உள்ளடக்கத்துக்குச் செல்

குரு பரம்பரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரு பரம்பரை (சமசுகிருதம்: परम्परा, paramparā), (ஆங்கிலம்: (Lineage of Teachers) என்பது இந்து சமய வேத பண்பாட்டின் மரபுப்படி, வேத வேதாந்த சாத்திரத்திங்களில் குறிப்பிட்டுள்ள குருகுலத்தில் [1] ஒரு குருவிடமிருந்து சாத்திரக் கல்வி பயின்ற மாணவர்கள் பற்றிய பரம்பரையைக் குறிக்கிறது. இந்த குரு பரம்பரை மரபு பௌத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறது.

சமசுகிருதத்தின்படி ”குரு பரம்பரை” என்பதன் பொருள் தடையற்ற வாரிசு, தொடர்ச்சி, தியானம் அல்லது மரபு” என்று குறிப்பிடப்படுகிறது.[2] குருகுல மரபில் கல்வி பயின்ற குரு சீட பரம்பரையினர், குருவை தங்கள் குடும்ப உறுப்பினராக ஏற்றுக் கொள்ளும் மரபும் உள்ளது.[3]

சில வெள்ளை தாந்தீரிக குருபரம்பரை மரபுகளில் குரு – சீடர்கள் பரம்பரையில், ஒரு காலகட்டத்தில் செயல்படும் ஒரு குருமட்டுமே இருப்பர்.[4]

இந்து குரு பரம்பரை அமைப்பில் வேத வேதாந்த சாத்திரங்களை குருவானவர், தன் சீடர்களுக்கு வாய் மொழியாக கற்றுத்தருவார். அதை சீடர்கள் மனதில் நன்கு இருத்தி, எப்போதும் அதைப் பற்றியே சிந்தித்து கொண்டே இருந்து, ஐயம் திரிபுறக் கற்று, தனது குருவிற்குப் பின் தனது சீடர்களுக்கு அதே கல்வியை, தன் குரு தனக்கு உபதேசித்தபடி கற்றுத் தரவேண்டும். இவ்வாறாக வேத வேதாந்த சாத்திரங்கள் எவ்வித மாற்றமுமின்றி வாய்மொழி மூலமாக மட்டுமே குருவிடமிருந்து சீடர்களுக்கு, குரு பரம்பரையில் காக்கப்பட்டு வருகிறது.[5]

குருபரம்பரையில் ஆன்மிகம், இசை, நாட்டியம், மருத்துவம், போர்க்கலை, போன்ற கலைகள்கூட கற்றுக் கொடுக்கப்படுகிறது.

குரு பரம்பரையில் குருவின் பட்டங்கள்

[தொகு]

குரு பரம்பரையில் தனக்கு கல்வி கற்றுக்கொடுத்த குருவை மட்டுமின்றி, குருவின் குருக்களையும் போற்றி வணங்கும் மரபு சீடர்களுக்கு உள்ளது.[6] தகுதிக்கேற்ப குருவை சில அடைமொழிகளுடன் அழைக்கப்படுவது இந்து சமய மரபு. அவைகள் சில கீழ்க்கண்டவாறு:

  1. குரு - ஒரு சீடனுக்கு தற்போது கல்வி கற்றுத் தரும் குரு.
  2. பரம குரு - ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்ட குரு - சீட மரபை நிலைநாட்டிய குரு. (எ. கா., ஆதி சங்கரர், அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய பரம குரு).
  3. பராபர குரு (Parātpara-Guru) – பல்வேறு தத்துவங்களைக் கொண்ட குரு – சீட மரபுகளை தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்தவர் மகாகுரு (எ.கா., வேத வியாசர்).
  4. பரமேஷ்டி குரு’’’– மோட்சத்தை வழங்கக்கூடிய மிக மிக உயர்ந்த குரு. (எ. கா., தட்சிணாமூர்த்தி அல்லது சிவன்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. {The book-"GURUKULS AT A GLANCE" by S.P.Arya (Founder of ARYA BROTHERS CARE) and WWW.GURUKULSWORLD.COM as well as WWW.ARYABROTHERS.COM)Cheong Cheng, Cheong Cheng Yin (2002). Subject Teaching and Teacher Education in the New Century: Research and Innovation. Springer. pp. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-949-060-9. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. A Sanskrit-English Dictionary by Sir மானியர் வில்லியம்ஸ் (Oxford: Oxford University Press, 1899), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-864308-X. Page 587, column a.
  3. Srimad Bhagavatam 7.12.1, A.C. Bhaktivedanta Swami Prabhupada, The Bhaktivedanta Book Trust, 1976, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-912776-87-0
  4. Padoux, André. "The Tantric Guru" in White, David Gordon (ed. 2000). Tantra in Practice, p. 44. Princeton, NJ: Princeton University Press.
  5. 12.6.47-60
  6. Mahanirvana Tantra

இதனையும் காண்க

[தொகு]