் - கேட்கக்கூடியதெல்லாம் தர வல்லது) கையில் சிந்தாமணி இரத்தினம் ஏந்தி இருபார்
ஹ்யக்ரீவா 馬頭 படோ குதிரை முகம் கோண்டவர் உக்கிர உருவம்
சுண்டி' 准提 ஜுன்டேஇ பெண் உருவத்தில் அவலோகிதேஷ்வரர்
அமோகபாஸா 不空羂索 ஃபுகூகென்ஜாகு வலையும், கயிறும் ஏந்தியவர்
ப்ருகுதி உக்ர-கண்கள் கொண்டவர்
பாண்டரவாசினீ 白衣 ப்யாகுஎ புனிதமான வெள்ளை உருவம் கொண்டவர்
பர்ணசாபரி இலைகளால் சூழப்பட்ட்வர்
ரக்த ஷடாக்ஷரி ஆறு சிவப்பு அக்ஷரங்களின் அதிபதி
ஸ்வேதபாகவதீ வெள்ளை உருவம் கொண்டவர்
உதாகா ஸ்ரீ புனித நீர்

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. நா. கணேசன், "தமிழகத்தில் தட்சிணாமூர்த்தியும் பத்மபாணி அவலோகிதரும்" பார்க்கவும்
  • Alexander Studholme: The Origins of Om Manipadme Hum. Albany NY: State University of New York Press, 2002 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-5389-8
  • Kuan-Yin: The Chinese Transformation of Avalokitesvara (2001) by Chün-fang Yü, ISBN-13: 978-0231120296, Columbia University Press
  • Buddha in the Crown: Avalokitesvara in the Buddhist Traditions of Sri Lanka (1999) by James P. McDermott, Journal of the American Oriental Society, 119 (1): 195-

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவலோகிதர்&oldid=3279978" இலிருந்து மீள்விக்கப்பட்டது