உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்செலி சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தற்கால கிழக்கு குஜராத்தின், பிரித்தானிய இந்தியாவின் ரேவா கந்தா முகமையின் மேல்புறத்தில் மெரூன் நிறத்தில் சஞ்செலி சமஸ்தானத்தின் அமைவிடம்

சஞ்செலி சமஸ்தானம், (Sanjeli state) (இந்தி: संजेली), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தகோத் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு

[தொகு]

இராஜபுத்திர குலத்தினர் நிறுவிய சஞ்செலி இராச்சியம் பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சஞ்செலி இராச்சியத்தினர் ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் செயல்பட்டது. சஞ்செலி சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சஞ்செலி சமஸ்தானப் பகுதிகள் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்தில் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 160 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சஞ்செலி சமஸ்தானப் பகுதிகள் புதிய குஜராத் மாநிலத்தின் தகோத் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]