உள்ளடக்கத்துக்குச் செல்

தர்மகீர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்மகீர்த்தி (Dharmakīrti) (கி பி 7-ஆம் நூற்றாண்டு) இந்திய பௌத்த அறிஞர். இந்திய தத்துவ தர்க்கவியல் தர்சனத்தை அறிமுகப்படுத்திய பௌத்த துறவியாவார். மேலும் துவக்ககால பௌத்த அணுவாதக் கோட்பாட்டை கொள்கையை நிறுவிய கொள்கையாளர். இவரது பௌத்த அணுவாதக் கோட்பாட்டின் படி பொருட்கள் எல்லாம் கண நேரம் இருப்பதாக கருதப்படுகிறது. இவர் எழுதிய நூல் ஹேது-பிந்து ஆகும்.

தொன்ம வரலாறு

[தொகு]

கி பி ஏழாம் நூற்றாண்டில் சுமத்திரா தீவில் பிறந்த தர்மகீர்த்தி சைலேந்திரன் என்ற பெயரில் இளவரசராக வாழ்ந்தவர்.[1]ஸ்ரீவிஜயம் பகுதியில் அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கிய இவர் பின்னர் இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த இயல் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பௌத்த சமய தத்துவங்களில் சிறந்து விளங்கியவரும், காஞ்சிபுரத்தில் பிறந்தவரும், பௌத்த சமய துவக்க கால தர்க்க தத்துவ அறிஞராகவும் விளங்கிய திக்நாகரின் புகழ் பெற்ற பௌத்த தத்துவங்களுக்கு மீள் விளக்க உரைகள் எழுதியவர். இவரை எதிர்த்து வாதிட்ட குமரிலபட்டரை நாலந்தா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றியவர்.

படைப்புகள்

[தொகு]
  • The Seven Treatises on Valid Cognition:
    • Saṃbandhaparikṣhāvrtti (Analysis of Relations)
    • Pramāṇaviniścaya (Ascertainment of Valid Cognition)
    • Pramāṇavārttikakārika (Commentary on Dignaga's 'Compendium of Valid Cognition')
    • Nyāyabinduprakaraṇa (Drop of Reasoning)
    • Hetubindunāmaprakaraṇa (Drop of Reasons)
    • Saṃtānāntarasiddhināmaprakaraṇa (Proof of Others' Continuums)
    • Vādanyāyanāmaprakaraṇa (Reasoning for Debate)

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. P. 487 Buddhism: art, architecture, literature & philosophy, Volume 1

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Dharmakirti entry by Tom Tillemans in the Stanford Encyclopedia of Philosophy