உள்ளடக்கத்துக்குச் செல்

கங்காளி தொல்லியல் மேடு

ஆள்கூறுகள்: 27°29′29″N 77°40′26″E / 27.491389°N 77.673889°E / 27.491389; 77.673889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்காளி தொல்லியல் மேடு

இந்தியாவின் மதுரா நகரத்தில் கங்காளி தொல்லியல் மேட்டின் அமைவிடம்

கிபி முதலாம் நூற்றாண்டின் அயாகாபட்டா எனும் சமணச் சிற்ப கற்பலகை, மதுரா அருங்காடசியகம்
கங்காளி தொல்லியல் மேடு is located in இந்தியா
கங்காளி தொல்லியல் மேடு
Shown within India#India Uttar Pradesh#Asia
கங்காளி தொல்லியல் மேடு is located in உத்தரப் பிரதேசம்
கங்காளி தொல்லியல் மேடு
கங்காளி தொல்லியல் மேடு (உத்தரப் பிரதேசம்)
கங்காளி தொல்லியல் மேடு is located in ஆசியா
கங்காளி தொல்லியல் மேடு
கங்காளி தொல்லியல் மேடு (ஆசியா)
மதுரா பகுதிகளை ஆண்ட |மேற்கு சத்திரபதி மன்னர் சோடசாவின் 42-வது ஆண்டு ஆட்சிக் காலத்தைக் குறிக்கும் கங்காளி சிற்பக் கற்பலகை கல்வெட்டு [1]
வடக்கு சத்திரபதி மன்னர் சோடசாவின் கல்வெட்டு[2]
மதுராவில் கங்காளி தொல்லியல் மேட்டின் அமைவிடம்

கங்காளி தொல்லியல் மேடு (Kankali Tila or Kankali mound or Jaini mound) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் தலைமையிடமான மதுரா நகரத்தில் அமைந்த சமணத் தொல்லியல் மேடு ஆகும். செர்மானிய தொல்லியல் அறிஞர் அலோயிஸ் அன்டன் ஃபூரர் என்பவர் இவ்விடத்தில் 1890-1891களில் அகழாய்வு செய்த போது சமணச் சிற்பங்கள், தூண்கள் மற்றும் கல்வெட்டுக்களைக் கண்டெடுத்தார்.[3] கங்காளி தொல்லியல் மேடு 500 அடி உயரம், 350 அடி அகலத்தில் செவ்வக வடிவம் கொண்டிருந்தது. [3]

கங்காளி தொல்லியல் மேட்டை அகழாய்வு செய்த போது கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி 12-ஆம் நூற்றாண்டு வரையிலான, சமணத்தில் திகம்பரர்-சுவேதாம்பரர் பிரிவுகள் உண்டாவதற்கு முந்தைய சமண சமயத்தின் அழகிய சிற்பங்கள், கல்வெட்டுக்கள், தூண்கள்,[4]சிலைகள், அயாகாபட்டா எனும் சமணக் கல் சிற்பப் பலகை போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கங்காளி தொல்லியல் மேட்டில் கண்டிபிடிக்கப்பட்ட சமணத் தொல்லியல் பொருட்கள் மதுரா அரசு அருங்காடசியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

1889-இல் கங்காளி தொல்லியல் மேடு, மதுரா

கங்காளி தொல்லியல் மேட்டில் கிடைத்த சமணத் தொல்பொருட்கள்

[தொகு]

கங்காளி தொல்லியல் மேட்டில் கிடைத்த சமணத் தொல்பொருட்கள் அனைத்தும் மதுரா அரசு அருங்காடசியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவைகள்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Jain stûpa and other antiquities of Mathurâ by Smith, Vincent Arthur Plate XIV
  2. Chandra, Ramaprasad (1919). Memoirs of the archaeological survey of India no.1-5. p. 22.
  3. 3.0 3.1 Smith 1901, ப. Introduction.
  4. The Jaina Stupa at Mathura: Art and Icons, Renuka Porwal, Prachya Vidyapeeth, Shajapur, 2016
  5. The Jain Stupa And Other Antiquities Of Mathura. 1901. p. 53.

உசாத்துணை

[தொகு]