சிவபோக சாரம்
சிவபோக சாரம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தரால் எழுதப்பட்ட நூல்களில் பலராலும் பெரிதும் அறிமுகமானது.
இந்த நூல் 139 வெண்பாக்களைக் கொண்டது. இந்த நூல் தரும் கருத்துகளில் சில: [1]
- சாத்திரம் படிப்பதும், துதிப்பதும், பூசிப்பதும் பயன்ற்றவை [2]
- திருமுறை ஓதிக் கருத்தில் கொள் [3]
- சில தலங்களைச் சொன்னாலே முத்தி [4]
- போலி குருமார்கள் [5]
- புலன் பொய் [6]
- நீதி [7] [8]
- தெரியாப் பரப்பிரமம் [9]
- சட சித்து [10]
நூல் பதிப்பு
[தொகு]- வி. சுந்தர முதலியார் பதிப்பு 1890
- ரிப்பன் பிரசு பதிப்பு 1923
- தரும்புர ஆதீனப் பதிப்பு - பல முறை
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ கருத்துப் பாடல்கள் பொருள் விளங்குமாறு சொற்பிரிப்புச் செய்யப்பட்டுள்ளன.
- ↑
உரை இழந்தால், உன்னும் உணர்வு இழந்தால், மாயைத்
திரை இழந்தால் காண்கின்ற தேவை – வரை பெருக
வாசிப்பதும், நாவால் வாழ்த்துவதும், நாடகமாய்ப்
சூசிப்பதும், சுத்தப் பொய். (பாடல் 13) - ↑
ஆசையறாய், பாசம் விடாய், ஆன சிவ பூசை பண்ணாய்,
நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் – சீசீ
சினமே தவிராய், திருமுறைகள் ஓதாய்
மனமே! உனக்கென்ன வாய். (பாடல் 138) - ↑
தில்லைவனம், காசி, திருவாரூர், மாயூரம்,
முல்லைவனம், கூடல், முதுகுன்றம், - நெல்லைகளர்
காஞ்சி, கழுக்குன்றம், மறைக்காடு, அருணை, காளத்தி,
வாஞ்சியம், என். முத்தி வரும். (பாடல் 139) - ↑
தன்னை அறியார், தலைவன்தனை அறியார்
முன்னை வினையின் முடிவு அறியார் – பின்னைக்
‘குருக்கள்’ என்னும் பேர் இட்டுக்கொள்ளுவர்கள், ஐயோ
தெருக்கள் தனிலை சிலர். (பாடல் 126) - ↑
துரத்தி உன்னை ஆசை தொடராமல் என்றும்
விரத்தியினால் ஆங்கு அவற்றை விட்டுப் – பரத்தில் அன்பு
செய்யடா செய்யடா, சேரப்பா பஞ்சம் எல்லாம்
பொய்யடா பொய்யடா பொய். (பாடல் 107) - ↑
நின்னை மதிக்கின் நினக்கு அதிகர் செல்வம் நினை
நின்னை வறிஞன் என நீ நினைமின் – நின்னின்
சிறியார் வறுமை நினை, சிந்தை உக என்றும்
குறியா இடும்பை துக்கம் கோள். (பாடல் 120) - ↑
பரபரக்க வேண்டாம், பலகாலும் சொன்னேன்
வர வரக் கண்டு ஆராய் மனமே – ஒருவருக்கும்
தீங்கு நினையாதே, செய்ந்நன்றி குன்றாதே
ஏங்கி இளையாது இரு. (பாடல் 132) - ↑
ஆர்க்கும் தெரியாத ஆனந்த இன்ப வெள்ளம்
மேற்கொண்டு கொண்டு விடுகுதில்லை – யார்க்கும்
தெரியாப் பரப்பிரமம் சேர்த்தாய் உனக்குச்
சரி யார், சிதம்பர நாதா. (பாடல் 43) - ↑
ஆர் பெரியர், ஆர் சிறியர், ஆர் உறவர், ஆர் பகைஞர்,
சீர் பெரியர் ஆனந்த சிற் சொரூபர் - பேர் பெரியர்
எங்கெங்கும் தாமாய் இருந்து, சட சித்து அனைத்தும்
அங்கங்கு இயற்றுவது ஆனால். (பாடல் 96)