உள்ளடக்கத்துக்குச் செல்

எண்ணூர் அனல் மின் நிலையம்

ஆள்கூறுகள்: 13°12′5″N 80°18′42″E / 13.20139°N 80.31167°E / 13.20139; 80.31167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்ணூர் அனல்மின் நிலையம்
நாடுஇந்தியா
அமைவு13°12′5″N 80°18′42″E / 13.20139°N 80.31167°E / 13.20139; 80.31167
நிலைஇயக்கத்தில் உள்ளது
இயங்கத் துவங்கிய தேதிஉலை 1: மார்ச்சு 31, 1970
உலை 2: பெப்ரவரி 14, 1971
உலை 3: மே 17, 1972
உலை 4: மே 26, 1973
உலை 5: திசம்பர் 2, 1975

எண்ணூர் அனல்மின் நிலையம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு நிலக்கீல் கரி அனல் மின் நிலையம் ஆகும்.

வரலாறு

[தொகு]

எண்ணூர் அனல்மின் நிலையம் 1970ஆம் ஆண்டு மின்உற்பத்தி தேவைகளை நிறைவேற்ற கட்டமைக்கப்பட்டது.தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நான்கு அனல்மின் நிலையங்களுள் ஒன்றான இது தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிலையத்தின் முழு திறன் 450 மெகாவாட்டு ஆகும்.[1] இந்த நிலையத்திற்கு தேவையான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படுகிறது.[2][3] எனினும், 1000 மெகாவாட்டு திறன் உலையின் கட்டுமான பணிகள் 2007இல் தொடங்கின.[4][5][6] இந்நிலையத்தில் தற்போது இரண்டு 60 மெகாவாட் உலையும் மூன்று 110 மெகாவாட் உலையும் அமைந்துள்ளன. கூடுதலாக 500 மெகாவாட் உற்பத்தி உலை நிறுவ பரிந்துரைக்கபட்டு கட்டுமான பணிகள் தொடங்கபட்டன.[7] இந்நிலையத்தின் மொத்த மதிப்பு 270 கோடி ரூபாய் ஆகும்.

அம்சங்கள்

[தொகு]

மாநிலத்தின் முக்கிய உற்பத்தி நிலையமாக திகழும் இதன் உற்பத்தி திறன் அண்மைய ஆண்டுகளில் மேம்படுத்தபட்டுள்ளது.[8] தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து பல விருதுகளை பெற்றுள்ளது.[1][9] மேலும், கழிவுகளை சுத்திகரித்து முறையாக வெளியேற்ற சிறப்பு அமைப்புக்களை கொண்டுள்ளது.[10]

இயக்கத்திற்கு தேவையான நிலக்கரி MCL (தல்கர் மற்றும் எல்பி பள்ளத்தாக்கு), ஒரிசா மற்றும் ECL, ரணிகஞ்சு , மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இருந்து பெறப்படுகிறது. 2008–2009 ஆண்டின் கொள்திறன் காரணி (plant load factor) 49.17 சதவிகிதம் ஆகும்.[11]

உற்பத்தி திறன்

[தொகு]
பிரிவு எண் உற்பத்தி திறன் (மெகாவாட்டு) அமைக்கபட்ட
தேதி
தற்போதைய
நிலை
1 60 31 மார்ச்சு 1970 இயங்குகிறது
2 60 14 பிப்ரவரி 1971 இயங்குகிறது
3 110 17 மே 1972 இயங்குகிறது
4 110 26 மே 1973 இயங்குகிறது
5 110 2 டிசம்பர் 1975 இயங்குகிறது
6 660 2 டிசம்பர் 2015 இயங்குகிறது

மேம்பாடுகள்

[தொகு]

எண்ணூர் மின் நிலையத்தில் மேம்படுத்தல் நடைபெறுகிறது. இங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.[12][13] இந்த புதிய திட்டம் அண்மைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்நிலையத்தின் உற்பத்தியை பெருக்க வடிவமைக்கபட்டது. இத்திட்டத்தில் நுட்ப நடைமுறைபடுத்தல் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[14] எனினும் அண்மைய வருடங்களில் தமிழ்நாட்டில் நிலவும் நிலக்கரி பற்றாக்குறையால், இந்நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தபடுகிறது.[15]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Thermal, Power Station. "tangedco" (PDF). tangedco. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
  2. Coal, Arrangement of. "arrangement of coal to meet the requirement of thermal power stations of tangedco" (PDF). tangedco. பார்க்கப்பட்ட நாள் 2012-09-07.
  3. "thermal power plants of india". thermalpowerplants. Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
  4. "Ennore power plant construction to begin in March". தி இந்து. 2007-04-01 இம் மூலத்தில் இருந்து 2006-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061202205803/http://www.hindu.com/2006/11/11/stories/2006111114970900.htm. பார்த்த நாள்: 2012-05-07. 
  5. "location". wikimapia. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
  6. "power stations". asia studies இம் மூலத்தில் இருந்து 2012-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120526135421/http://www.asiastudies.org/file/publication/balan/TNEB%20Paper.pdf. பார்த்த நாள்: 2012-05-07. 
  7. "Foundation stone for Ennore power plant to be laid on Sept 5". One India News. 2007-08-26. http://news.oneindia.in/2007/08/26/foundation-stone-for-ennore-power-plant-to-be-laid-on-sept-5-1188118953.html. பார்த்த நாள்: 2012-05-07. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "indian power sector". indian power sector. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
  9. Ramakrishnan, T (2012-04-20). "Thermal stations perform well, yet energy deficit mounts". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/article3336776.ece. பார்த்த நாள்: 2012-05-07. 
  10. Vydhianathan, S (2012-11-01). "ETPS sets up plant to treat ash slurry". The Hindu இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125103121/http://www.hindu.com/thehindu/2002/01/11/stories/2002011101960500.htm. பார்த்த நாள்: 2012-09-07. 
  11. Jayabalan, P. "A Study on Power Scenario in Tamil Nadu" (PDF). Center for Asia Studies, Chennai. Archived from the original (pdf) on 26 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 6 Apr 2014. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  12. "TNEB’s Ennore SEZ power project gets green approval". financial express. 2010-09-10. http://www.financialexpress.com/news/tnebs-ennore-sez-power-project-gets-green-approval/679157/. பார்த்த நாள்: 2012-05-07. 
  13. Ramakrishnan, T (2012-02-01). "Nod for project to replace Ennore power station". The Hindu. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2766741.ece. பார்த்த நாள்: 2012-05-07. [தொடர்பிழந்த இணைப்பு]
  14. "TN to set up 660 MW supercritical thermal plant at Ennore". தி இந்து. http://www.thehindubusinessline.com/industry-and-economy/government-and-policy/article3257941.ece. பார்த்த நாள்: 2012-07-07. 
  15. Srikanth, R (2011-11-14). "State may have to rely on imported coal for new thermal projects". The Hindu. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2625049.ece. பார்த்த நாள்: 2012-09-07.