ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-390எல்
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Scorpius |
வல எழுச்சிக் கோணம் | 17h 54m 19.2s[1] |
நடுவரை விலக்கம் | -30° 22′ 38″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 15.7 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M4[1] |
வான்பொருளியக்க அளவியல் | |
தூரம் | 21,500 ±3300 ஒஆ (6,600 ±1,000 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 0.22 M☉ |
வேறு பெயர்கள் | |
EWS 2005-BUL-390, EWS 2005-BLG-390[1] | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-390எல் (OGLE-2005-BLG-390L) என்பது M வகை முதன்மை வரிசை விண்மீனாமாகும். இது 95% நிகழ்தகவில் சிவப்பு குள்ளனாகவும் 4% நிகழ்தகவில் வெண்குறுமீனாகவும், <1% நிகழ்தகவு நொதுமி விண்மீன் அல்லது கருந்துளையாகவும் இருக்கலாம். இந்த மங்கலான 16 பருமைகொண்ட விண்மீன் விருச்சிக விண்மீன் தொகுப்பில் சுமார் 21,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.[1]
கோள் அமைப்பு
[தொகு]ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-390எல் ஒரு அறியப்பட்ட கோளைக் கொண்டுள்ளது, இது ஈர்ப்பு நுண்வில்லை நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோள் புவியை விட ஐந்து மடங்கு பெரியது, இது தாய் விண்மீனிலிருந்து 2.6 வானியல் அலகு தொலைவில் சுற்றி வருகிறதுடீது 2006, ஜனவரி 25, அன்று கண்டுபிடிகப்பட்டது OGLE-2005-BLG-390Lb ஒரு காலத்தில் புவியை விட 5.5 மடங்கு பொருண்மை கொண்ட ஒரு முதன்மை வரிசை விண்மீனைச் சுற்றி அறியப்பட்ட மிகச்சிறிய புறக் கோள்களில் ஒன்றாகக் கருதப்பட்டது, இது பாறையாக இருக்கலாம். கோள் வட்டணை ஆரம் (ஒரு வட்ட வட்டணையாகக் கருத) 2.6 வானியல் அலகு ஆகும், இருப்பினும் வட்டணைக் கூறுகள் தெரியவில்லை. அதன் குறைந்த பொருண்மை, சுமார் 50 கெ வெப்பநிலையின் அடிப்படையில், இந்தக் கோள் வியாழன் போன்ற வளிமப்பெருங்கோளாக இருப்பதைக் காட்டிலும் முதன்மையாக புளூட்டோ அல்லது யுரேனசு போன்ற பனிக்கட்டிகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. [2]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 5.5 M⊕ | 2.6 | ~3500 | ? |
மேலும் பார்க்கவும்
[தொகு]- சூரியப் புறக்கோள்களைக் கொண்ட விண்மீன்களின் பட்டியல்
- ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-169எல்
- ஒளியியல் ஈர்ப்பு வில்ல்லைச் செய்முறை (ஒஈவிசெ)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "SIMBAD query result: NAME OGLE 2005-BLG-390 -- (Micro)Lensing Event". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-04-30.
- ↑ Beaulieu, J.-P. et al. (January 2006). "Discovery of a cool planet of 5.5 Earth masses through gravitational microlensing". Nature 439 (7075): 437–440. doi:10.1038/nature04441. பப்மெட்:16437108. Bibcode: 2006Natur.439..437B.