எக்கெனீடீ
Appearance
எக்கெனீடீ | |
---|---|
ரெமோரா பிராக்கிதேரா (Remora brachyptera) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | எக்கெனீடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
எக்கெனீடீ (Echeneidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை மண்ணிறமான நீண்ட உடலமைப்புக் கொண்டவை. இக் குடும்ப மீன்கள் 30 - 90 சதம மீட்டர் (1 - 3 அடி) நீளம் வரை வளர்கின்றன. இவற்றின் முதுகுத் துடுப்பு, பிற பெரிய கடல்வாழ் விலங்குகளின் தோலில் ஒட்டிக் கொள்வதற்காக உறிஞ்சிகள் போன்ற உறுப்பாக மாற்றம் பெற்றுள்ளன. பின்புறமாக வழுக்கிச் செல்வதன் மூலம் உறிஞ்சலை அதிகப்படுத்தி தாம் ஒட்டிக்கொண்டுள்ள விலங்குகளை இறுகப் பிடித்துக் கொள்கின்றன. முன்புறமாக நீந்துவதன் மூலம் தம்மை அவை விடுவித்துக் கொள்கின்றன. இம் மீன்கள் சில சமயங்களில் சிறிய தோணிகளில் ஒட்டிக் கொள்வதும் உண்டு. இவை தாமாகவே நன்கு நீந்தவும் கூடியன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)