உள்ளடக்கத்துக்குச் செல்

தர்மசாத்திரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்மசாத்திரங்கள் வடமொழி இந்து இலக்கியங்களில் தர்மம் பற்றி பேசுகின்றன. வேதங்களில் தர்மத்தின் மூலமாய் அமைந்த சுருதிகளை அடிப்படையாகக் கொண்டு சமயக் கடமை, தத்துவங்களைப் பற்றிப் பேசுவதற்கு எழுந்தவையே தர்மசாத்திரங்கள் இவை மனித வாழ்வுக்குரிய நீதி நியாயங்களை விதிகளாக விளக்கும் நூல் என்றும் பொருள்கொள்ளப்படுகின்றன.

இவற்றின் தோற்றம் பற்றிய காலவரையரையில் தெளிவான குறிப்புக்கள் இல்லாதபோதிலும், குப்தர் காலத்திலேயே அதிகமானவை தோன்றின.

தர்மசாத்திரங்களுள் குறிப்பிடத்தக்கவை:

  1. மனுதரும சாத்திரம்
  2. ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்
  3. விதுர நீதி
  4. ஆசாரக்கோவை[1]
  5. கௌதம சூத்திரம்
  6. விஷ்ணு தர்ம சூத்திரம்
  7. போதாயன தர்ம சூத்திரம்
  8. நாரத ஸ்மிருதி
  9. சுக்கிர நீதி
  10. காமாண்டக நீதி சாரம்
  11. பிரகஸ்பதி ஸ்மிருதி
  12. ஆங்கிரச ஸ்மிருதி
  13. வியாச ஸ்மிருதி
  14. தக்ஷ ஸ்மிருதி
  15. யாக்யவல்க்கிய ஸ்மிருதி
  16. சம்வர்த்த ஸ்மிருதி
  17. அத்ரி ஸ்மிருதி
  18. காத்யாயன ஸ்மிருதி
  19. எம ஸ்மிருதி
  20. வசிஷ்ட தர்ம சூத்திரம்
  21. சங்க ஸ்மிருதி
  22. லகு ஹாரித ஸ்மிருதி

இவை எழுதியவர்களின் பெயர்களாலேயே வழங்கப்பெறுகின்றன.

இவை பிரதானமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  1. ஆசார காண்டம்
  2. வியவகார காண்டம்
  3. பிராயச்சித்த காண்டம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.tamilvu.org/library/l2H00/html/l2H00mga.htm

வெளி இணைப்புகள்

[தொகு]